முருகன் App
மயூரகிரிச் சண்முகநாதர் பிள்ளைத்தமிழ்
மழவராயனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்
அம்புலிப்பருவம்7 / 10
மயூரகிரிச் சண்முகநாதர் பிள்ளைத்தமிழ் · மழவராயனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்

அம்புலிப்பருவம்

62✓
எண்டிசை விளங்கவே யத்திரிலோ சனமீதி
லெழுதலான் முழுது மலைவா
யிருந்துற் பவித்தலாற் புகர்முகத் தழைசெவி
யிபத்துடன் றோன்றி வரலான்
மண்டலந் தனிலெவரும் வந்துதொழு மகிமையால்
வளருமுறு முகுள மெதால்
வானவர்க் கமுதங் கொடுக்குந் திறத்தினான்
மருவுகுவ லயமகிழ் தலால்
ஒண்டிறற் கார்த்திகைப் பெண்கண்மன மகிழவே
யுவகைதர லாலவ னிமே
லொய்யார வல்லித னிடத்தின்பு செய்தலா
லொளியினா லிரவொழி தலால்
அண்டர்நா யகனுடன் சரிசொல்ல லாமுனையு
மம்புலீ யாட வாவே
அகண்டவடி வாகிய சிகண்டிமலை யாதிபனொ
டம்புலீ யாட வாவே.
63✓
பமரமிடு கடல்கடு மறுகக் கலக்கும்
பணைப்பொற் றிருக்க ரத்தாற்
பாரகிரி யுங்கண்ட போதுடல் முருகிப்
பயப்படச் செய்யும் வடிவால்
சமரமிடு சிங்கமுங் கீழ்ப்படக் கடகந்
தரிக்குந் திருச்சி றப்பால்
சக்ரவா ளக்கிரியும் வடவரையு மொருகணந்
தனிலே வலஞ்செய் கையால்
நமரனுட னுமையவளு மிதமகிழ் தருசிரோ
ரத்னமென மேவ ருதலால்
நாடொறுங் கலையா னிரம்பலால் வாரமெந்
நாளுமக லாத வெழிலா
லமரர்நா யகனுடன் சரிசொல்ல லாமுனையு
மம்புலீ யாட வாவே
அகண்டவடி வாகிய சிகண்டிமலை யாதிபனொ
டம்புலீ யாட வாவே.
64✓
ஓகையா லிருசிறை யடித்துநெட்டுடலமங்
குதறியே பதறி வானாட்
டும்பருஞ் செவிடடப் பகுவாய் திறந்துநெட்
டொலிகொண்ட கூக்கு டப்பூந்
தோகையா டிடவுனது திருவீதி நீவந்து
தோன்றுவெண் பாற்க டலுமே
சூழப்பூ லிங்கக் கடுங்கனற் பொறிசிந்து
சுடர்வேலு மிழ்ந்த தெண்ணீ
ரீகையா லுயர்குன் றெடுத்தருள் பரஞ்சுட
ரிளஞ்சடை யிவன்க ரத்தா
லிலுக்கவித் துருமத் திளங்கொடியி தாமென்ன
விலகுமொரு வாகு புரிவா
யாகையா லிவனன்பு வேண்டிமுத் தையனுட
னம்புலீ யாட வாவே
அகண்டவடி வாகிய சிகண்டிமலை யாதிபனொ
டம்புலீ யாட வாவே.
65✓
கனககிரி ரசிதகிரி நிகரான வுதயகிரி
கடினகிரி திரண கிரியாம்
கபடகிரி யாகிய க்ரவுஞ்சகிரி நிர்த்தூளி
கண்டதே சாட்சி யன்றோ
தனகனக வஸ்துவா கனபுஷ ணப்ரபல
சௌபாக்கிய மேநி றைந்து
தருசுதா மண்டலமும் விண்டல விமானமுந்
தண்டா துயர்ந்து பாரிற்
பனகனுட னெளிமயி லெனவடிவு பெறுசூர
பத்மனுள மகிழ வந்த
பாரமா மேருவெனும் வீரமா கேந்த்ரபுரி
பட்டபா டறியா ததோ
அனவரத மிவனுறவு வேண்டிமுத் தையனுட
னம்புலீ யாட வாவே
அகண்டவ டிவாகிய சிகண்டிமலை யாதிபனொ
டம்புலீ யாட வாவே.
66✓
பாதால லயனான அசுரேந்த்ரன் மகனதவு
பாலகன் சாள ரத்திற்
பதித்துக் கதிக்கின்ற கண்ணாடி யெனவைத்த
பாரவன் சிறைவி டுத்தான்
ஈதலான் மூவொன்ப தானமனை வியரிலோ
ரேந்திழை வனம்பு குதவே
இதயங்க லங்குநின் சஞ்சலந் தீரவே
யிருமூன்று மனைவி தந்தான்
காதலால் வளர்சிகா மணியென்று வைத்துனைக்
கதிரொளியி னான்ம ழுங்கிக்
கலைகண்ட கலைதன்னை நிலைகண்ட கலையெனக்
கருணாக டாட்சம் வைத்தான்
ஆதலா லிவனுறவு வேண்டிமுத் தையனுட
னம்புலீ யாட வாவே
அகண்டவ டிவாகிய சிகண்டிமலை யாதிபனொ
டம்புலீ யாட வாவே.
