முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து
வி. அண்ணாமலை முதலியார்
எப்பிழை செயினும்8 / 10
இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து · வி. அண்ணாமலை முதலியார்

எப்பிழை செயினும்

8எழுசீர் விருத்தம்✓
எப்பிழை செயினும் பொறுத்தெனை ஆளும்
எந்தையை எனதுளத் துறைந்தே
துப்பறச் செய்யும் தூயவொண் சுடரைச்
சுரர்களின் இன்னலைத் துடைத்தே
ஒப்பறும் இரத்ன கிரியினில் ஓங்கும்
ஒப்பிலா ஒண்பொருட் சேயைத்
தப்பற வரநீ கூவிடாய் குயிலே
தமியனேன் உய்ந்திடக் குளிர்ந்தே.