முருகன் App
கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத்தமிழ்
தவத்திரு சிதம்பர சுவாமிகள்
அம்புலிப்பருவம்7 / 10
கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத்தமிழ் · தவத்திரு சிதம்பர சுவாமிகள்

அம்புலிப்பருவம்

62✓
இச்சமயம் நற்சமய மெச்சமய மாகிலு
மிதற்கீடு சொல்லப் படா
தித்தனை பகற்போது தொட்டபகை பட்டகதை
யெல்லாம் பறந்தோ டிடும்
நச்சர வுடற்குளே புக்கவிக் கக்கக்க
நாடுமோ கூடு மோநீ
நான்சொன் னபடிகேள்மெய் தானின்னம் விண்ணுலவ
ஞாயமோ கீழிறங்கு
பச்சவயி டூரிய பவளச்சர மணிக்ரீட
பஞ்சாட் சரப்ர சாதப்
பவணாச லத்திலுயர் தவயோக பக்தசொற்
பான்மைக் கினித்த குமரன்
அர்ச்சனை மகானெங்க ளாறுமுக நாதனுட
னம்புலி யாட வாவே
அகிலாண்டவல்லிசுத னெனையாண்ட செல்வனுட
னம்புலி யாட வாவே.
63✓
கருமொய்த்த கொண்மூ கொலாமிது வெனஸ்லேடை
காட்டக் குழற்றோ கையர்
கடைவிழி பறந்தநஞ் சிற்பயந் தோமனக்
கள்ளங் கிடைத்த தெற்றோ
பெருமைக் குடன்பட்ட தன்றிமுன் னோர்சொன்ன
பேச்சுக் குடன்பட் டவோ
பித்தன் சடாமுடி வசிக்குந் தயாளமும்
பெட்பையார் தந்தார் கொலோ
வருவித்த தோகலை வளர்க்குமென் றோவிருண்
மயக்கந் தவிர்க்கு மென்றோ
வசனார்த்த வுண்மைநிலை யின்னதென் றறிகிலேன்
வானத்தை விட்டி றங்கு
அருமைப் பிரானெங்க ளாறுமுக நாதனுட
னம்புலி யாட வாவே
அகிலாண்ட வல்லிசுத னெனையாண்ட செல்வனுட
னம்புலி யாட வாவே.
#64✓
விண்ணெலாம் நிலவொளி பரப்புண்மை தந்தவர்
வெறுப்புளோ ரோபின் வந்த
வீம்புக்கு மணிகொண்ட பாம்புக்கு மீய்ந்தனை
விளங்கும்ப்ர காச மெல்லாம்
மண்ணெலா முய்யத் தடாகக் குளிர்ச்சிகள்
வழங்குமுன் கலைப னாறும்
மாண்டவோ நாவலர்கள் வேண்டவோ யாதோ
மகத்வமெங் கேபோச் சுதோ
கண்ணெலாம் நிறைகின்ற பூரண சுதந்திரங்
காண்பிப்ப தோர்நா ளதுங்
கறையொன் றிருப்பதா லறைகின்ற புலவர்நூற்
கட்சிக் கிடங்கொ டுத்தாய்
அண்மினால் நீக்கெங்க ளாறுமுக நாதனுட
னம்புலி யாட வாவே
அகிலாண்ட வல்லிசுத னெனையாண்ட செல்வனுட
னம்புலி யாட வாவே.
65✓
பதுமபீ டக்குமரி யிடையொன்று மெஞ்ஞான
பக்தர்க ளிடத்தி ரண்டு
பண்டுள தமிழ்க்கொன்று பலவைண வர்க்கொன்று
பரமனார் வேணி மூன்று
குதுகல மனப்பெண்கள் வதனத்தி லன்னதே
கொஞ்சும்ப்ர காச மாகக்
குடிகொண்ட தன்றியும் பின்னுளவை போஞ்செயல்
குறிக்கா திருந்த தென்னே
இதுமகா வுசிதமோ யிவடத்து மவடத்து
மெளியர்போ லலைய வோசொல்
எவ்வித மிருந்தபோ துஞ்சரி சரிமகிழ்ந்
திப்போது கீழிறங்கு
அதைநலஞ் செயுமெங்க ளாறுமுக நாதனுட
னம்புலி யாட வாவே
அகிலாண்ட வல்லிசுத னெனையாண்ட செல்வனுட
னம்புலி யாட வாவே.
66✓
வையச் சராசர மெலாந்தழைக் கின்றகலை
வரவரக் குறைத லென்னே
மறுபடியு முன்போல வதிகின்ற செயல்தந்த
வள்ளல்யார் நிர்மு டரோ
தையற் றயாளவனு போகமோகங் களாற்
சார்ந்ததோ சாப மட்டா
சண்டாள வுன்மாட்டு மன்மதன் காமச்
சமர்த்தினைக் காட்டி னானோ
வெய்யற்பா ராவணன் குளிர்காய்ச்சல் சீதள
வியப்பிற் பயந்தி ராமேல்
வேலைக்கு ளானதா லுன்கவலை நோக்கான்
விலக்குவோர் தெய்வ மிலையா
அய்யனா ருளரெங்க ளாறுமுக நாதனுட
னம்புலி யாட வாவே
அகிலாண்ட வல்லிசுத னெனையாண்ட செல்வனுட
னம்புலி யாட வாவே.
