முருகன் App
கதிர்காம வேலர் திருவருட்பா
சிவஞான தேசிக சுவாமிகள்
உன்மலர்ப் பாதத்தின்9 / 10
கதிர்காம வேலர் திருவருட்பா · சிவஞான தேசிக சுவாமிகள்

உன்மலர்ப் பாதத்தின்

9✓
உன்மலர்ப் பாதத்தின் மகிமையு மேன்மையு
முமாபதி புயங்களறியும்
ஓங்குகலை ஞானமு மாறுகுண பேதமும்
ஒருநான் முகத்துவேதன்
றன்முடி யறிந்திடுங் கரபலமும் வீரமுந்
தகுசூர னங்கையறியும்
தருகடைக் கண்ணருளின் ஞானமுந் தீக்கையுந்
தமிழ்முனிவ னோக்கமறியும்
மன்மத னுருவறியு நித்தியமு மழகுமெய்
வாழ்வுமா நந்தசுகமும்
மகிழ்வள்ளி தெய்வயா னையுமறிவ ரடியருன்
மகிமையெல் லாமறிவரென்
கன்மன மறிந்துருக மாட்டுமோ வறியக்
கடாட்சம்வைத் தருள்முருகனே
கங்கையுமை பாலனே கதிர்காம வேலனே
கந்தசுவாமிக் கடவுளே.