மயூரகிரிச் சண்முகநாதர் பிள்ளைத்தமிழ்
மழவராயனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்
சிறுபறைப்பருவம்9 / 10
மயூரகிரிச் சண்முகநாதர் பிள்ளைத்தமிழ் · மழவராயனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்
சிறுபறைப்பருவம்
82✓
அந்தமுறு கற்பகா லத்திலுரு மேறென்ன
வமரர்துந் துமிமு ழங்க
அஷ்டாத சத்தொனியு மெட்டான திகைகமுட்ட
வழுகுபல் லியமு ழங்க
மந்தரஞ் சுழலுநாண் மறிகடன் முழக்கென்ன
வானவர்க ளொலிமு ழங்க
மைக்கொண்ட லொலியென்ன விமையோர்கள் சிறுநாணின்
வலியவொலி மிகமு ழங்கச்
சந்ததமும் வெந்நிடா வீராதி வீரர்குறி
சங்கநா தமுமு ழங்கச்
சங்கிராம நாளிட்ட வேதனோ முனிவோர்கள்
சதுர்வேத வொலிமு ழங்கச்
செந்திருவி ளங்குமணி ரதமேறு சிங்கமே
சிறுபறை முழக்கி யருளே
தேவர்க்கு மானுதவு தேவிக்கு நாயகன்
சிறுபறை முழக்கி யருளே.
83✓
நவகோடி வீரர்வரு மட்டகா சத்தினா
னாற்றிசைகள் கெடிக லங்க
ரதகசது ரங்கபத சதுரங்க வர்க்கத்தி
னாற்கருங் கடல்க லங்கத்
தவகோடி யால்வந்த செயகோடி சாயவே
தாரகன் மனங்க லங்கச்
சாயாத படையென் மாயாபுரத் தவுணர்
தம்மிலே கண்க லங்க
அவகோடி பெருமவுணர் புணர்கோடி மடவார்க
ளரியகர்ப் பங்க லங்க
வருகோடி வருமசுர ருயிர்கோடி யலறவே
யந்தகன் றிசைக லங்க
சிவகோடி யவதார வடிவாக வருமுருக
சிறுபறை முழக்கி யருளே
தேவர்க்கு மானுதவு தேவிக்கு நாயகன்
சிறுபறை முழக்கி யருளே.
84✓
எண்டிசைக் குஞ்சரம் பொருபோ ரடங்கவே
யிபமுகன் போர டங்க
விமயாச லத்தில்வரு முனிவோர் தழைக்கவே
யீதிபா தைகள டங்க
வண்டிசையு நந்தாவ னஞ்செய்த வும்பர்கோன்
மணிவிரற் சேப்ப டங்க
வருபரங் குன்றின்முலை யிருபரங் குன்றான
வள்ளிக்கு மால டங்கத்
தண்டிசையு மொலிகண்டு செந்தூரி னலைசிதறு
தண்புனற் கடல டங்கத்
தானவர்கள் சூழச் சிறைக்கூட முறுசயந்
தன்மனப் பயம டங்கச்
செண்டிசையு மணிவிரற் காந்தளங் கையினாற்
சிறுபறை முழக்கி யருளே
தேவர்க்கு மானுதவு தேவிக்கு நாயகன்
சிறுபறை முழக்கி யருளே.
85✓
வானாடு தழையவே தூதுசென் றிடுவீர
வாகுநித மஞ்ச லிக்க
மலங்கா தெதிர்த்திடு மிலங்கா புரத்தசுரர்
வாதாடி வாய்ச லிக்க
நீநானெ னச்சென்று பானுகோ பனும்வந்து
நில்லாது சஞ்ச லிக்க
நின்றுமாற் குறுமவுண ருயிர்கவர விடுபடைக
ணேரான கைச லிக்கக்
கானாறு சூழ்வீர மாகேந்த்ர புரமேவு
கண்டகன் மனஞ்ச லிக்க
கங்கமங் கங்குலவ வவர்மீதி லாடிய
கவந்தங்கள் வாய்ச லிக்கத்
தேனாறு புடைபெருகு மாயூர கிரிமுருக
சிறுபறை முழக்கி யருளே
தேவர்க்கு மானுதவு தேவிக்கு நாயகன்
சிறுபறை முழக்கி யருளே.
86✓
சகடமிட வருநிருத ருடல்கிழிய விளைகுருதி
சளசளென மலைய ருவிபோற்
றரணிநதி பெருகியிரு கரைபுரள மதகளிறு
தவழுமுடல் விடுப டகுபோல்
விகடமிடு மவுணர்பணி பயிலிரத மொடுமனதின்
மிசையருள விருது கொடிதான்
விசையமகள் புனைதுகிலை நிகரொழுக வரிநுரைகண்
மிகுமலைகள் பலசி தறவே
யகடுகிழி படுபரவி மகரமென விருகரையி
னருகுவர நிருதர் முகமே
அளிகள்விழு கமலமல ரெனவிசைய மகள்கொலுவி
னலகைசில வடுப ணியவே
திகடமத முகனிருத னுயிர்கவரு மதகளிறு
சிறுபறை முழக்கி யருளே
தேவர்க்கு மானுதவு தேவிக்கு நாயகன்
சிறுபறை முழக்கி யருளே.
