முருகன் App
கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத்தமிழ்
தவத்திரு சிதம்பர சுவாமிகள்
சிறுபறைப்பருவம்8 / 10
கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத்தமிழ் · தவத்திரு சிதம்பர சுவாமிகள்

சிறுபறைப்பருவம்

72✓
தாலாட்டு பாடற் றொழிக்குமை விரும்பச்
சபாமண்ட பத்தி னிற்றீம்
சர்க்கரைப் பந்தலிற் றேன்மாரி பொழிகின்ற
தன்மையா லும்பர் நாடர்
பாலாட் டுணைக்கவ தரித்தசண் முகநாத
பண்புக் கிசைந்த நீல
பச்சைவயி டூர்யகோ மேதக மழுத்தப்
பகட்டுப்ர காச மின்ன
காலாட்டி யன்னை முலைவீக்கத் திலேக்கங்
கனிந்திடப் பன்னி ரண்டு
கைத்தலம் நிறப்புவிரன் மணிமோ திரச்சுடர்
கவிக்கக் கலாப மஞ்ஞை
சீலாட்ட விற்பன கடம்பசிங் காரனே
சிறுபறை முழக்கி யருளே
சிவணத் திருக்கழுகு மலையிற் றழைக்கும்நீ
சிறுபறை முழக்கி யருளே.
73✓
வானத் தருங்கருணை மோனத் தரும்புவன
வாழ்வைப் பொருந்து வண்மை
மங்காத தெய்வீக லோகோப காரசெயல்
வாக்யானு கூல யோக
ஞானத்த ருஞ்சுபந மஸ்தென்று பூசையில்
நவின்றிடப் பிரம துட்ச
நாப்பணகி லாண்டகோ டிச்சரம சரமெலாம்
நட்பற் றழித்த வேலைத்
தானத்தில் நின்றுநட னம்புரி மகேஸ்பரர்
தனக்கவ தரித்த பாலர்
தன்மையெற் றோவென நினைப்போர் மனத்திற்
றயாளம் பொருந்து வித்வ
தேனத்து லாசச் சரண்பூ மலர்ந்திடச்
சிறுபறை முழக்கி யருளே
சிவணத் திருக்கழுகு மலையிற் றழைக்கநீ
சிறுபறை முழக்கி யருளே.
74✓
நாமசித் தாந்தமுதல் நவையறக் கற்றவருண்
ணாட்டத்தி னன்புகொண்டு
ஞானப்ர மானந்த கோலாக லக்கயிலை
நாதன்வாழ் விற்புகுந்து
பூமட்ட விழ்ந்தகழல் வந்தனை புரிந்தடும்
போதவாள் வரவேற்பவே
புகலுவார் முருகவேள் சென்மலக் கினபலப்
பொற்பைக் குறிப்பதான
நேமதிட் டக்குறி தெளிந்திடுதல் நன்றென்ன
நீதனுஞ் சரியென்றிட
நேசிக்கும் வள்ளுவ ரழைக்கவந் துண்மையை
நிறுத்தப்ர விர்த்திமூளச்
சேமபத் மச்சரண கோமள மயிற்குமர
சிறுபறை முழக்கியருளே
சிவணத் திருக்கழுகு மலையிற் றழைக்கும்நீ
சிறுபறை முழக்கியருளே.
75✓
எவ்வுல கினுக்குமொரு தாயான வட்கிவ
னெழிற்சுத னெனத்தோன் றினான்
இச்சென்ம ராசிகள் சுபஸ்தான நன்மையால்
எழிலான சாத கந்தான்
செவ்விமுக மாறுங் கரங்கள்பன் னிரண்டாதற்
றிடகாத்ர நன்மை யோடு
திக்குவிஜ யம்புரி சிரோரத்ன மென்னலாம்
தெய்வீக பக்த ரெல்லாம்
தெவ்வென்ற வாக்யமே திருப்திகொண் டாடவுணர்
தீயவஞ் சகமாய்க் கையால்
செய்கின்ற துன்பங் கடிந்தாறு படைவீடு
சேர்வ னென்றுஞ் சொல்லலாம்
திவ்ய வசனச்செயல் சிறந்ததென் பார்கள்முன்
சிறுபறை முழக்கி யருளே
சிவணத் திருக்கழுகு மலையிற் றழைக்கநீ
சிறுபறை முழக்கி யருளே.
76✓
அப்பொழுது யாழ்வல்ல பக்கர னுரைத்தா
னரன்றந் தையாக மேலும்
அன்னை சம்பத் தளவிலா திருக்கும்போ
தனாதியா யாறு வீடு
பெட்புற வமைக்கு மென்றீர் சாதகத்திடம்
பேத கமெனச் செப்பவே
பேசுவார் வள்ளுவ ருலோப காரகுண
பெற்றியா லமர ராயோர்
முற்பொழு துரைத்திட்ட சூட்சதில வுணர்களை
மோது வைராக்ய மாலே
மோக்ஷப் பரங்குன்று செந்தி பழனாபுரி
முகூர்த்த நற்றிரு வேரகம்
சிற்பரக் குன்று தோறாடல்பழ முதிர்சோலை
சேர்ந்திடு மாறு வீடு
செப்பலா மென்பவர் விருப்பஞ் செழிக்கநீ
சிறுபறை முழக்கி யருளே
சிவணத் திருக்கழுகு மலையிற் றழைக்கநீ
சிறுபறை முழக்கி யருளே.
