முருகன் App
கந்தனே என் சிந்தனை
க. வீரசத்தி
கோட்டுப் பூவள்ளி9 / 10
கந்தனே என் சிந்தனை · க. வீரசத்தி

கோட்டுப் பூவள்ளி

இராகம்: சண்முகப்பிரியா தாளம்: ஆதி
பல்லவி✓
வேட்டுவ ரில்லாத நேரத்திலே—வள்ளி
வீட்டுக்கு நீசென்ற காரணமென்? (வேட்டுவ)
அனுபல்லவி✓
கோட்டுப்பூ வள்ளியைக் கொள்ளைகொண்ட செய்தி
கும்பிடுந் தெய்வத்திற் கேற்புடைத்தோ?—நாம்
கும்பிடுந் தெய்வத்திற் கேற்புடைத்தோ? (வேட்டுவ)
9சரணம்✓
முற்றத்து மல்லிகை மொட்டுச் சிரித்திடில்
முருகா வுனக்கென்ன மோகம் அதில்
சுற்றத் தவரிலா நேரத்தி லேகாதல்
சுகித்திட வள்ளியைக் கிள்ளு வதோ? (வேட்டுவ)