முருகன் App
கதிர்காம வேலர் திருவருட்பா
சிவஞான தேசிக சுவாமிகள்
அடையாள மாம்பரங்10 / 10
கதிர்காம வேலர் திருவருட்பா · சிவஞான தேசிக சுவாமிகள்

அடையாள மாம்பரங்

10✓
அடையாள மாம்பரங் குன்றுமுத லாறுபதி
யம்பலங் காசிகமலை
அணிகோண மாமலை யாதிகே தீச்சரம்
அருள்சம்பு குண்டமாதி
இடைவிடா தேநிறைந் தோமா கிலும்புவி
யெறும்பாதி காசிமேவி
இறந்ததென் றான்முத்தி செய்துமென் றருள்செய்த
எந்தைமொழி நம்புதலினால்
திடமுடைய பத்தியில் லாதவெளி யேனுஞ்
சிவானந்த நாதனென்னிற்
சிவநாம வாக்கியஞ் சென்னிமேற் சூட்டலாற்
சிவகாசி தனிலுறைதலால்
கடையேனை யும்மடிமை யாக்கத் தகுந்தகுங்
கருணாநிதித் தெய்வமே
கங்கையுமை பாலனே கதிர்காம வேலனே
கந்தசுவாமிக் கடவுளே.