முருகன் App
கதிர்காம வேலர் திருவருட்பா
சிவஞான தேசிக சுவாமிகள்
தற்பரஞ் சோதியே2 / 10
கதிர்காம வேலர் திருவருட்பா · சிவஞான தேசிக சுவாமிகள்

தற்பரஞ் சோதியே

2✓
தற்பரஞ் சோதியே பூரணப் பிரமமே
சதுமுகப் பிரமாதியோர்
சதுர்மறையும் அடிமுடிகள் காணாம லேதேடு
சச்சிதா னந்தசிவமே
அற்புத னந்தவரு ளமுதமழை மேகமே
யனந்தகல் யாணகுணமாம்
அகண்டபர வெளியே யென்னுயிர்க் குயிரே
யருட்கருணை மேருகிரியே
சிற்பரந் தந்தசிந் தாமணிக் குவியலே
செந்தேன் நெடுஞ்சலதியே
தெள்ளமுத மேசன்ம மாற்றுதற் கடியார்கள்
தேடவரு மருமருந்தே
கற்பகச் சோலையே யென்றடிய னேனுனைக்
கவிமாரி சொரியவருள்வாய்
கங்கையுமை பாலனே கதிர்காம வேலனே
கந்தசுவாமிக் கடவுளே.