முருகன் App
கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத்தமிழ்
தவத்திரு சிதம்பர சுவாமிகள்
சிறுதேர்ப்பருவம்10 / 10
கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத்தமிழ் · தவத்திரு சிதம்பர சுவாமிகள்

சிறுதேர்ப்பருவம்

92✓
ஞான சங்கற்ப சரணார விந்தத்துணை
நயந்துளே மெம்ம னோர்கள்
நட்புப் ரமானந்த வெள்ளத் தரங்கமெறி
நானென் னுமாண்மை போக்கி
மோனதொந் தத்தித யத்யான தொண்டுழிய
முழங்கும்பர சங்க கோஷ்ட
மோக்கப்ர யோசன முதிர்ச்சிப் பெருஞ்செல்வ
முற்றப்ர பந்த ஸ்லோக
கானவிஞ் சைத்தவள சங்கந் தொனிக்கக்
கடம்புசெஞ் சேவ லாடக்
கற்பூர தீபப்ர காசநெய் வேத்யங்
கமழ்ந்த சங்கீத வேத
தேனலம் பப்பதப நாதன் றுதிக்கநீ
சிறுதே ருருட்டி யருளே
செகரட்ச கக்கழுகு மலைமெச்ச வந்தநீ
சிறுதே ருருட்டி யருளே.
93✓
கொல்லா விசேடக் குறிப்பார்ந்த கேண்மையிற்
குன்றா ததீத செல்வக்
கோலா கலச்செப திருப்புகழ் முழங்கக்
குதூகலச் சத்ய மார்க்க
வுல்லாச வித்வசம் பன்னக்ர காசலத்
துண்மைப்ரி யாப்ர மாத
வூக்கப் புலத்யான நோக்கத் துளோர்மந்த்ர
வுட்சா டணப்ர விர்த்தி
நல்லார் நடக்கைவழி செல்லார் தமக்குமுன்
னாட்டத் தெழுந்த கருணை
நந்தா தளிப்பது நிசந்தா னெனச்சுருதி
நயப்பதுஞ் சரத மாமால்
செல்லார் குழற்றிகழு மாதேவி செல்வநீ
சிறுதே ருருட்டி யருளே
செகரட்ச கக்கழுகு மலைமெச்ச வந்தநீ
சிறுதே ருருட்டி யருளே.
94✓
எவ்வுலகு மெவ்வுயிரு மேனைய வெலாந்தந்த
தெள்ளுளே யெண்ணெய் போலும்
எங்கணு மிலங்கொருவ னீயே யெனப்புக
லிருக்காதி புராண மெல்லாம்
கவ்வுரக மணிகொண்ட கட்டாணி முத்தே
கடாட்சப்ர சண்ட வெள்ளக்
கர்ச்சனை புரிந்தமுகி லேசந்த ணாசாலா
கங்கா ளிருத்ர சூட்சத்
தொவ்வவிளை யாடுமயி லோட்டட்ட மாசித்தி
யொப்பிலா விடயாச் சர்யத்
துண்மையறி வானந்த நன்மைச் செழுஞ்சுட
ருதிப்பதெல் லாமுன் மாயை
தெய்வகரு ணாலய விளக்கத்வி தக்கந்த
சிறுதே ருருட்டி யருளே
செகரட்ச கக்கழுகு மலைமெச்ச வந்தநீ
சிறுதே ருருட்டி யருளே.
95✓
வானத் தெழுந்திரவி மரகதப் பாய்மா
வழக்கத் திழுக்கி லாமல்
வருபோத பாரசூர லிடிமின்னல் வான்சீலை
வழங்கத் திமிர்ந்த கொண்டல்
லீனச் செழுந்தரள மாரத்ன கோலத்
திருட்பிளம் புப்ர வேசத்
திடைநடன மிடுவுரகன் முடிசூவட சைந்துல
விறக்கைப் பறப்பு ருட்ட
கானச் சிகண்டிவிளை யாடக் கரைப்பரத
காற்றுத் தொகுப்பு ருட்டக்
கதிரோ னெழச்சூரி யன்கரக ணம்வீசுங்
கடைக்கணோக் கத்து ருட்ட
தேனத் துவண்டுளர் மலர்க்கழ லுருட்டிடச்
சிறுதே ருருட்டி யருளே
செகரட்ச கக்கழுகு மலைமெச்ச வந்தநீ
சிறுதே ருருட்டி யருளே.
