முருகன் App
மயூரகிரிச் சண்முகநாதர் பிள்ளைத்தமிழ்
மழவராயனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்
தாலப்பருவம்3 / 10
மயூரகிரிச் சண்முகநாதர் பிள்ளைத்தமிழ் · மழவராயனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்

தாலப்பருவம்

22✓
உலவை தழையக் குதித்துவரு
முருமே றென்னக் குமுறயெழுந்
தோடிப் பாய்ந்து சினைகிளைக
ளுதிரத் தாவி யுறுமிநெடும்
பலவின் குடக்காய் பறித்தொடித்துப்
பசந்தே னருந்திக் குறுஞ்சுளைகள்
பகட்டிக் குழவிக் கருத்திமுலைப்
பாலுங் கொடுத்துக் குறங்கினில்வைத்
திலகுங் கரத்தாற் றலைவகிர்ந்தங்
கெடுத்து மார்போ டணைத்துமர
மேறி முழங்கும் முகில்பார்த்தங்
கிறங்கிக் கலங்குங் கவியினங்கள்
குலவு நேம வளநாட்டுக்
கோவே தாலோ தாலேலோ
குன்றாக் குடியில் வீற்றிருக்குங்
குமரா தாலோ தாலேலோ.
23✓
பயிலுங் கிளியின் பார்ப்பினங்கள்
பச்சென் றிளகி யிறுமாந்து
படர்நெட்டு டிலையின் குருத்தெழுந்த
பசுங்காய்க் கதலிக் கனிகோதித்
துயிலும் பொழிலி னிடையகலாச்
சுரும்புங் கரும்பு தனைவளைக்கச்
சூதத் தரும்புந் தளவரும்புஞ்
சோகந் தரும சோகமுடன்
வெயிலி னிளங்காற் கதிரெறிக்கும்
வேரிக் கமல முகையுமுகை
விள்ளுங் குமுதப் போதுமுறை
விளங்குந் தூணி புகக்கூவும்
குயில்சேர் நேம வளநாட்டுக்
கோவே தாலோ தாலேலோ
குன்றாக் குடியில் வீற்றிருக்குங்
குமரா தாலோ தாலேலோ.
24✓
கதிக்கத் தளிர்கள் பளபளெனக்
ககன முகட்டில் விளங்கநெடுங்
கப்பு வளரத் திசைமுழுதுங்
கவர்ந்து பரப்பி நேர்பருவந்
துதிக்கு மேலாய் மலர்சொரியச்
சுரும்பு விரும்பச் சுரந்துதலை
தூங்கு குலைக்கா யிலக்காகக்
துருவ னுலகிற்றோன்றுமுளைத்
துதிக்குந் தனிமா மரமெனவே
யோங்கு மகர னுடன்மடிய
வொருவேல் பிளக்க விருபிளவி
னொருபா தியினின் றுலகதிரக்
குதிக்குந் தோகைப் பிடரேறுங்
கோவே தாலோ தாலேலோ
குன்றாக்குடியில் வீற்றிருக்குங்
குமரா தாலோ தாலேலோ.
25✓
கோவுங் குதித்துக் கரைபுரண்டு
குமிழி யெழும்பி யலைசிதறக்
குடக்குங் குணக்குந் தெரியாது
குளிர்மா மதியுங் கோகனகத்
தேவு நடுங்கித் திசைமாறத்
திசைக்குஞ் சரமுஞ் செவிடுபடச்
செவியே கண்ணா மரசரெனச்
சிறக்கு மரவும் விழிபுதைப்ப
மேவ புறத்தண் டமும்வெடிப்ப
விபுதர்க் கரசுந் திசைமுகனும்
வெருள வடவைக் கனலடங்க
வெவ்வாய் திறந்து சிறகடித்துக்
கூவுஞ் சேவற் கொடியுடைய
கோவே தாலோ தாலேலோ
குன்றாக் குடியில் வீற்றிருக்குங்
குமரா தாலோ தாலேலோ.
26✓
தளிரு மொளிர்மின் கொடியநிறத்
தங்கத் தகடுந் துகிருமொன்றாச்
சமைத்த குறப்பெண் முகத்துரைசஞ்
சரிக மிரண்டுஞ் சஞ்சரிக்க
வொளிருங் ககனத் தரசுகந்த
வும்பர்க் கரசு னுவந்தளித்த
வொருபெண் ணரசி னிருவிழிவண்
டொருபா னெருங்க வருமரம்
களிரு முகத்தா மரையிலுறை
கருந்தே னிடச்செந் தேனருளிக்
கருணை குடிகொண் டருணகிரி
கவிமா லிகையுங் கலந்திருக்குங்
குளிருங் கடப்பந் தார்புனைந்த
கோவே தாலோ தாலேலோ
குன்றாக்-குடியில் வீற்றிருக்குங்
குமரா தாலோ தாலேலோ.
