முருகன் App
கந்தனே என் சிந்தனை
க. வீரசத்தி
தேடிக் கண்டு கொண்டேன்!4 / 10
கந்தனே என் சிந்தனை · க. வீரசத்தி

தேடிக் கண்டு கொண்டேன்!

இராகம்: தோடி தாளம்: ஆதி
பல்லவி✓
தேடிக் கண்டு கொண்டேன்—நல்லூர்த்
தேவாதி தேவனத் தீன தயாளனை என்னுள்ளே(தேடி)
அனுபல்லவி✓
சோடி மயில்களுடன் தோகை மயிலில்வரும்
சுந்தர வேலனைச் செந்தமிழ்ப் பாலனை (தேடி)
சரணம்✓
முருகா! உன்னருட் சோதியில் என்றும்நான்
மூழ்கிடல் வேண்டும்-ஆர
முழுகிடல் வேண்டும்!
✓
கருகா வினைகளெலாங் கருகிக் கருகிச்
சருகாகிட வேண்டும்—முத்திக்(கு)
எருவாகிட வேண்டும்!
✓
குமரா வுன்னருட் சன்னிதி என்றும்நான்
குழைந்திட வேண்டும்—உன்னருளை
அளைந்திட வேண்டும்!
✓
குமரா குமராவெனக் கூவிக் கூவியுள்ளம்
உருகிடல் வேண்டும்—உன்பாசம்
பெருகிடல் வேண்டும்!
4✓
அழகா வுன்னெழிற் கோலத்தை யள்ளியள்ளி
அருந்திடல் வேண்டும்—எஞ்ஞானம்
திருந்திடல் வேண்டும்! (தேடி)