கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத்தமிழ்
தவத்திரு சிதம்பர சுவாமிகள்
செங்கீரைப்பருவம்2 / 10
கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத்தமிழ் · தவத்திரு சிதம்பர சுவாமிகள்
செங்கீரைப்பருவம்
12✓
காமக்க டுங்கனலின் மாய்கைக் களங்கமுறு
காற்றெடுக் கப்ர பஞ்சக்
கவலைத் தடாகத்தி லுழலக் களேபரக்
கன்மப்ர பல்ய மூளத்
தாமக்க ளொடுசென்ம சஞ்சிதப் பின்னல்போற்
றக்கசண் டாளம் வளரச்
சலியாத பேரின்ப சாகரம கான்கடன்
சங்கட மியாவு மொன்றாய்
நாமக்க டாமுடித் ரோக ராகப்புவி
நலிந்தோ ருதார லோப
நாட்டத் தியக்கமுறு வாட்டக் கலக்கமற
நம்பிக்கை கொண்டு பேணச்
சேமக்கு பாகரசெ பத்தைக்கொ டுக்கும்நீ
செங்கீரை யாடி யருளே
செகமெய்த்தி டக்கழுகு மலையைப் புரக்கும்நீ
செங்கீரை யாடி யருளே
13✓
நாற்பெருங் கோட்டுக்க லங்கார மலிமுகடு
நவரத்ன மணிவி லாச
நவந்த குஞ்சரத் தருநீழ லுலவிடா
லபியோடு காத்தி ருக்கக்
கோற்பெருகி லாதவுண ரெமநாட கத்துறு
குறும்புக்கு வெருவு ராத
கோட்பாடி லாதெமது கோவொடு வியாகுலங்
கொண்டுளே மெம்மை நீயே
காப்பவ னெனத்தேவ ரிமையிலா நாட்டங்
கடாவித் துதித்து நிற்கக்
காரியம் நடக்கமன வீரிய மடங்கிடாக்
கருணைமழை பொழித யாளச்
சீர்ப்பெருமை மங்காத தெய்வக் குழந்தைநீ
செங்கீரை யாடி யருளே
செகமெய்த்தி டக்கழுகு மலையைப் புரக்கும்நீ
செங்கீரை யாடி யருளே.
14✓
மும்மைத் தராதல முகூர்த்தப்ர சன்னமும்
மூர்த்திப்ர யோக மாகி
முக்கட் சுடர்க்கனல் செனிக்கப் பறந்தபொறி
மூலத்து லோக நியாயச்
செம்மைக்கு மெம்மனோர் நன்மைக்கு முன்னுளோர்
செல்வச் செருக்க கல்கிலாச்
சேமங் கொடுக்குமிச் செல்வாண்டி யென்மக
டிருக்கல்யா ணஞ்செய் வனேல்
எம்மைச் சவாரிதரு நிழலரசு முடிதந்
தெமர்க்கெலாஞ் சேனா பதி
யென்றிந்த்ர பட்டங் கொடுக்கு மோகத்துட
னிருக்கிறான் முன்வா சலில்
சிம்மப் பரட்குநிக ரெல்லோரு மெய்க்கநீ
செங்கீரை யாடி யருளே
செகமெய்த்தி டக்கழுகு மலையைப் புரக்கும்நீ
செங்கீரை யாடி யருளே.
15✓
பெற்றன்னை மலைநீலி பெருவயற் றைங்கரப்
பிள்ளையா ரைக்கொஞ் சுவாள்
பிறைசூடி வுன்தந்தை பேய்கொண்ட சுடலையிற்
பொடிபூச ப்ரீதி யாலே
சிற்றன்னை கலகமிட் டேசவும் பேசவுந்
திருவோ டெடுத்த னாளிற்
றில்லைக்கு ளாடெடுத் தடிபட்டு மைத்துனன்
செயல்கண்டு மாடு மேய்த்து
சுற்றன்னம் வாங்கியுண் டலைபோதி லுனதண்ணர்
தோன்றுபுண் யத்தி னாலோ
தொண்டர்கள் மயக்கிலோ வண்டர்க டுயக்கிலோ
சோதியாய் வந்த மர்ந்தார்
தெற்றென வெழுந்தவர்கள் சூழநான் வாழநீ
செங்கீரை யாடி யருளே
செகமெய்த்தி டக்கழுகு மலையைப் புரக்கும்நீ
செங்கீரை யாடி யருளே.
