முருகன் App
கதிர்காம வேலர் திருவருட்பா
சிவஞான தேசிக சுவாமிகள்
அரிமருக முருகசுர5 / 10
கதிர்காம வேலர் திருவருட்பா · சிவஞான தேசிக சுவாமிகள்

அரிமருக முருகசுர

5✓
அரிமருக முருகசுர வணபவா வெனுமடிய
ரச்சந்தவிர்த் தருண்மயில்
ஆயிரத் தெட்டண்ட முட்டையென வேயணைத்
தசுரரைக் கொன்றிடுமயில்
பெரியநவ கண்டமொடு மேருகிரி குலகிரி
பெருங்கடல்க ளுள்ளடக்கும்
பெருஞ்சக்ர வாளகிரி யரைநொடியி னுக்குளே
பிரதக்ஷிணஞ் செயுமயில்
விரிபணா டவியுரக முங்கோடி யண்டமும்
விழுங்கியே பின்னுமிழ்மயில்
வேலநீ யேறுமயில் வெகுபராக் கிரமமெனில்
வினையனேன் மாயையென்னுங்
கரியபாம் பைப்பொடி படுத்தலரி தோவுன்
லாபமயிலுக் கருளுவாய்
கங்கையுமை பாலனே கதிர்காம வேலனே
கந்தசுவாமிக் கடவுளே.