முருகன் App
கதிர்காம வேலர் திருவருட்பா
சிவஞான தேசிக சுவாமிகள்
அஞ்சுமுக னுன்பிதா8 / 10
கதிர்காம வேலர் திருவருட்பா · சிவஞான தேசிக சுவாமிகள்

அஞ்சுமுக னுன்பிதா

8✓
அஞ்சுமுக னுன்பிதா இமயமா மலையுதவும்
அமலைநின் னன்னையாகும்
அண்ணன்முன் கயமுகத் தசுரனுயிர் வீட்டியரு
ளைங்கரக் கடவுள்நெடிய
மஞ்சுவண் ணன்மாமனுன் மைத்துனன் மன்மதன்
மலரினய னுன்சீடனாம்
வானவர்க ளுன்னடிய ராயிரத் தெட்டண்ட
மன்னவ னுன்வாகனம்
கொஞ்சமடி யேனையுன் னடிமையென் றோதியே
குறுமுனிக் குத்தமிழருள்
குமரகுரு பரசுவாமி யுன்னடிய ரடியார்கள்
குற்றேவல் செய்யவருள்வாய்
கஞ்சமலர் முகவள்ளி மணவாள வெங்குங்
கவின்றெய்வ யானைகணவா
கங்கையுமை பாலனே கதிர்காம வேலனே
கந்தசுவாமிக் கடவுளே.