முருகன் App
கதிர்காம வேலர் திருவருட்பா
சிவஞான தேசிக சுவாமிகள்
சகலபுவ னம்பணி3 / 10
கதிர்காம வேலர் திருவருட்பா · சிவஞான தேசிக சுவாமிகள்

சகலபுவ னம்பணி

✓
சகலபுவ னம்பணி சதாசிவற் கோர்குடிலை
தான்மொழிந் தருள்குருக்கள்
சதுமுகப் பிரமாவை முடியினிற் குட்டியே
தான்சிறை யிடுங்குருக்கள்
அகிலசக தண்டகோ டிகளெலாம் பின்படைத்
தருள்தந்தி டுங்குருக்கள்
அகத்திய மகாமுனிக் கருள்செய்து சடைமுடியி
லடிவைத்திடுங் குருக்கள்
பகருமுப் பத்துமுக் கோடிவா னவர்மகுட
பந்திபணியும் குருக்கள்
பதினெண் புராணமு முனிவர்பணி செய்யப்
பகர்ந்திடு குருக்களின்நான்
ககனமா ருதமென்ன வந்துவித மாகக்
கலந்திடச் செய்தலரிதோ
கங்கையுமை பாலனே கதிர்காம வேலனே
கந்தசுவாமிக் கடவுளே.