கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத்தமிழ்
தவத்திரு சிதம்பர சுவாமிகள்
காப்புப்பருவம்1 / 10
கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத்தமிழ் · தவத்திரு சிதம்பர சுவாமிகள்
காப்புப்பருவம்
1கணபதி✓
பூமங்க ளாகரவி நாயகப ஜேமந்த்ர
பூஜிதகு ணாமிர்த மகா
பொங்கமலி கொம்புலவு கிம்புரிது லங்குசம்
பூரணசு பங்குல வவும்
நாமங்க ளாரணச தாவிம்ப கரடமழை
ஞானம்பு ஐங்குல வவும்
நவரஞ்சி தாசிர்ய விகடகங் கணாதர
நடனசுந் தரம்பெ ருகவும்
சேமங்கெ டாதபய றுங்கடலை யும்பொரி
திரண்டயெள் ளுண்டை போளி
தேன்குழல் நறுங்கதலி மாம்பழ விளாங்கனி
தினம்படைத் துப்போற் றுவேன்
ஓமங்கி டாதவர மேதந்திஞ் ஞாலமதி
லுன்பாத சேவை தருவாய்
ஓங்கார மும்ப்ரணவ ரீங்கார மும்பழகு
முன்றம்பி தமிழ்த ழையவே.
2திருமால்✓
சீர்கொண்ட செங்கட் பரந்தாம தெய்வீக
தீர்த்தப்ர சாத தேவா
செம்பருந் துப்பரத சீங்குழ லிசைக்யான
தேனா மிர்தச்செவ் வாயா
பார்கொண்ட பாற்கடற் பள்ளிகொண் டாடும்
பரப்ரம ரூப பஞ்ச
பாண்டவர் சகாயபரி தூண்டிரத சாரதய
பத்ம நாபா முகுந்தா
வார்கொண்ட பைந்துளப மாலையணி மார்பா
வராகவை குண்ட நாதா
மதுசூத னாசரண மிதுவேளை வந்தெனது
வாக்கிற் புகுந்தா ளுவாய்
ஏர்கொண்ட கழுகா சலக்கருணை நாயக
னிலங்குங் குழந்தை வடிவாய்
யின்புற் றிருத்தல்போ லென்பத்தி பெருகிவள
ரிங்கிதத் தமிழ்த ழையவே.
3சரசுவதி✓
ஞானமக் கட்கிதய நாட்டத்தி லன்புருகு
நண்புப்ர சங்க வடிவாய்
நவரத்ன மணிமா லிகைச்சட வலங்கார
நளினவெண் டோட்டு லாவும்
மோனசித் தத்திட நவீன சித்ரக்கலை
முடிக்கொங் கையால் மருங்குல்
முற்றிலும் வளைந்திடக் கற்றவர்கள் சொற்புலன்
முதிர்ச்சித் தெளிச்சி வாழ்க
தேனினெக் கைப்பிழி செயற்பா விளக்கெனத்
தெய்வப்ர சாத சரணத்
தெண்டனிட் டேனெதிரில் வந்தருள் புரிந்துனது
சேவையுந் தந்தா ளுவாய்
வானர்தொக் கப்பரவு த்யானபச் சக்குமர
வள்ளல் புள்ளிக் கலாப
மயில்மீது விளையாடு மொயிலான முத்தமிழ்
மகத்வ மங்காது லவவே.
4அகிலாண்டவள்✓
மும்முலைப் பெட்புலக செம்மைபெற் றெழில்வளர
முத்தொ ழிற்குஞ் சிறந்த
மோக்கத்தி லுங்கருணை நோக்கத்தி லுங்கயிலை
முக்கட் சுடர்க்கி யன்ற
நன்மையிற் றன்மைவிரி ஞானப்ர சங்கத்தில்
நயனஞ் செலுத்தி விண்ணோர்
நாட்டத்தி லுந்தொண்டர் கூட்டத்தி லுங்குலவி
நற்றவப் பேறு பெறவே
தன்மையிற் றன்மன தயாளஞ் செலுத்திடச்
சாமர்த்ய புளகாங் கிதச்
சாம்பவி பதாம்புய துலாம்பர சலாஞ்செயச்
சந்தர்ப்ப விடையி லருள்வா
யம்மைபக வதிகுமரி யகிலாண்ட வல்லியை
னாத்மப்ர காசி நீயே
யாதலா லித்தருணம் வேண்டினே னுன்மக
னனுக்ரகத் தமிழ்த ழையவே.
