முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து
வி. அண்ணாமலை முதலியார்
இருளினின் றெனையே7 / 10
இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து · வி. அண்ணாமலை முதலியார்

இருளினின் றெனையே

7எழுசீர் விருத்தம்✓
இருளினின் றெனையே யெடுத்தநாள் முதலாய்
இதுவரை உறுபிறப் பிறப்பில்
உருளெனச் சுழன்ற கடையவன் உய்ய
உயர்கதி அளித்திடும் இளையான்
திருமகள் மருகன் தீந்தமிழ்ச் செல்வன்
திருப்புகழ் கேட்டிடக் கூவாய்
மருமலி கடப்பந் தார்புனை மார்ப
வருகெனக் கூவிடாய் குயிலே.