67✓
தொல்லைப் பெருங்கிரிகள் சுற்றியலை யாமலே
துருவபத மும ளிப்பான்
சுந்தரமி குந்தவுடலந் தனிலிருந் துந்திருள்
சுரந்தம றுவுந்தொ டைப்பான்
செல்லைப் புகழ்ந்திடுசி கண்டிக்கு நின்பகைச்
செம்பாம்பு பழிகொ டுப்பான்
தினமுமுன துடலருந் தாதுதே வர்க்குநகை
செய்துகிள் ளாக்கை யருள்வான்
எல்லைப் பொரும்படிக் குனதுகிர ணங்களுந்
கினிதான சுடர ளிப்பான்
இருபட்ச மும்வளரு மொருபட்ச மேபோல
இன்பமொடு பட்சம் வைப்பான்
அல்லலப் பொருங்குழலி வல்லிக்கு வாய்த்தவனொ
டம்புலீ யாட வாவே
அகண்டவடி வாகிய சிகண்டிமலை யாதிபனொ
டம்புலீ யாட வாவே.
68✓
கஞ்சமல ராகுமுன் னெஞ்சம் பகீரெனக்
கதிர்வேன் முனைக்க ளிப்பான்
கடியசே வற்கொடிக் குன்னைநவ நீதவெண்
கவளமென வேகொ டுப்பான்
கொஞ்சுசும யிலுக்குனது நெஞ்சம் பிளந்துயிர்
குடிக்கக் கொடுப்ப னதனாற்
கோரநவ வீரர்க்கு வீரவெண் டயமெனக்
குரைகழற் றாளி லணிவான்
வஞ்சியர்க ளபரஞ்சி மலையில்வளர் குறவஞ்சி
மணவாளன் வரவ ழைத்தால்
வந்துவிளை யாடாமல் வாராதி ருந்தவுன்
மதியென்ன மதிம தியமே
அஞ்சலென வபயங் கொடுக்குமென் னையனுடன்
அம்புலீ யாட வாவே
அகண்டவடி வாகிய சிகண்டிமலை யாதிபனொ
டம்புலீ யாட வாவே.
69✓
கையின்வடி வேலுக்கு னுடலத்தை யேவெள்ளி
கட்டவே தகட டிப்பான்
காதிற்கு முருகுமுத் தாமென்று சேவலிற்
கட்டிவிளை யாட வருவான்
பையவே மயிலுக்கு மூக்குத்தி முத்தென்று
பார்த்துட லந்து ளைப்பான்
பாரவெங் கோட்டுக் கிடாய்க்குச் சிலம்பென்று
பாதத்தி லேய ணிகுவான்
மையலுடன் வருதெய்வ யானைக்கு மாலையிடு
மணவாளன் வரவ ழைத்தால்
வாராதி ருப்பதுவும் ஆச்சரிய மேயுனது
மதிமோச மதமல் லவோ
ஐயமில் லாமலென் னையனுட னேதினமு
மம்புலீ யாட வாவே
அகண்டவடி வாகிய சிகண்டிமலை யாதிபனொ
டம்புலீ யாட வாவே.
70✓
நிச்சயம தாகவே மித்திரன் மறைந்திட
நிலாக்களை விளங்க வந்தும்
நிரோகணிப் பெண்ணினாற் சயரோக முங்கொண்டு
நிசரோகி யாயி ருந்தும்
இச்சையொடு பிறர்மனை நயந்துகுடி லத்தோரு
மெந்நாளு மேவ ளர்ந்தும்
இதயபரி சுத்தமில் லாமலந் தக்கரண
மென்றுங் களங்க முற்றுஞ்
செச்சைப்பு யத்தினவள் விளையாட வாவென்று
திருவுளமு னக்க ளித்தால்
சென்றாடு தீர்த்தமது வந்தாடி னோமென்று
சென்னிகுவி யாத தென்னோ
அச்சப்ப டாமலென தையனுட னேதினமும்
அம்புலீ யாட வாவே
அகண்டவடி வாகிய சிகண்டிமலை யாதிபனொ
டம்புலீ யாட வாவே.
71✓
துங்கமலை மீதினி லிலங்குபொற் கோட்டினிடை
தோற்றலா மதுதூற் றலாந்
துய்யபாற் கடலென்ன வளர்சரவ ணப்பொய்கை
சூழவே விளையாட லாம்
பங்கமில் லாததே னாற்றினிரு கரையெலாம்
பழகிய நிலாவீ சலாம்
பாண்டிநன் னாடுபுகழ் நேமநாட்ட வரெலாம்
பார்க்கவே தீர்க்க முறலாம்
சங்கமெங் குங்குலவு கன்றாக்கு டிக்குள்வளர்
சாளரத் தினினு ழையலாம்
சண்முகக் கடவுளுடன் விளையாட லாநித்திய
சாம்ப்ராச்சிய முடன்வா ழலாம்
அங்கசன் மனமகிழ மேல்வட்ட மாகிவளர்
அம்புலீ யாட வாவே
அகண்டவடி வாகிய சிகண்டிமலை யாதிபனொ
டம்புலீ யாட வாவே.