முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து
வி. அண்ணாமலை முதலியார்
கருத்தினுட் கருத்தாய்2 / 10
இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து · வி. அண்ணாமலை முதலியார்

கருத்தினுட் கருத்தாய்

2எழுசீர் விருத்தம்✓
கருத்தினுட் கருத்தாய் இருந்திடும் கந்தன்
கார்பொழி இரத்தின கிரியில்
இருந்துநல் லடியார்க் கருள்மழை பொழிவோய்
இருஞ்சுடர்க் கொழுந்தென வந்த
பெரும்பொரு ளாய பரசிவக் கன்றைப்
பேதையேன் பிறவியின் மூலக்
கருவினை அழிக்கக் கூவிடாய் குயிலே
கடந்திடப் பிறவியைக் கழித்தே.