முருகன் App
கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத்தமிழ்
தவத்திரு சிதம்பர சுவாமிகள்
சப்பாணிப்பருவம்4 / 10
கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத்தமிழ் · தவத்திரு சிதம்பர சுவாமிகள்

சப்பாணிப்பருவம்

32✓
பாலசந்த் ரோதய சடானன தடாகப்
பகீரதித் தெய்வ கங்கைப்
பஞ்சாக் கரப்பதிக நமசிவய ஸோடஸப்
பக்திப்ர சாத ஞான
சீலசம் போகரசி வாலய புராதனச்
சித்தசன் மார்க்க ரூப
சிங்கார ருத்ரப்ர சன்னகோ லாகலத்
திவ்யபொற் புப்ர காச
தூலதோ ஜோன்மய சுகப்ரம கயிலாய
சூட்சவன் யாய கவடத்
துர்க்கந்த பாதாள நரகமுதல் யாவையுந்
தூர்ந்து காந்தப் பிரளயத்
தாலகீ தாமிர்த நடம்புரி சிவன்குமர
சப்பாணி கொட்டி யருளே
சதுர்முக னிணங்குபர கெதிமகன் வணங்கிட
சப்பாணி கொட்டி யருளே.
33✓
சேற்கொடி பிடத்திடச் செழியர்கோ னரசியற்
சேர்க்கைத் துவாத சாந்தச்
சித்திபக் திப்பெருமை முத்திக்கு முன்னின்ற
தெய்வீக மதுரா புரி
மாற்கரிய பூத்தான மரகதப் பெண்கிளி
மனத்துக் குகந்த கடவுண்
மாறியா டச்செழிய னார்வமங் காதுரக
மண்ணும்விண் ணுந்து திக்க
வாக்கொளி மனத்தொளி வழக்கொளி விளக்கொளி
மகாத்மத் ததீத வெளியில்
மல்குபே ரின்பத்தி லாழ்கின்ற தொண்டர்கள்
மயங்குறா தேம னெஞ்சிற்
றாக்குகா லூன்றிநட மிடுதந்தை யெதிர்நின்று
சப்பாணி கொட்டி யருளே
சதுர்முக னிணங்குபர கெதிமகன் வணங்கிட
சப்பாணி கொட்டி யருளே.
34✓
கற்பகத் தருநீழ லரசியற் குலிசனுங்
கண்ணாட்டி யிந்த்ராணியுங்
காமர்பூங் கொம்பிடை துவண்டசைய வூர்வசிக்
கன்னிபு லோகரம்பை
பொற்புலவு மேனகை திலோர்த்தமை வசீகரப்
புலவோர்கு ழாஞ்சுற்றிடப்
பூரித்து வெண்கரித யாரித்து விண்ணைப்
புரப்பதற் கிந்த்ரநீலத்
துப்பிலோர் தேர்மரக தப்பாவை கைக்கிளி
துவர்க்கிலுக் குப்பொன்னூசற்
றொட்டில்சிறு கட்டிலொடு சீர்வரிசை கொணர்ந்து
சோதியைப் பார்க்கவந்தார்
தப்பிலா ரின்பத்தி லாழ்வதற் கெதிர்நின்று
சப்பாணி கொட்டி யருளே
சதுர்முக னிணங்குபர கெதிமகன் வணங்கிடச்
சப்பாணி கொட்டி யருளே.
35✓
ஞானதுங் கக்கலக நாரதன் கெர்ஜித
நவீனசிந் தைப்பெருமையால்
நாவழங் கச்சுருதி ஞாலவிந் தைக்குறவர்
நாமபண் புக்குரிமைசேர்
மோனதொந் தப்படு விவாகமின் கைச்சரச
மூலசங் கற்பநினைவில்
மூட்டண் டட்டட்ட டூடுடுண் டுட்டுவென
மோதுசண் டைப்பறைகளால்
யீனதண் டக்கலக சூரவஞ் சத்தனுயி
ரீய்தல்சண் டற்கெனவரு
மீசசந் தச்சரப பாலகந் தப்புலவ
வேமுறும் பக்திவிரத
தானசங் கத்தமிழ்வி லாசகுன் றிற்குலவு
சப்பாணி கொட்டியருளே
சதுர்முக னிணங்குபர கெதிமகன் வணங்கிடச்
சப்பாணி கொட்டி யருளே.
