முருகன் App
கதிர்காம வேலர் திருவருட்பா
சிவஞான தேசிக சுவாமிகள்
ஆருக்கு வந்திடு7 / 10
கதிர்காம வேலர் திருவருட்பா · சிவஞான தேசிக சுவாமிகள்

ஆருக்கு வந்திடு

7✓
ஆருக்கு வந்திடு விருந்தோவி தென்றுநீ
யறியாது போலிருந்தால்
அடியேனை யஞ்சலென் பார்களா ரிங்குனக்
கடிமைமே லன்பில்லையோ
ஊருக்கு வந்தவ னொருத்திபிள் ளைக்குமுலை
யூட்டுவளோ சொல்லுவாய்
உனக்கடிமை யாகியும் உன்புகழ்கள் பாடியுமென்
உயிர்வருந்திட னீதியோ
பாருக்கு ளேகலி யுகத்திலே கண்கண்ட
பரதெய்வ மென்றேயுனைப்
பாருளோர் மெச்சுமது மெய்யாகு மிப்போது
பாவியேற் கருள்புரிந்தால்
காருக்கு மதிகவர மழைபொழியு மீராறு
கரகமல சர்வஞ்ஞனே
கங்கையுமை பாலனே கதிர்காம வேலனே
கந்தசுவாமிக் கடவுளே.