முருகன் App
கந்தனே என் சிந்தனை
க. வீரசத்தி
இவனோ சொல்லடி முருகன்3 / 10
கந்தனே என் சிந்தனை · க. வீரசத்தி

இவனோ சொல்லடி முருகன்

இராகம்: காம்போதி தாளம்: ஆதி
பல்லவி✓
இவனோ சொல்லடி முருகன்-எனை
ஏய்த்து வருந்தமிழ் விரகன் (இவனோ)
அனுபல்லவி✓
நல்லூரில் வந்தெனைக் கண்டு
நல்லதைக் கேளென்று சொன்னான் (இவனோ)
சரணம்✓
மஞ்சத்தி லேகொஞ்சும் விழிகள்-நல்லை
மாமயில் வேலவன் விழிகள்-என்
நெஞ்சத்தி லோர்கணம் பாய்ந்தால்-ஐயா
நிமிர்ந்திடு மேயுளக் கோணல்! (இவனோ)
3✓
எத்தனை நாளெனை ஏய்ப்பான்-என்
காதலை இப்படித் தேய்ப்பான்-தினம்
பத்திமை செய்திடும் என்னைக்-கடைக்கண்
பாரா திருந்திடல் பாவம்!
— முருகா உனக்குப் பாவம்—பெரும்பாவம்! (இவனோ)