முருகன் App
கந்தனே என் சிந்தனை
க. வீரசத்தி
வாரி வழங்கிடையா!5 / 10
கந்தனே என் சிந்தனை · க. வீரசத்தி

வாரி வழங்கிடையா!

இராகம்: மோகனம் தாளம்: ஆதி
பல்லவி✓
வாரி வழங்கிடையா—எல்லோர்க்கும் (வாரி)
அனுபல்லவி✓
ஆராத இன்பத் திருவினை அன்புடன் (வாரி)
சரணம்✓
ஆவலோ டோடிவந் தையனே உன்னிழல்
அழுதழு(து) ஆனந்தக் கண்ணீர் சிந்திப்
பேயெனப் பித்தெனப் பரவச மாகியே
பிச்சை வேண்டுகின்றார் (அருட்)பிச்சை வேண்டுகின்றார் (வாரி)
5✓
கண்கண்ட தெய்வம் காத்திடும் நமையெனக்
கண்ணீர் சிந்துகின்றார் உளம் வெம்புகின்றார்
புண்கொண்ட வாழ்வு பொடிப்பொடி யாகிட
புண்ணிய னேயருள் தந்திடுவாய் (ஆட்) கொண்டிடுவாய்! (வாரி)