5சிவன்✓
மத்தகக் கோட்டிப மதத்தைப் பொழிந்தடல்
மடங்கா மனத்தி வேச
மார்க்கத்தி டித்தசூர லூக்கத்தி னால்மதுரை
வருபோது நகரி லுள்ளா
ருத்தமர றிந்துவெரு வுற்றரசன் முன்சென்
றுரைக்க வந்தோ சுந்தரா
வூழிநா ளோபுதுமை யென்கொலோ நன்றென்
றுணங்கி நின்பாற் செப்பிட
வத்தருண முற்றபகை யைக்கடிந் துலகுபுக
ழானந்த வடிவ மாகி
அடியார் மனத்துளே யகலா திருக்கின்ற
வப்பனே யிதுவே ளையில்
முத்தர்க் கினித்தவுன் புத்ரசந் தானவேல்
முருகன் குழந்தை யாகி
முன்னின்று விளையாடு மென்னற் றமிழ்க்கருள்
முகாந்தரந் தரவ ருகவே.
6காளி✓
பராபரி சுகானந்தி நீலியெண் டோளிபரி
பாலினி வராகி யோகி
பஞ்சாக் கரச்சட பயங்கரிப வானிதிட
பாரிட கணங்க ளாட
சராசரம் நடுங்கிடத் தேவர்கடு ணுக்கமுறு
சண்டாள மகிடா சூரன்
றலையைப் பிளந்துகுடர் குருதிச் செழும்புன
றதும்பத் தடிந்த சூலி
தராதலசிம் மாசனி சங்கடவி மோசன
சாம்பரா ணிவாச கத்தி
சத்திகுண நாயகி சமர்த்திசெக தாயகி
சடாமகுடி தவுபு ரணி
நிராமய நிரஞ்சனி நிர்ணய சவுந்தரி
நித்யகல் யாணி ஜோதி
நேசமந்த் ராணுபூ திக்குமர நற்றமிழ்
நிதிக்குதவு தருண மிதுவே.
7திருமகள்✓
கானச்சு ரும்பர்முரல் கமலக் கிழத்திவெண்
கற்பூர தீப சரணி
கலியுக நிரந்தரீ கலாபவல் லிக்ரீட
கனதன கதாப்ர சங்கி
வானர்க்கு மிவ்வுலக மனிதர்க்கு மரசுபுரி
மன்னர்க்கு மதிக செயலாள்
வாக்கினிக் குஞ்செபச லாக்யசிங் காரி பொருள்
வாழ்வுக்கு மனவி வேக
தானதர் மப்புராண சகசமில் லாரெலாஞ்
சந்தோஷ மேகொ டாத
தாழ்வுக்கு மறிகுறி யெனத்துலங் கும்படி
சகத்திற் சொலிக்கும் நீயே
நானறிவி லாதபிச் சாகிலும் தாயென்ற
நன்மைச் சகாய மோங்க
நயனமூ வாறிலகு நளினவே லன்றமிழ்
நலம்புரிந் தருட ருணமே.
8நான்முகன்✓
புவனத்தி லுள்ளமுன் யாபேரு மாதவம்
பூத்ததா லுண்மை ஞானம்
புரிகின்ற தாலவற் குபகார சங்கற்ப
புத்தி தீக்ஷண்ய சீலம்
கவனித் தளிப்பதுன் கடமையன் றோவேத
கர்த்தா வும்நீ யல்லவோ
கமலால யத்துளே புக்கிருந் தோதிமக்
காக்ஷிக் கிணங்கி வாவா
எவர்னித்த வெண்டோட்டு முண்டகக் கோதைவள
ரெழில்நா முகப்ர தானத்
தின்பப்ர சாதக்ருபை நண்பைக் கொடாவிடி
லிருந்தென்ன போயென் னநீ
சுவணப்பொன் னாபரண சுந்தர சுதந்தரச்
சுப்ரமண் யத்தெய் வமேற்
சொல்கின்ற நற்றமிழ்க் கருள்புரி கிருபாகரா
சோதிப்ர காச வடிவே.