36✓
பூர்வீக சென்மசா பல்யமில் லாதுலகர்
பொய்க்கான விரதாச்சர்யப்
புனலென்று மதிகொண்டு திரிகின்ற மான்போற்
புராதன வழக்குமல்கு
வார்யோக சாதனவ தீதநூற் சங்கநன்
மார்க்கத்தி லெண்ணமில்லா
வஞ்சத் திருட்டுலவு நெஞ்சப் பகட்டர்மனை
மக்கள்சம் பந்துளான
சீர்மோக கொலைகளவு கட்குடி முதற்பல
திடத்தைப் புரிந்துகெட்ட
சித்தப் பெருக்கர்குல முற்றத் துறந்தெவர்ன
சித்ரக் கலாபமஞ்ஞைச்
சார்பால யக்கடவுள் வாழ்வே கடப்பகுக
சப்பாணி கொட்டியருளே
சதுர்முக னிணங்குபர கெதிமகன் வணங்கிடச்
சப்பாணி கொட்டியருளே.
37வேறு சந்தம்✓
ஞானத் தருண்மழை பொழிதற் குனதடி
நம்பா வம்பேசார்
நரரைக் கொடுநர கிடைபுக் கிடுதல்
நலந்தா னென்போர்பால்
மோனச் சுடர்மணி முருகப் புலவ
முகஞ்சூழ் தண்டேன்வாய்
முறுவற் கிடையிடை யமிர்தத் தொனிவள
முந்தே னுந்தோணுங்
கானக் குறவர்கள் கலகத் தருள்புரி
கந்தா செந்தூரா
கவிகைப் பெருமித மதுரைக் கரசி
கரும்பா டன்பாலா
கூனற் பிறையணி குடிலற் கொருசுத
கொட்டுக சப்பாணி
கொங்குல வுங்கழ லிங்கித ரஞ்சித
கொட்டுக சப்பாணி.
38✓
வார்க்குஞ் சரச்சிலை மகிமைத் துளப
மணஞ்சே ருங்கிரீடர்
மருகச் சரவண பவகுக் குடகர
வண்டா ருஞ்சோலை
பூக்கும் பரிமள புனிதக் குலமலர்
பொங்கா ரஞ்சூடும்
புவனத் தடியவ ரிதயப் பெருமை
புரிந்தாள் கெம்பீரா
காக்குந் தினகர கதிரற் புதமலி
கண்பா ரென்போர்வாழ்
கதிவிற் பனசுப கனகப் பழநீ
கனிந்தாள் பண்டாரா
கோக்கொம் பதிர்ந்திட குறவர்க் கருள்சுக
கொட்டுக சப்பாணி
கொங்குல வுங்கழ லிங்கித ரஞ்சித
கொட்டுக சப்பாணி.
39✓
மாயப் புணரி மயக்க வலை
வதிந்த குறும்பர்களால்
வருதுற் குணசெய லழியற் கெனதிடம்
வந்து பிறந்தவனோ
நீயிப் புவியென நிலவிற் பொலிகுறி
நின்ற நறுந்துவர்வாய்
ஞிமிறுக் குணவு தமிர்தத் தொனியுமை
நெஞ்ச மகிழ்ந்தணையா
டாயத் தடமுலை தரநிச் சயலபி
தங்கு கரங்களினாற்
றழுவிக் கொளகொள மவனமுத் தொழுகு
சரங்குல வுஞ்சொற்களாற்
கூயப் பழமறை குமுறத் தெளிவொடு
கொட்டுக சப்பாணி
கொங்குல வுங்கழ லிங்கித ரஞ்சித
கொட்டுக சப்பாணி.
40✓
வேதப் பொருள்விரி விடையத் தொழில்புரி
விஞ்சை பொருந்திடுவாழ்
விமலத் தருமகள் விகிர்தப் பணிமணி
விம்ப கடம்பமகா
சீதப் புனல்வயல் சிவணப் பழநி
தினம்புரி யுந்திருநாள்
செறிபற் பலவிம ரிசைபெற் றழகு
சிறந்தப்ர சங்ககுகா
போதத் திருவுள புதுமைத் தவசு
பொருந்து வரந்தருவாய்
புலமைச் சரவண புனிதக் கடவுள்
புயந்தழு வுஞ்சிறுவா
கோதற் றமரர்கள் குடிபுக் கிடவெதிர்
கொட்டுக சப்பாணி
கொங்குல வுங்கழ லிங்கித ரஞ்சித
கொட்டுக சப்பாணி.
41✓
வானத் திரவியை மதியைப் புவிபொழி
மழையைச் சுழிமுனையின்
வடிவைப் பரிமள மலரைப் பரகெதி
வழியைத் தொனிகடலை
கானச் சரவண கனகச் சடமலி
கனியைக் கடவுளரைக்
கலியைப் பலிதரு கணையைப் புலவர்கள்
கவியிற் புகழழகை
ஞானப் பரவெளி நயனக் கிர்பைமலி
நதியைச் சிகியினில்வாழ்
நடனைத் துணைபுரி கடனைத் திருவுள
நலனைத் தருநிழலார்
கோனைத் தொழுமென வோதுத் தமரெதிர்
கொட்டுக சப்பாணி
கொங்குல வுங்கழ லிங்கித ரஞ்சித
கொட்டுக சப்பாணி.