27வேறு✓
செந்தா மரைமுக வேர்வோ டிலகத்
திலகம சைந்தாடத்
தெண்டிரை யொலிமலி தண்டை புலம்பு
சிலம்புக லந்தாடப்
பைந்தார் குழையொடு சுட்டியு டன்புனை
பட்டம சைந்தாடப்
பணிலத் தொடையடர் பவளத் தொடையொடு
பண்டிப சைந்தாடக்
கந்தா குமர குழந்தா யெனவறு
கார்த்திகை கொண்டாடக்
கங்கண மிட்டொளிர் வங்கண மிட்டொலி
கடகக் கையாடச்
சந்தா டவிதழ் குன்றைக் கதிபதி
தாலோ தாலேலோ
தங்கம லைக்குயர் துங்கம லைக்குக
தாலோ தாலேலோ
28✓
அங்கந் துளுவஞ் சீன மராட
விராடங் கல்யாணம்
ஆக ரைடில்லி கொழும்பு கலிங்க
மராளங் கேரளமா
வங்கங் கோசலை காசி கிராதக
மச்சமொ டச்சீன
மகதங் குகுத விதர்ப்பங் கருநட
மத்ரங் குருதேசங்
கொங்கங் கவுடம் பப்பர நிடதங்
குச்சர மச்சிநெடுங்
குடகந் திரவிடம் வடபாஞ் சாலங்
குளுவங் காந்தார
சங்கம் புகழுங் குன்றைக் கதிபதி
தாலோ தாலேலோ
தங்கம லைக்குயர் துங்கம லைக்குக
தாலோ தாலேலோ
29✓
திரள்சங் கெறிநிதி கங்கா நதிபுனல்
சிந்துஞ் சிந்துநதி
சீகர மாநதி நூபுர மாநதி
திருமணி முத்துநதி
விரளம் புனல்செறி யமுநா நதிகா
விரிநதி யொடுகோதா
விரிநதி நருமதை நதிசர சுதிநதி
விரசா நதிகரையிற்
புரளம் பழகிய கிருஷ்ணா நதிதாம்
புரநதி சித்ரநதி
புயங்க மகாநதி வைகா நதியொடு
புவிநதி யும்புகழத்
தரளஞ் சிதறும் மதுநதி யுடையாய்
தாலோ தாலேலோ
தங்கம லைக்குயர் துங்கம லைக்குக
தாலோ தாலேலோ.
30✓
பொன்செறி கமலப் போதுறை வாவிப்
புனலூ டெழுமரசிற்
பொன்னிலை பாதிவி ழப்பகு வாயுறு
பூங்கய லாகநெடும்
வன்சிறை யுளபுள் ளினமா கக்கரை
வாயுறு பாதியுமே
வாலெயி றிலகு நிசாசர னைப்பொரு
மால்வடி வேபோல
மின்செறி யுலகத் ததிசய மிதுவென
விழியிமை யாதுமன
மெய்ப்புறு நற்கீ ரனையோ ரலகை
விரைந்து கவர்ந்திடுநா
டன்சிறை தீரத் தனிவேல் விடுகுக
தாலோ தாலேலோ
தங்கம லைக்குயர் துங்கம லைக்குக
தாலோ தாலேலோ.
31✓
வெங்கட் சுறவெறி மதுநதி யூடே
வெய்யோ னெழுபரிமேல்
வீசிய கசையென நெட்டிலை யோங்கி
விளங்கு கரும்புடே
புங்கஞ் செறிகுண சாலியி தென்றெழு
புவியும் புகழ்தரலாற்
பூரித் திலகித் தலைகீ ழாய்விழு
பொலிவுறு கதிருடே
வங்கஞ் செறியுஞ் சரவண வாவியின்
மாமறை யோர்மனைமேன்
மாட முகப்பிற் கோபுர மேனிலை
மணிமுதல் மறுகூடே
சங்கந் தவழுங் குன்றைக் கதிபதி
தாலோ தாலேலோ
தங்கம லைக்குயர் துங்கம லைக்குக
தாலோ தாலேலோ.