முருகன் App
கதிர்காம வேலர் திருவருட்பா
சிவஞான தேசிக சுவாமிகள்
திருமக ளுகந்தநெடு4 / 10
கதிர்காம வேலர் திருவருட்பா · சிவஞான தேசிக சுவாமிகள்

திருமக ளுகந்தநெடு

4✓
திருமக ளுகந்தநெடு மால்சக் கரப்படை
தேவேந்திரன் வச்சிரம்
சிவன்மழுப் படையூழி யனலோடு காற்றெனச்
செட்டிநீவிட்ட நெடுவேல்
ஒருகணத்தே வடவையும் மதியு மிரவியு
மொளிக்கவொரு கோடியாகி
உக்ரப்ர சண்டரவி யெனவோடி யண்டங்க
ளோராயிரத் தெட்டினும்
வருசூர பன்மனும் வஞ்சக்ர வுஞ்சகிரி
வயிறொடுபெருந் தாரகன்
மார்பைப் பிளந்ததென் றாலடிய னேன்மிக
வருந்தவே நின்றுநோய் செய்
கருமமலை யைப்பொடி படுத்தலரி தோவுனது
கைவேலினுக் கருளுவாய்
கங்கையுமை பாலனே கதிர்காம வேலனே
கந்தசுவாமிக் கடவுளே.