67✓
மத்தகக் கடகளிற் றைங்கரக் கடவுளர்தன்
மாய்கைப் புணர்ப்பி னாலோ
வக்ரதந் தங்குலவு பற்களுக் கிணையென
மதித்திடும் பெட்பி னாலோ
சுத்தசின் மயகோ மளப்பகவ தீக்ஷண்ய
தொந்தமாம் பந்த மில்லாச்
சூட்சத் தினாலிதய காட்சிக் கிசைந்தோன்
றுதிக்கையி னாற்பி டிக்கச்
சித்தம்வைத் தருணோக்க முற்றாலு முன்செயல்
தெரிந்துளா னாகை யாலே
செய்யைச் சுருக்கிவுல குய்யத் தருக்கிலாச்
சிந்தையா னாணுண் மையால்
அத்தன்மை சேரெங்க ளாறுமுக நாதனுட
னம்புலி யாட வாவே
அகிலாண்ட வல்லிசுத னெனையாண்ட செல்வனுட
னம்புலி யாட வாவே.
68✓
எரிசுடர்க் கற்றைவிரி பரிதியோ னுன்தமய
னித்தரணி முற்று லாவ
லேய்க்கின்ற காலத்தில் வாய்க்குமஞ் சனைபுதல்வ
னிச்சைக் கிணங்க லாலே
பரிபுரச் சரணம் பளீரென்று மின்னிடப்
பாய்ந்த னன்கனி யென்னவே
பாடிருட் கும்புசலை யக்கலை நிலாவொளி
பரப்பு முன்பா லுற்றிடா
துரிமையோ வச்சமய முதயமோ புதையுண்
டொழித்தவோ செய்கை யாதோ
வொப்பிலா வுன்கலை குறைந்ததால் நினைவிற்
குடன்படா தென்றெண் ணமோ
அருமைதா னீயெங்க ளாறுமுக நாதனுட
னம்புலி யாட வாவே
அகிலாண்ட வல்லிசுத னெனையாண்ட செல்வனுட
னம்புலி யாட வாவே.
@todo add 2 missing lines
69✓
இக்குறைகள் கையாண்டு முற்குறைகள் தோன்றிடா
தெவ்வண்ண முறுதி கொண்டாய்
இற்பெருமை யால்வரு குடிப்பெருமை யுங்கற்பு
மெச்சீரும் நற்சீ ரதாய்
நற்கருணை வாழ்கின்ற நாயக ருடன்சேர்ந்த
ஞாபகப் பெண்க ளோடு
ஞாயமில் லாமலோ வூழ்விதி வசத்திலோ
நாதன் பிரிந்த சமயம்
சொக்குமைய லோடனம் புக்கவிக் கக்கக்க
சோர்ந்துளாய் மேனி வாடித்
தோய்ந்திட்ட பஞ்சணை யுறக்கமற் றுப்பனீர்
தோழியர் தெளித்து மாறா
தக்குறி தவிர்த்தெங்க ளாறுமுக நாதனுட
னம்புலி யாட வாவே
அகிலாண்ட வல்லிசுத னெனையாண்ட செல்வனுட
னம்புலி யாட வாவே.
70✓
எவ்வித குறைப்பா டிருந்தாலு மென்னவுல
கெங்கணு முன்ப்ர காசம்
இல்லையேல் மக்களுயி ருய்யுமா றெவணிவ
ணிதன்செயல் பெருந்தன்மை யார்
எவ்வமர ரும்போற்ற முன்னுளோர் பழமையா
லின்புற ஸ்லேடை சொன்னார்
ஏற்பட்ட குறையொன் றிலாவிடி னுனக்கெதி
ரிசைக்கினுஞ் சரியா குமோ
ஒவ்வரசர் முதலாக வெங்கணும் புகழான
வுன்னா ம மேது லங்கு
முற்சுக மேகொண்ட பிரக்யாதி யானநீ
யும்பர்புவி விட்டி றங்கு
அவ்வித மகிழ்ந்தெங்க ளாறுமுக நாதனுட
னம்புலி யாட வாவே.
அகிலாண்ட வல்லிசுத னெனையாண்ட செல்வனுட
னம்புலி யாட வாவே.
71✓
இத்தல முதற்றல மெனத்துதி வியப்பினா
லெங்குந் தயாள மான
வெழில்கொண்ட செல்வப்ர சங்ககெம் பீரனுல
கிந்த்ரப்ர சித்த கிரீட
பக்திப்ர யோசனக் ருபைக்ஷேம மங்காத
பாக்யவான் சொக்க லிங்கர்
பண்புற் றனுக்ரக செயம்பெற் றிடத்துயர்
பறந்தோடு மடியார் களுக்
கித்தருண மனமகி ழத்தப்ர விர்த்தியி
லிலங்கும் விபூதி யாலே
எம்மனோர்க்கும் மெதிரில் வம்மெனோர்க் கும்புவியி
லின்பங் கொடுத்த முருக
னத்தல மகானெங்க ளாறுமுக நாதனுட
னம்புலி யாட வாவே
அகிலாண்ட வல்லிசுத னெனையாண்ட செல்வனுட
னம்புலி யாட வாவே.