77✓
மூவுலகி லுக்கிடர் விழைத்த சண்டாளரை
முடித்த வேலொன்று பார்வை
முன்னேற்ற மென்றைக்கும் நீங்கா திருக்குமும்
மூர்த்திக்கு மூர்த்தி யாகி
காவடி யெடுத்தவர்கள் சன்னத முதிக்கவுங்
காவி வஸ்த்ரந் துவைத்துக்
காது குத்திக்கோ வணந்தரித் துத்தடி
கரத்தினிற் கொண்ட பின்பு
ஆவலொடு முப்பழ விபூதிப்ர சாதபா
லபிடேக பழனி மொட்டை
யாண்டி யென்றுந் தண்டபாணி யென்றுந்தொழு
தனுக்ரகத் தன்மை வேண்டி
சேவடி வணங்கிடுவ ரென்பவர் களித்திடச்
சிறுபறை முழக்கி யருளே
சிவணத் திருக்கழுகு மலையிற் றழைக்கநீ
சிறுபறை முழக்கி யருளே.
78✓
அளவிலாச் செல்வத் தருக்குளோ னொருவனென்
றனிக முற்சே னாபதி
யப்பனே நீயென்று செப்புவ னவன்பெணு
மன்றே கிடைக்கும் நிசமால்
களவிலொரு முனிமணஞ் செய்வனென வீணைக்
கரங்கொண்ட மாத வத்தோன்
கழறுவான் முன்சொன்ன காரண மிருக்கவுங்
கழறுமவ் விபர மென்னத்
தளர்விலா துரைசெய் யெனத்தினை வனத்திலே
சார்ந்துளாள் வள்ளி யென்பாள்
தன்மணம் புரிகுவ ளெனச்செப் பிடப்பரம
சந்தோட புளகாங் கிதத்
தெளிவுளா ரனையவர் செவிப்புல னடைத்திடச்
சிறுபறை முழக்கி யருளே
சிவணத் திருக்கழுகு மலையிற் றழைக்கநீ
சிறுபறை முழக்கி யருளே
79✓
பலகலை யுணர்ந்ததிரு வள்ளுவ மகாமூனி
பகர்நதிடப் பரம பாகer
பச்சைப் பசுங்கிளியும் நன்றென நகைத்திடப்
பக்க ரெல்லா மெஞ்ஞான
மிலகுமிர் தயாலய சுகானந்த வெள்ளத்தி
லின்புற் றிருக்க மேலும்
எத்திக்கு முற்றபய மற்றதென நான்மறைக
ளீடேறு மென்றொ லிப்ப
கலகலென மின்சதங் கைப்பதம் நடித்திடக்
கண்பன்னி ரண்டி லங்கக்
கருணைமுகில் குமுறக் கலாப மயிலாட
களித்த சங்கீதம் வளரத்
திலகபஜ னாமிர்த சுர்தித்தொனி முழங்கிடச்
சிறுபறை முழக்கி யருளே
சிவணத் திருக்கழுகு மலையிற் றழைக்கநீ
சிறுபறை முழக்கி யருளே.
80✓
பெற்றவளு னக்கருமை பாராட்டு கின்றவோர்
பெட்பையார் பேச வல்லார்
பேதாதி பேதப் பிறப்பிறப் புக்கடல்
பிறங்காத வாழ்க்கை யோடு
பற்றலர் துணுக்கத் தடாமோடி வைதீக
பாக்யஞ் செழிக்க மூடர்
பட்சத் தலைந்திடா விச்சைத் தராதர
பழக்கத் திருப்ப தென்றோ
நற்றவப் பேரடைத லுற்றதச் செயலுதவு
ஞாபக முளேனென் னவும்
ஞாயத் தலத்திலே பேசுதர் மார்த்தநிலை
ஞான முண்டா மென்னவும்
தெற்றென வெழுந்திடி முழங்குசொல் லோடுநீ
சிறுபறை முழக்கி யருளே
சிவணத் திருக்கழுகு மலையிற் றழைக்கநீ
சிறுபறை முழக்கி யருளே.
81✓
பைங்குனி விழாவிரத சாரத்ய முஞ்சூரர்
பங்கமாங் கந்த சஷ்டி
பகருந் துலாரவி விஷாகடம் பச்செயல்
பழங்குஞ் சதாவி ஷேட
மங்காத மாதாந்த சுக்ரவாரச் சேவை
மகிமை சிந்தாக் கார்த்திகை
வருவார்க ளொருகோடி மனிதர் காவடிவகை
வகுக்கொணா தெண்ண மஃதே
எங்கணு முலாவுமுன் சீர்கதிக்கு நேர்த்திதான்
என்றெம் மனோர் கருத்தா
லெண்ணுந் தரத்ததோ வானாலு மாவலொன்
றென்னுளே விலகி டாது
செங்கைவடி வேலிலகு மங்கள குமாரனே
சிறுபறை முழக்கி யருளே
சிவணத் திருக்கழுகு மலையிற் றழைக்கநீ
சிறுபறை முழக்கி யருளே