முருகன் App
கந்தனே என் சிந்தனை
க. வீரசத்தி
கைலாச வாகனம் காணீர்!6 / 10
கந்தனே என் சிந்தனை · க. வீரசத்தி

கைலாச வாகனம் காணீர்!

இராகம்: கிஸ்தோளம் தாளம்: ஆதி
பல்லவி✓
கைலாச வாகனம் காணீர்—நல்லைக்
கந்தன் பவனிவரும் (கைலா)
அனுபல்லவி✓
கைலாசமே இது கைலாயமே
மயில் வேலவன் மலர்தாங்கிடும்—பாத
மலர்தாங்கிடும் (கைலா)
சரணம்✓
கோடானு கோடிமக்கள்
கும்பிடும் நல்லைக் கந்தன்— மனம்
நம்பிடும் நல்லைக் கந்தன்
✓
சோடான வள்ளியோடு
சுந்தரி யானை யோடு—இன்பச்
சுற்றுலாப் பவனி வரும் (கைலா)
✓
கண்ணா யிரம்வேண்டும் ஆஹா
கந்தன் திருவருள் மாட்சி!
கண்ணடங் காத்திருக் காட்சி!
6✓
விண்ணாணஞ் செய்நல்லைக் கந்தன்
வேண்டிய தந்திட நல்லை—திரு
வீதியில் ஓலக்கஞ் செய்யும் (கைலா)