கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத்தமிழ்
தவத்திரு சிதம்பர சுவாமிகள்
முத்தப்பருவம்5 / 10
கழுகுமலை அருள்மிகு சுப்பிரமணியக் கடவுள் பேரில் பிள்ளைத்தமிழ் · தவத்திரு சிதம்பர சுவாமிகள்
முத்தப்பருவம்
42✓
முடங்கன் மதிய மிழைத்தவெயில்
முயற்றீங் கற்று முடித்தபிரான்
முறுவற் காட்சி குதுகலிப்ப
முனியத் தீய்த்த முப்புரங்க
ளடங்கப் பார்த்த பார்வையினா
லழியா தழியு மென்றுலகி
லாண்மைக் கோப மாய்கையிலா
தருளிற் குளிக்கு மடியவர்போல்
வடங்கொஞ் சாரப் பூண்முலையாள்
மகிமைப் புரக்கு மகிலாண்டாள்
மடிமீ திருந்து முத்தமிட
மகிழ்ச்சி கூர்ந்த கும்பமுலைக்
குடங்கை சேர்த்துப் பால்கொடுக்குங்
குழந்தாய் முத்தந் தருகவே
கொற்றக் கவிகை செழித்தகழுக்
குன்றே முத்தந் தருகவே.
43✓
வாவா முருகா சிறுகுழந்தை
வடிவே வுன்தாய் மாமன்வந்தார்
மயிற்குஞ் சிதுபார் நறுங்கதலி
வாழைக் கனியு மாங்கனியுங்
கூவாச் சேவற் குஞ்சுமுன்கை
கொடுக்கும் படிக்குக் கொண்டுவந்து
கொடுத்தா ரென்று கூவிநிற்குங்
கோதை யகிலாண் டவட்கெதிரே
பூவா முறுவற் பூத்திடப்பின்
பூத்த முறுவ லோடுகண்ணைப்
போத்தி நடக்க முத்தமிட்டுப்
பொறுக்கென் றெடுத்த சீராளா
கோவே மணியே குருபரனே
குமரா முத்தந் தருகவே
கொற்றக் கவிகை செழித்தகழுக்
குன்றே முத்தந் தருகவே.
44✓
ககன வெளியி லடியவர்பாற்
கருத்துக் கோட்டை யிட்டுமனக்
காலை நிறுவிப் புலனைந்தின்
கட்டுக் கதவல் நிலையாக்கி
செகமீ தீயா லோபகுணச்
செருக்கைச் செகுத்த வைராக்யத்
திடத்திண் கொடியா லலங்கரித்துச்
சீர்த்தி மணிகள் சேர்மாட
மிகவுண் டாக்கி மெய்ஞ்ஞான
விளக்கைப் பொருத்தி நிட்டைநிலை
விலகா திருக்குந் திருவுளத்தின்
மெத்தை விரித்து விளையாடுங்
குகனே வுமையாள் சிறுகுழந்தைக்
குமரா முத்தந் தருகவே
கொற்றக் கவிகை செழித்தகழுக்
குன்றே முத்தந் தருகவே.
45✓
அப்பா வண்ணன் றப்பிதங்க
ளதிக மென்னக் கயிலைவள
ரய்யன் கேட்கக் கடலைபொரி
யப்ப முருக்கு தோசைவடை
யொப்பும் போளீ யெள்ளுண்டைக்
கூரார் சிரிக்கப் பாதையின்னின்
றுண்டா னென்ற போதரனா
ருண்மை தானோ கணபதிநீ
செப்பா யென்ன யிவன்குறத்தி
தினைமா வுண்டா னென்னவுமை
சிரிக்க நறும்பூங் கொம்பரெனச்
செழிக்குஞ் செழியன் பொற்பாவை
குப்பென் றெடுத்து முத்தாடுங்
குமரா முத்தந் தருகவே
கொற்றக் கவிகை செழித்தகழுக்
குன்றே முத்தந் தருகவே.
46✓
அய்யா வரனே முன்பிறந்த
வண்ண னடித்தா னவன்செவியை
யடியேன் கிள்ள மறுபடியு
மவன்கண் ணெண்ணும் போதுதுதிக்
கையோ ரொம்ப நீளமென்னக்
கரத்தாற் பிடித்து முழமளந்து
காட்டச் சினந்தா னோடிவந்தேன்
கணத்தி லென்னக் கணபதியும்
வைதான் முருக னென்றுரைக்க
வடிவேல் சிரிக்க வகிலாண்ட
வல்லிக் கொடியுங் கடவுளரும்
வழக்கில் மகிழ நான்மறைகள்
கொய்பூங் கனிவாய் கொஞ்சவந்த
குமரா முத்தந் தருகவே
கொற்றக் கவிகை செழித்தகழுக்
குன்றே முத்தந் தருகவே.