16✓
பார்க்கச் செழுங்கருணை மங்காத பூதரப்
பண்டார வேட மாகிப்
பஞ்சாக் கரங்கொடுத் தண்டர்க ளிடுக்கம்
பறந்திடத் தெய்வ ஞானங்
கோர்க்குங் கடம்பார கூவிள சராசரக்
குறிப்புக் கிசைந்த மோக
குஞ்சிதப் பாதசெயல் ரஞ்சிதப் பரதநிலை
கொண்டாடு மந்த்ர கீதம்
பூக்கச் சதாகவன மங்கலச் செழுங்கதி
புகுப்பக் கலாப மஞ்ஞைப்
பொங்கரவ மும்புவன முங்கடல் நடுங்கப்
பொருப்பினில் நடித்து மண்ணோர்
சேர்க்கைக்கும் விண்ணவர்கள் வாழ்க்கைக்கும் வந்தநீ
செங்கீரை யாடி யருளே
செகமெய்த்தி டக்கழுகு மலையைப் புரக்கும்நீ
செங்கீரை யாடி யருளே.
17வேறு சந்தம்✓
தேவிக் கொருசுத னெழிலற் புதகுக
சிங்கா ரன்சீலத்
தெளிவைப் புகல்பவ ரெவரிப் படியுளர்
திந்தா வென்றாடுங்
கோவிற் பெருமைகள் குலவப் பரமர்
குழந்தா யென்றோதார்
குடிகெட் டழிவது நிசமெய்ச் சரத
குணஞ்சே ருஞ்சாமி
நாவிற் றிருவுள நளினத் தினிய
ரசந்தோ ணுந்த்யான
நசைமைத் துனன்மரு கமணிக் குமர
நயம்பே சும்ப்ரீதி
சேவற் கொடிமணி திகழ்பொற் புயசெப
செங்கோ செங்கீரை
தென்பவ ணக்கிரி மங்கள சற்குண
செங்கோ செங்கீரை.
18வேறு சந்தம்✓
காக்குந் திடசட கருணைப் புணரி
கலந்தே தொண்டாளர்
ககனப் பெருவெளி கதுவத் துணைபுரி
கந்தா முன்வாவா
பூக்கப் பழகெழில் புதுமைக் கழல்புனை
பொன்போ லென்பாள்முன்
புளகத் திருநகை முறுவற் குமைமகிழ்
பொங்கே சிங்கார
மாக்குஞ் சிறுவனின் னழகைக் கடைவிழி
யன்பே கொண்டோபார்த்
தமையக் குமர சரவணக் கொலுவி
லமைந்தார் சந்தோஷஞ்
சேர்க்குங் கதிர்மணி சிவனச் செசுப
செங்கோ செங்கீரை
தென்பவ ணக்கிரி மங்கள சற்குண
செங்கோ செங்கீரை.
19வேறு சந்தம்✓
மார்பா டக்கர மணியா டக்கர
வளையா டக்கடல்சூழ்
மண்ணா டத்தரு விண்ணா டச்சிகை
மலரா டச்சிகிகள்
சீரா டப்பத செயலா டப்புரி
செபமா டக்கமலத்
திருவா டத்தரு சிவனா டத்துதி
திடமா டத்தமையன்
போரா டச்செறி புலனா டச்சட
பொடியா டத்தருவாள்
புகழா டக்குறள் புடையா டப்பல
பொருளா டப்பவளத்
தேரா டக்கெணி தெளிவா டற்புத
செங்கோ செங்கீரை
தென்பவ ணக்கிரி மங்கள சற்குண
செங்கோ செங்கீரை.
20வேறு சந்தம்✓
வதனமி லகுபவ ளமுறுவ லிளநகை
வரிசை புரிந்தாட
மதுரம ழலைமொழி வளரந டனகுரல்
மயிலெதிர் நின்றாட
மதியிர விபிருகு கலகமு னிவனரன்
மகனிவ னென்றாட
மறைவிரி பொருளதி சயமதி சயமென
மகிழொடு நின்றாட
துதிபர கெதிக்ருபை புரிவிம ரிசைவளர்
துளபனும் நின்றாட
தொழிலொடு கமலம் துறைபவ னுளமலி
துணையுட னின்றாட
அடலவு ணர்கள்குல மினிமுழு தழியுமென்
றாடுக செங்கீரை
அரிமகள் மரிமகள் கிரிமக டுணையென
வாடுக செங்கீரை.
21வேறு சந்தம்✓
திலகவ னிதையர் விளரியிசை யுடையர்
செறிந்தார் நின்றோர்பால்
சிறுநகை புரியம ருவுசுர்தி வழமைசி
றந்தார் நின்றோர்பால்
பலகலை தெளிபவ ரரவுல கரசர்
பணிந்தார் நின்றோர்பால்
பகடெம னொடுமய னயனிர விமதி
பயந்தார் நின்றோர்பால்
கலியுக வரதக ருணைமழை பொழிசெயல்
கண்டார் நின்றோர்பால்
கரதல துடிமுழ வதிர்தொனி நிருபர்
கனிந்தார் நின்றோர்பால்
அலகில தரகர வெனுமொலி மகிமையி
லாடுக செங்கீரை
அரிமகள் மரிமக கிரிமக டுணையென
வாடுக செங்கீரை.