முருகன் App
கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத்தமிழ்
தவத்திரு சிதம்பர சுவாமிகள்
தாலப்பருவம்3 / 10
கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத்தமிழ் · தவத்திரு சிதம்பர சுவாமிகள்

தாலப்பருவம்

22✓
பாவுந் தொடையும் பதவிகற்பம்
பழங்கார ணங்கள் பலவிதமாய்ப்
பவணக் கிரியிற் றிருவுளம்போற்
பாவித் திருக்குங் கடவுளரே
கூவுங் கிளியே வருணகிரி
குரலே தேனே குறத்திவடக்
கொங்கைக் குடத்தைப் புரக்குமணக்
கோலா கலனே குலவிளக்கே
நாவின் சுவையே நவரசமே
நலனே கலனே நயகுணமெஞ்
ஞானக் கொழுந்தே நறுமலரே
நலுங்கே தெலுங்கே நனிசிறக்கு
மாவின் பெருமைக் கழுகுமலைக்
கரசே தாலோ தாலேலோ
அகிலாண் டவட்கன் றுதித்தவருட்
கடலே தாலோ தாலேலோ.
23✓
சேலுங் கணையும் பிணையுமிணை
செகுத்த கருங்கட் டோகையர்தான்
றிரியக் குறிக்கு மோதிமங்க
டியங்கக் கமலப் பள்ளியறை
மேலுங் குலவும் பார்ப்பினந்தன்
வியன்றாய் வரவைக் காணாத
வெறுப்பா விறக்கை பறப்பனபோல்
விதிர்க்க மேதிக் கன்றுள்ளிப்
பாலுஞ் சுரக்க மடுவழங்கிப்
பரப்புஞ் சேற்றிற் பருகியபின்
பசிதீர்த் துறங்கப் பசுந்தேரை
பழக்கக் களிப்பிற் றாலாட்ட
லாலும் பொழில்சூழ் கழுகுமலைக்
கரசே தாலோ தாலேலோ
அகிலாண் டவட்கன் றுதித்தவருட்
கடலே தாலோ தாலேலோ.
24✓
வீக்கிப் புரக்கு மென்கச்சு
வெடிக்கப் பருத்த வேட்கைமுலை
விருப்பக் கொழுந ருழுதொழிலார்
வெறுக்கப் பார்த்த கட்கருணை
நோக்கக் குறிப்பின் றண்டேறல்
நூங்கு மழலை மொழியின்று
நோன்மை காட்டி நுவன்றிருகை
நொடிக்கத் துடித்து நுதற்புருவந்
தூக்கச் சினத்தைத் தவிர்த்திருகாற்
றுணையைப் பிணிக்கத் துகைகமடத்
தோட்டுப் படத்தின் பிடிநழுவித்
துதிக்கத் திகைத்தோர் தனக்கடிசி
லாக்கும் பழனக் கழுகுமலைக்
கரசே தாலோ தாலேலோ
அகிலாண் டவட்கன் றுதித்தவருட்
கடலே தாலோ தாலேலோ.
25✓
வேனிற் குலவு மயிலினங்கள்
விளங்கும் பொழில்வாய் விண்மடவார்
மின்போற் பறந்து வாவிகளில்
மிளிர்நீ ராடி வீசுகுழல்
நானத் தூமம் பரிமளிக்க
நறும் பூங் கரத்தாற் சிக்காற்றி
நடக்கக் குளிர்கா லத்தருண
நலத்தைக் காட்ட நடம்புரிந்து
கானச் சுரும்பர் பாட்டயராக்
கமலம் பூத்துக் கட்சொரியக்
கண்டு வியக்க மனத்தழுங்கு
கருலக் களிக்குங் கற்பகநா
டானிற் பெருமைக் கழுகுமலைக்
கரசே தாலோ தாலேலோ
அகிலாண் டவட்கன் றுதித்தவருட்
கடலே தாலோ தாலேலோ.
26✓
மாட்டைக் குறித்தம் மாட்டினுயிர்
மடித்து நடித்து மணிவேலை
வரவைப் பார்க்க வடகாற்று
மதிக்கத் துதிக்க மன்மதுரைக்
கோட்டைக் கொடுத்தார் கட்செவியைக்
குறிக்கி வசிக்கக் குலவழுதிக்
கோமான் மரபுக் கருங்கலன்போற்
கொழுக்கும் பிறையார் குலுங்குசடைக்
காட்டைத் தரித்த கடவுளருங்
கமலகக் கோவுங் கண்ணனொடு
களிக்குங் குழந்தைப் பருவசெயல்
காட்டிக் கலபச் சிகியில்விளை
யாட்டைப் புரிந்த கழுகுமலைக்
கரசே தாலோ தாலேலோ
அகிலாண் டவட்கன் றுதித்தவருட்
கடலே தாலோ தாலேலோ.
