முருகன் App
கதிர்காம வேலர் திருவருட்பா
சிவஞான தேசிக சுவாமிகள்
உலகடங் கலுமருண1 / 10
கதிர்காம வேலர் திருவருட்பா · சிவஞான தேசிக சுவாமிகள்

உலகடங் கலுமருண

1✓
உலகடங் கலுமருண வெயிலுமிழு முபயரவி
ஒருகோடி நிகர்மேனியும்
உமைமுலைப் பாலொழுகு கடைவாயும் இளநகையும்
உச்சியிற் றிகழ்கொண்டையும்
திலதமுஞ் சுட்டியுந் திருநீறும் அழகுபொழி
திருநுதலும் அருள்மாரிசேர்
திருநயன முங்கருணை வதனமும் அம்மைதரு
திருமுலைப் பாற்கிண்ணமும்
இலகுசெங் கைம்மலரும் அஞ்சலெனு மொருசரமும்
இருசெவியும் உபயரவியாம்
இறுகுண்ட லங்களும் பாததா மரைகளும்
இலங்குங் குழந்தைவடிவாய்க்
கலகலென வேசிலம் படியனேன் காணநீ
காசிதனில் ஓடிவருவாய்
கங்கையுமை பாலனே கதிர்காம வேலனே
கந்தசுவாமிக் கடவுளே.