முருகன் App
கந்தனே என் சிந்தனை
க. வீரசத்தி
மங்கள சோபனம்10 / 10
கந்தனே என் சிந்தனை · க. வீரசத்தி

மங்கள சோபனம்

பல்லவி✓
தேவர் சிறை மீட்டாய்—என்மீதும் உன்
தெய்வீகத்தைக் காட்டாய்! (தேவர்)
அனுபல்லவி✓
மதியோ விதியோ கெதியொன் றில்லேன்
மணவா மலராய் முருகா திரிவேன்! (தேவர்)
10சரணம்✓
நல்லைக் கோயில் நடுநா யகமாய்
நளிரும் வேதக் கொடியிற் பூத்த
முல்லைச் சிரிப்பின் கொல்லைக் குறத்தி
முருகா மங்கள சோபனம் அருள்வாய்! (தேவர்)