27வேறு சந்தம்✓
ஞாலத் திருண்மலி சுவடத் தவுணர்
நமன்போல் விண்பூமி
நலியக் குரல்திமிர் சிலையிற் கணைதொடு
நண்பார் கொம்புதச்
சாலத் தொழில்புரி சமரிற் கடுநிகர்
சண்டா ளங்கேண்மைத்
தறுகட் பகைவர்க ளுயிரைப் பருகு
தவஞ்சேர் கங்காளி
வேலுக் கதிபதி விசயச் சடில
விடஞ்சேர் கண்டாகர்
விமலக் கடவுளர் திலகச் சரவண
விம்பா சந்தானக்
கோலப் பரிமள பவணக் கிரிவளர்
குன்றே தாலேலோ
குஞ்சரி வள்ளி குடங்கை வளர்ந்த
கொழுந்தே தாலேலோ.
28வேறு சந்தம்✓
காவித் துணிமணி கலபச் சிகிநடங்
கண்டோர் கொண்டாடக்
ககனப் பெருவெளி கவனத் துடையவர்
கண்பா ரென்றோதப்
பூவிற் குறள்பசி புகுதக் கருணை
புரிந்தார் தன்பாலா
புதுமைப் பழனியி லினனிப் பழவகை
பொன்றா திந்த்ராணி
கோவிற் குலமகள் குறவச் சிறுமி
குணந்தே டுந்தேவர்
குடியற் புதுமுயர் கொலுவைப் புரிசெயல்
குன்றா மெஞ்ஞானந்
தாவிற் பொலிகழு குமலைச் சரவண
தாலோ தாலேலோ
சங்கரி தந்தப்ர சங்க பரஞ்சுடர்
தாலோ தாலேலோ.
29வேறு சந்தம்✓
மூலத் தெழுகனல் முடுகப் பரவெளி
முங்கா மஞ்சாளி
முனிவர்க் கிகபர முதவக் கருணை
முயன்றார் கங்காணி
மாலுக் கிடர்தவிர் மருகப் புதுமை
மயங்கா தன்பாகி
வதனத் தருள்மழை பொழியப் பொதிகை
வதிந்தோர் கொண்டாட
வேலைக் கொடுகடு விடயத் தவுணரை
வென்றோ யென்றாடும்
மிருகப் படர்துதி சமரிற் புகுதிட
மின்கோ லம்பேசுந்
தாலத் தருள்கழு குமலைச் சரவண
தாலோ தாலேலோ
சங்கரி தந்தப்ர சங்க பரஞ்சுடர்
தாலோ தாலேலோ.
30வேறு சந்தம்✓
வாணிக் கிழவிவிண் மலிகற் பகநிழல்
வண்டார் மண்டூகம்
வனசத் தலையணை யொழுகிற் பழகிட
வந்தாள் சங்கீதம்
பேணிக் கரமலி பெருமைக் கலையுணர்
பெண்பால் தன்காமி
பிரமப் பிரணவ மறைகற் றுலகு
பிறந்தான் றென்பூமி
காணிக் கொருதுணை ககனச் சுவர்தொடு
கங்கா டன்பாலா
கருணைக் கலியுக வரதப் புகழ்மலி
கந்தா வென்போர்சோ
தாணிர்த் தனகழு குமலைச் சரவண
தாலோ தாலேலோ
சங்கரி தந்தப்ர சங்க பரஞ்சுடர்
தாலோ தாலேலோ.
31வேறு சந்தம்✓
தேறிற் கொடிபரி சிவணக் கதியொடு
சென்றா னென்றூழ்வாழ்
செகமெய்த் தருள்மழை பொழிபொற் சாண
செபஞ்சேர் கங்காளர்
போரிற் புலவர்கள் புகழிற் றிருவருள்
பொன்றா தன்பாலே
புதுமைப் பரத குதுகலைக் குடிலை
புரந்தாள் கெம்பீரி
நேரிற் கரதல நிலையிற் புகுத
நினைந்தாள் விண்சோலி
நிலைபெற் றடியவ ரிதயத் துசிதம்
நிறைந்தே பொன்கோலத்
தாரிற் பொலிகழு குமலைச் சரவண
தாலோ தாலேலோ
சங்கரி தந்தப்ர சங்க பரஞ்சுடர்
தாலோ தாலேலோ.