9முருகன் திருப்புகழ்✓
வம்போடு லாவுமணி மாலிகைபொன் னாபரண
மும்போடுல் லாசகுவ டோகடைவ லோசிறுது
னம்பீடி ராவடிவமோ மழைக ளோகுழல்கண் வடிவேலோ
மங்காம லூரநடை யோமினிடை யோவதனம்
வண்டார்த டாகமல ரோகதலி யோதுடைகள்
மன்றூல மோகனவி காரகுண மோடிகள்செய் மடமானார்
கொண்டாடு பாசவலை யாலுழல் செவ்வாயமிர்த
முண்டய்கை நீதியற நூல்களறி யாதபடி
திண்டாடு மாடுமனை யாளர்தலை வாசலெதிர் திரிபோதில்
கொஞ்சோலை மீதெழுதுத் யாககவி பாருமுல
கஞ்சாத வீரவிஜ யாகர்ணவு தாரவென
வுஞ்சொலி நீளவிப காரகவி பாடுதொழி லுழலாமல்
உன்பாத சேவைதரு வாயரகரா பரம
கெம்பீர கோலவத னாசமைய மீதருள்செய்
தன்பாத மேகெதியே னாநினைவி லாதவரந் தருவாயே
ஒண்காத லோடுகளிர் கானுலவு மாதுளது
கண்பார்கிர் பாகரிசு சீலிகுயி லேமனதி
லெண்சேர்த யாளமுட னீயெனவம் மாதுதருந்
தினைமாவை
யுண்டேழின் மாமண விநோதநல் விவேககுக
பண்டார ரூபகர சேவல சதாபுவன
விண்டோர் தயாளகவ னாமுருக தேவநய
குணவாழ்வில்
ஒண்டாத பேயர்குலை காரர்தடி மூடர்கள
சண்டாளர் ……… மலப்
பெண்டாளு லாவுகழு காசலவி சேஷமுயர்
பெருமாளே.
10இடும்பன் வணக்கம்✓
குடவயிறுகு லுங்கிடப் பூரணவி
கடகவளனு டன்பிறப் பாலுரக
வெரினடனமி டுஞ்சொலிப் பூர்திமயி
லுலவமிர்தவு டம்பகற் பூரக
திடகுழகதொ ழும்பருச் சாடனச
ரணகருணைவி ளங்குபத் மாசனசு
ருதிவரதப்ர மன்செவிக் கோதுப்ரண
வசரவணவி ளம்பரத் ரோணகர
கடகளிறுக லங்கிடப் போதுகுளிர்
மடுபொருதவ லங்கிர்தப் பாரதவி
ஜெயனித்யமி ணங்குசக் ராயுதம
குடநெருடனி னிடஞ்சொ லித்தார்மருக
வுடுவிகசித மின்சரக் கோலமணி
குலவகலனி டங்குறிப் பானமொழி
புகலருமைபொ ருந்தெனக் காதரமு
ருககுமரவி ரும்புநற் காவடிகொ
டிடரகலந டந்துதைப் போடுவரு
பொழுதிவடமி ருந்துனைக் காதல்பெரு
கிடவனதின முந்துதித் தேவருவி
பரகவனமொ ழுங்குறப் பேணுசெயல்
லிடவதனகு றுஞ்சிரிப் பாரணவ
ரதகழகசு ரும்பெனக் கோமளபன்
னிருநயனசு தந்தரத் தேபழம்நீ
யெனவளர ணங்கெழிற் பூதகண
துடிமுரசுமு ழங்கிடச் சூழ்பணில
தொனிபழகவி யந்தவச் ரானுபவ
னுலகமரரி லங்கிடச் சோலைதிக
ழுவணகுடி ருந்தபெட் பாலபமுன்
றடிகடக்க ரம்பிடித் தோகைமன
மடவிடயம கன்றிடச் சேவைதரு
திடகனகக டம்பனுக் கோர்த்துணையி
லிலகுசிதவி டும்பநற் பாவருளே.
11வேறு சந்தம்✓
புலவர்வி ருப்பக்ரு பாகரப் பூக்கழற்
புனிதக டப்பக்க லாமயிற் கூத்தினிற்
புடவிக டப்பப்ப ணாமூடிக் கூச்சலிற்
புரசெமி திப்பெட்ப யிராவதத் தார்க்கரு
டலைவனெ னப்பத்ம தேவனைப் பார்த்திது
ததிப்ரண வத்திற்ற ராதரத் தார்ப்பர்ய
தயிரிய சிருஷ்டிப்ர யோசனத் தீர்க்கசொற்
றகைமைகொ டெற்குச்சொல் வாயெனக் கேட்கவே
புலனல னற் றுச்ச ளாமிடப் பார்ப்பவ
புயலை நடத்தப்பு லோமிசைக் கேற்பவன்
புதல்வி மணப்பக் குதூகல ஸ்ரேட்டர்கள்
புகழரு மைக்குக்கு டாவுெனத் தோத்திரம்
குலவுக ரத்திற்ப்ர மாதிடச் சேட்டையின்
குணமறு குட்டிற்ற னாண்மையைத் தீர்ப்பவன்
குழகன கத்திற் சதாநமைக் காப்பவன்
குமரி மணிக்கொற்ற வேலினைப் போற்றுவாம்.