முருகன் App
கந்தனே என் சிந்தனை
க. வீரசத்தி
நல்லூர் என் தாயகம்!8 / 10
கந்தனே என் சிந்தனை · க. வீரசத்தி

நல்லூர் என் தாயகம்!

பல்லவி✓
நல்லூர் முருகன் கோயிலே—என்
நல்வாழ் வுக்கொரு தாயகம்! (நல்)
அனுபல்லவி✓
தொல்லைப் பிறவி அல்லல் களைந்து
தூய தமிழ்ப்புகழ் நாதம் அளித்திடும் (நல்)
சரணம்✓
கந்தா நல்லைக் கந்தா குமரா
கலியுக வரதா முருகா என்றால்
சிந்தா குலமோ சிறிதும் இல்லை
சீருடன் பூசனைச் செல்வமும் உண்டு! (நல்)
8✓
சரவண பவனனில் சாவது இல்லை
சரவண பவனனில் சரித்திரம் உண்டு
சரவண பவனனில் சஞ்சலம் இல்லை
சரவண பவனனில் சாதனை உண்டு! (நல்)