முருகன் App
கதிர்காம வேலர் திருவருட்பா
சிவஞான தேசிக சுவாமிகள்
தருங்கற்ப காடவியி6 / 10
கதிர்காம வேலர் திருவருட்பா · சிவஞான தேசிக சுவாமிகள்

தருங்கற்ப காடவியி

6✓
தருங்கற்ப காடவியி லிந்த்ராதி வானவர்கள்
தளரச்ச மாங்கங்குலுஞ்
சக்ராயு தக்கடவு ளச்சமிகு கங்குலுஞ்
சதுமுகத்தோ னச்சமாம்
பெருங்கங்கு லும்மவுண ராங்கங்குலுந் துயர்செய்
பெரியபிர பஞ்சத்துளே
பிரியாத கங்குலுமுன் னடியரா யானோர்கள்
பிறவிக்கு மூலமான
அருங்கங்கு லும்விடிய வேகடுங் குரலையிடும்
அதிபலப ராக்கிரமமாம்
அருஞ்சிறைச் சேவலுன் கைத்துவச மாமென்னி
லடியனா ணவதிமிரமாம்
கருங்கங்குல் விடியவே கூவுதற் கரிதோசொல்
காலாயு தத்தினுக்குக்
கங்கையுமை பாலனே கதிர்காம வேலனே
கந்தசுவாமிக் கடவுளே.