முருகன் App
கந்தனே என் சிந்தனை
க. வீரசத்தி
பகுதி 11 / 10
கந்தனே என் சிந்தனை · க. வீரசத்தி

பகுதி 1

இராகம்: நாட்டை தாளம்: ஆதி
பல்லவி✓
கந்தனே என் சிந்தனை!-நல்லைக்
கந்தனே என் வந்தனை!
அனுபல்லவி✓
அல்லோல கல்லோலம் ஆகிடும் போதும்
ஆனந்த பரவசம் அலைமோதும் போதும் (கந்)
1சரணம்✓
அமுதக் கலசத்தை அருள்ஒழுகுந் தவக்கனியை
ஆனந்தப் பெருந்தேனை அணையாத மணிவிளக்கை
நதியின் பெருக்கான நான்மறையின் அருட்பிழிவை
நல்லூரிற் கண்டு கொண்டோம் நமக்கேது குறைநெஞ்சே! (கந்)