87✓
சங்கமு முழங்கிட நடத்தெதிர் வரும்புரவி
தங்கியதி மிங்கி லமெனத்
தந்திகண் மிதந்துவரு வங்கமென நின்றொழுகு
சஞ்சலமி ருங்க வரியா
நங்குர மிசைந்திடு பெரும்பட கெனும்படி
நடந்திடிற தங்க ளிலக
நன்குறு படம்பெறு மரங்களென வெண்கொடி
நடுங்கொடிய கம்ப மிலகப்
பங்கமற நின்றுபொரு கின்றவர் பசுங்குருதி
பைம்புனலி னின்று வரவே
பண்டுநுரை கொண்டலை மிகுங்குமிழி கொண்டுயர்
பசுங்கிடையின் மண்டி வரவே
சிங்கமுக னின்றுபொர வன்றுயிர்க வர்ந்தகுக
சிறுபறை முழக்கி யருளே
தேவர்க்கு மானுதவு தேவிக்கு நாயகன்
சிறுபறை முழக்கி யருளே.
88✓
கயமன்று பொருகின்ற விரிகொம்பு நெரிகின்ற
கதிர்கொண்ட தரள மெல்லாம்
களிகொண்டு பொரிசிந்தி விழிகொண்ட கடைதந்த
கனல்கொண்டு சமிதை யாகப்
பயமின்றி யடர்கின்ற கணைசிந்தி வலம்வந்து
படிகின்ற குருதி நெய்யாய்ப்
பகைகொண்ட நிருதன்ற னுயிர்கொன்ற வவிதந்து
பழியென்ற முளைதெ ளித்தே
நியமங்க ளொழிகின்ற வவுணன்ற னகரின்கண்
நிலைகொண்ட கலெமி தித்தே
நிலமங்கை மலர்மங்கை கலைமங்கை மலைமங்கை
நிசமங்க ளம்பா டவே
செயமங்கை மணமன்று புரிகின்ற மதகளிறு
சிறுபறை முழக்கி யருளே
தேவர்க்கு மானுதவு தேவிக்கு நாயகன்
சிறுபறை முழக்கி யருளே.
89✓
கொட்டமிடு நெட்டவுணர் கட்கடையு தித்தகனல்
குத்துமொரு மத்த கயமே
கொட்டிய மருப்பிடை தெறித்தகன லச்சசடு
கொட்புற வுதித்த கனலுந்
தக்கமிடு முக்கனலி தார்ப்பைசுர மச்சமிதை
சத்தியொடு வெட்டு நெடுவாட்
டைக்குமுட லிற்குருதி நெய்த்திரள தற்கவித
சைக்குவை யிசைக்கு மொலியே
யட்டமிடு விப்ரகுல வித்தகர் மறைத்தொனியு
தற்ருபவ பத்ம னுடலே
யத்திறமி சைத்தபத முச்சகமு மிச்சகமு
மச்சகமு மெச்ச வரிதாஞ்
சிட்டர்தொழு பத்மபத பத்தரிடர் வெட்டுகுக
சிறுபறை முழக்கி யருளே
தேவர்க்கு மானுதவு தேவிக்கு நாயகன்
சிறுபறை முழக்கி யருளே.
90✓
இலகுசரு முகினிருத ரவர்கடொனி குமுறுமொலி
யிடிமுரசு மினலும் வடிவா
ளிகலுமொரு தனுவளைதன் மகபதித னினியதனு
வெழுகணைகள் சொரியுமழையே
சலசலென நதிபெருக்கு மலையருவி யவுணருட
றனின்மருவு குருதிய தன்மேற்
றனின்முழுகு கழுகுகொடி யினமலகை முழுகவரு
சனமதனில் விழுதல் புகழே
கலகமிடு மரலிபடை யுழவரவர் மகிடமுகி
கனபகடு கயிறு கயிறே
கழனிரண களமகுட நடவுமுடி யுவகைபெறு
கடியசமர் புரியு மயினேர்
திலகநுத லருள்சிறுவ குமரகுரு பரமுருக
சிறுபறை முழக்கி யருளே
தேவர்க்கு மானுதவு தேவிக்கு நாயகன்
சிறுபறை முழக்கி யருளே.
91வேறு✓
கரையிட்ட குருதிக்குண் முழுகிக்கு லவையிட்ட
களமுற்ற கடிப்பெற்றமா
கனமொத்த முரசுக்கு ஞலையிட்டு நிணமிட்ட
கறிவைத்து வெறிபெற்றபேய்
நிரையிட்ட குருதிகள் வரிசைப்ப லரிசிக்கு
நிகரிட்ட ரியிலுற்றவாய்
நிலைபெற்ற விருதிட்ட கொடியுற்ற விறகிட்டு
நிமிடத்தி லெரியிட்டுமால்
வரையிட்ட குருதிக்குள் வடியிட்ட குடமுற்று
மதுவிட்டு விசையத்துமான்
மணிபெற்ற சரணத்தின் மலிவுற்ற பலியிட்டு
மகிழ்வுற்று லகமெய்க்கவே
திரையிட்ட புடவிக்குள் ளமரிட்ட திடசித்த
சிறுபறைமு ழக்கியருளே
தேவர்க்கு மானுதவு தேவிக்கு நாயகன்
சிறுபறைமு ழக்கியருளே.