முருகன் App
கந்தனே என் சிந்தனை
க. வீரசத்தி
அருளுக்கேக்கம்!7 / 10
கந்தனே என் சிந்தனை · க. வீரசத்தி

அருளுக்கேக்கம்!

பல்லவி✓
கந்தா கடைக்கணிப்பாய்—நல்லைக்
கந்தா கடைக்கணிப்பாய்!
அனுபல்லவி✓
அல்லும் பகலும் ஐயா உன்றன்
அருளுக் கேங்கி அலைகின் றேனே! (கந்)
சரணம்✓
கல்வி காசு காதல் நெஞ்சம்—செய்யும்
காரி யத்தில் வெற்றி வாகை—மிக
நல்ல நல்ல மனித ரோடு—பண்பு
நாளும் ஓங்கும் பிரிய நட்பு! (கந்)
7✓
பாவங் கண்டு பதைக்கும் தன்மை—இந்தப்
பாரை யாளும் படிப்பு வன்மை—பசி
தாகம் மிக்க ஏழை கட்கு—நிதம்
தானஞ் செய்யும் தகுதி நன்மை. (கந்)