முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து
வி. அண்ணாமலை முதலியார்
கடிமலர் நெடுவாள்1 / 10
இரத்தினகிரிப் பாலமுருகன் குயிற்பத்து · வி. அண்ணாமலை முதலியார்

கடிமலர் நெடுவாள்

1எழுசீர் விருத்தம்✓
கடிமலர் நெடுவாள் கண்ணுமை குமரன்
கரும்பொழி லரத்ந கிரியில்
வடிவுரு தெய்வ குஞ்சரி யுடனே
வள்ளிநா யகிமணம் புரிந்தோன்
அடியினை என்றன் சிரத்தணி செய்ய
அணிமயில் அமர்ந்துநற் சேவற்
கொடியுடன் வரநீ கூவிடாய் குயிலே
குவலயம் கேட்டிடக் குளிர்ந்தே.