முருகன் App
கந்தனே என் சிந்தனை
க. வீரசத்தி
குமரா ஒருதரம் வாராயோ?2 / 10
கந்தனே என் சிந்தனை · க. வீரசத்தி

குமரா ஒருதரம் வாராயோ?

இராகம்: காம்போதி தாளம்: ஆதி
பல்லவி✓
குமரா ஒருதரம் வாராயோ-சிவக்
குழந்தாய் ஒருமுத்தம் தாராயோ?
அனுபல்லவி✓
அமரா முருகா அழகா குகனே
அம்பிகை பெற்ற ஆசைக் கனியே (குமரா)
2சரணம்✓
நல்லைக் கோபுர உச்சியிலே-எந்
நாளுந் தவழும் பொற்சிலையே-தினைக்
கொல்லைக் குறத்தியின் கள்ளங்களில்-நிதம்
கொஞ்சும் செந்தமிழ்ப் பாலகனே! (குமரா)