96✓
உரகக் கொடிக்குரிசி லவனிடத் துள்ளார்
ஒழுக்கப் பழக்க ஞான
வுண்மையறி வில்லா தடர்ந்தங்கர் கோன்றனா
லூக்கஞ் செலுத்த பாரக்
குரல்கொக் கரித்தமரி லபிகனோ டக்கொடிய
கொலையிற் படுத்த சமயம்
குறியிற் றெளிந்தமுகில் விசயற்கு ளாகாத
கொள்கைக் களைந் தேகிட
விரகத் தெழிற்பணில தொனியிற் சிரித்தகுரல்
வேய்வைத் தவாய் விசேட
விமலத் துணைக்கடவுள் மருகக்ரு பாநயன
மிளிர்சர்க் கரைக்கு ணாளா
திரபக்க ருக்குசித பரமாத்ம நன்மையே
சிறுதே ருருட்டி யருளே
செகரட்ச கக்கழுகு மலைமெச்ச வந்தநீ
சிறுதே ருருட்டி யருளே.
97✓
சோதி ரத்ன மணியே கடப்பமலர்
சூழ்ப கட்டு மகலா
தூய ருக்மணி சகாய சொற்கவட
தூல கிருஷ்ணர் மருகா
ஆதி மத்தி முடிவார் குறிப்பவ
ரராத டித்த மயிலோன்
ஆழ்கடற் குலவு மேழ்புவிக் குறான
தாசை வைத்த சிறியேன்
மீது தித்த கருணா கரச்சுடர்
விடாவி னக்கு நிகராய்
வீதி லட்சண விலாச சப்பர
விமான முத்தி தருவாய்
சேதி யெற்குரள் சுதாவெ னப்புகல்
சிவால யக்க டவுளார்
தேடு சுப்ரமண்ய மேஜொ லித்தசிறு
தேரு ருட்டி யருளே.
98✓
சேவலுக் குரிய சேவகக் குமர
சீர்செ ழிக்கு மணியே
தீன ரட்சக தடாக சட்டக
திடாவி சித்ர வடிவேல்
காவி வஸ்த்ர செபகா வடிப்பஜனை
காண திர்ஷ்ட முடையார்
காரணக் குழக வார ணக்கொடி
கடவு கட்ட ழகனே
நீவ சிப்பது சதாதி ருக்கழுகு
மாம லைப்ப தியிலே
நேசம் வைப்பது மகாவி ருப்படியார்
நியாய சித்த மதுளே
சேவை யைத்தருப வாகு றத்திகுல
தீப பொற்ச ரணனே
சேயொ ளிர்ப்பவள தூணி றுத்துசிறு
தேரு ருட்டி யருளே.
99✓
பூத ரப்பகடு லாவெ மக்கொடியர்
போரி டற்கு வருதற்
போது வெற்றிவடி வேல்பி டித்தவர்
புகாதெ னக்கெதி ரில்வா
சோத ரத்திபர் விசாசு சற்குண
சுகாகு றத்தி கணவா
தோகை யைப்பரி யதாய்ந டத்திய
சுராண சர்க்கி றைவனே
வேத ரத்னமணி யேவிளக் கினொளி
யேகெர் வக்கெள சிகர்
வேள்வி யைச்செய விடாத ரக்கிவரு
வீர்ய் மட்ட சிலையார்
சீத ரர்க்குமரு காதி கட்டுமுரு
காசெ பத்த ழகனே
சேயொ ளிர்ப்பவள தூணி றுத்துசிறு
தேரு ருட்டி யருளே.
100✓
கோல தண்டரள மாலை மங்கள
குமாரி குஞ்ச ரிமகா
கோவிலும் பெரிய கோபுரங் ககன
கூட மண்ட பசபா
வேலு மந்த்ரவிதி வேதமும் பயில
வேணு மென்று நினையா
வேளை சந்தன விபூதி குங்கும
விவேக முந்த ருபவா
ஞால சம்ப்ரம நவீன சுந்தர
நமோ கடம்ப மணியே
ஞான ரஞ்சித விமான துங்கமயில்
நாட கம்பு ரிபதா
சீல விஞ்சைவச னாமிர்தங்குலவு
சீரி ளங்கு மரனே
சேய சந்த்ரனொளிர் வாழ்வ மைந்தசிறு
தேரு ருட்டி யருளே.
101✓
கோமளம் புனைகுசால் விளங்கு குழற்
கோதி ளங்குயி லினாள்
கூவ விம்பமுலை தாவெ னுங்குரல்
குலாவி டுஞ்ச மயமே
மாமன் வந்தன ரடாக டம்பவென
வாரி டுங்கர மதால்
வாய்மு கந்துமடி மீதி ருந்துமணி
மாலை கொண்ட பொழுதில்
நீம கிழ்ந்திடவும் நான்வ ணங்கிடவும்
நேர்மை யும்பெருகவே
நீற ணிந்துசிவ பூசை யும்புரிய
நீதி யின்கிரு பையால்
சேம முஞ்சரண சேவை யுந்தரு
தியாக நெஞ்ச தனே
சேய சந்த்ரனொளிர் வாழ்வ மைந்தசிறு
தேருருண்ட தருளே.