வேறு✓
பொற்சதங் கைக்கனக குஞ்சிதக் கிண்கிணி
புலப்பந் திமிர்ந்த சரணம்
புந்தியிற் றோன்றுஞ் சராசர மழைக்கின்ற
பொட்டக மெனத்த ழைக்க
விற்சரத் தாமரை விநோதவத னச்செவாய்
விரல்சுவைத் திதழ்கள் குவிய
வெண்ணகைப் பனிமுறுவல் பூத்துநான் மறைகுழற
வித்வப்ர சங்க ஞான
கற்சரப் பன்னிரு கரக்கங் கணஞ்சொலி
கபீனகுஞ் சந்து லங்க
கந்தப் பசுங்குழவி மழலைப் பசுந்தேன்
கரும்புக்கு வார்த்த நீர்போல்
மற்றசரச் சிலைகொண்ட மங்கைதா லாட்டிலெமை
வாழ்விக்கு முத்த மருளே
மன்னர்க்கு மதுரைவளர் தென்னார்க்கு மரபிலக
வைத்தவோர் முத்த மருளே.
48✓
முகில்முழங் கக்ககன வெளியுலா வக்கனக
மோகனஞ் செறிகோபுர
முட்டப் பறந்ததங் கக்கொடி மரத்தடி
முருந்தின் சிகண்டியூரல்
செககா வடிச்சன்னி தித்தொண்ட ரின்பஞ்
செழித்திடுங் கழுகாசலச்
சேத்ரபஞ் சாக்கர முகர்த்தப்ர மானந்த
செங்கைப்ர சன்னவடிவேற்
பகவசங் கற்பப்ப தாம்புய கிர்பைக்கடற்
பண்டார மென்றதீத
பஜனாமிர்தத் தொனிமிர் தங்கசெய கண்டிவிண்
பார்த்திபர் முழங்கல்செய்ய
மகிமைகொஞ் சிக்குலவு பரலோக துணைஞான
வள்ளலே முத்தமருளே
மன்னர்க்கு மதுரைவளர் தென்னார்க்கு மரபிலக
வைத்தவோர் முத்தமருளே.
49✓
புள்ளிக் கலாபமயி லுஞ்சேவ லுங்கருணை
பூத்தவை தீகசெல்வப்
பொட்டகத் தெய்வக் கொழுந்தே கடம்பம்
புனைந்தசெல் வச்செருக்கே
வெள்ளிக் கிரிக்கடவு ளுள்ளுக் கிளர்ச்சிதர
விண்ணுளோ ரரசுவாழ்க
வேண்டிப் பிறந்தமுரு காண்டிக் குகாகங்க
வெற்புக்குண் டானமணியே
தெள்ளத் தெளிந்ததினை மாவுண்ட வாயனே
செக்கர்ப்ர காசவடிவே
தெட்சண சடாமகுட லட்சணக்ரு பாகரி
செகத்திற் சமர்த்திகொங்கை
வள்ளத்தி லமுதுண்ட மழலைப் பசுந்தேன்
மலிந்தவாய் முத்தமருளே
மன்னர்க்கு மதுரைவளர் தென்னார்க்கு மரபிலக
வைத்தவோர் முத்தமருளே.
50✓
வெள்ளப் பெருக்குற்ற கடலைச் செகுத்தமுனி
வித்வப் புகழ்ச்சி பொங்க
வீரப்ர தாபத்தி லுபதேச கற்பக
விளக்கே விளக்கி னொளியே
குள்ளக் குறட்கன்ன மிட்டமீ னாம்பிகை
குடக்கொங்கை யமிர்த மூரக்
குமுதத்தை யழகான பவளத்தை யொத்தவாய்
குறுநகைச் செம்மை காட்ட
துள்ளித் திரிந்தமயிலுஞ்சேவ லுங்கனக
தோரணக் காட்சி தோன்ற
சோதிக்கு மவுணர்கள னீதிக்கு மறுமுகத்
தோன்றலாய் வந்து தித்த
வள்ளற் பெருக்கே மகாசன விளக்கே
வணங்குவோர் முத்த மருளே
மன்னர்க்கு மதுரைவளர் தென்னார்க்கு மரபிலக
வைத்தவோர் முத்த மருளே.
51✓
பொற்பதிக் கன்னியர் குழாஞ்சுற்ற நடனப்
பொலன்கொடி துவண்ட தென்ன
போர்த்தமுத் துக்கவிகை காத்தசித் ரக்கங்க
பூதர விசாக ஜோதி
விற்பொலி கரம்பனீ ராறுமுக முங்கனக
விண்ணாட்டு மங்கை குறவர்
மின்பாக நகர்வலந் தோன்றுநா ளஞ்சலி
விளங்கும்ப்ர காச மான
கற்பதித் துலவுமுடி ராவணன் பருவதங்
கைவேழ மெகின பாய்மா
கதிமணிப் பல்லக்கு புட்பக விமானங்
கலாபமயிற் குறளி லங்கு
மற்புயக் குருபீட மாணிக்க தீபமே
வள்ளலே முத்த மருளே
மன்னர்க்கு மதுரைவளர் தென்னார்க்கு மரபிலக
வைத்தவோர் முத்த மருளே.