மயூரகிரிச் சண்முகநாதர் பிள்ளைத்தமிழ்
மழவராயனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்
காப்புப்பருவம்1 / 10
மயூரகிரிச் சண்முகநாதர் பிள்ளைத்தமிழ் · மழவராயனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்
காப்புப்பருவம்
1விநாயகர் துதி✓
பூங்கமல வாவி புடைசூழ் மயூரகிரிக்
காங்கெயன்மேற் பிள்ளைக் கவிபாடத்-தேங்கி
நடக்குஞ் சரமுகத்தான் னாட்கலையைத் தாங்குங்
கடக்குஞ் சரமுகத்தான் காப்பு.
2சுப்பிரமணியர் துதி✓
பூமேவு தடங்கடல்சூழ் புவியாகி யகண்ட
பூரணமாய்க் காரணமா யாரணமு மாகிக்
காமேவு நறும்பொழில்சூழ் மாயூர கிரிவாழ்
கடவுளே நின்கவிக்குக் காப்பெவரை யுரைப்பேம்
நாமேவு கலைவாணி நாதனுக்கு மரற்கு
நளினமலர் விழியாற்கு நாகநாட் டிறைக்குந்
தேமேவு வானவர்க்கு மசுரர்பகை தடிந்த
செல்வனீ யதனானின் கவிக்குநீ காப்பே.
3வேறு சிவன்✓
வடபொலன் கரியெனு முலைக்கண் கறாதொளிரு
மதிமுகம் வெளுத்திடாது
மண்ணருந் தாதகடு பூரித்தி டாதுநெடு
மணிவயி றுளைந்திடாது
குடவலைகள் குமுறவரு சரவணையி னிலவுபொழி
கோடிசூ ரியகிரணமோர்
குலவுதிரு வுருவெடுத் தென்னவரு குன்றாக்
குடிக்குமர னைப்புரக்க
தடவரை யெனுங்கயிலை வேர்விழுந் தென்னவிடை
தவளவே திகையினாப்பண்
டனித்தங் குரித்துத் தழைத்து வெங்கட்செவித்
தறுகட்ப ணாடவிக்கார்
விடவரவ மெனுநெடிய விழுதிலக விபுதநதி
வெண்கொடி துலங்கமலர்பொன்
மிளிர்பிறை விளங்கமெய்ஞ் ஞானப் பலன்தரும்
வெண்ணிறக் கற்பதருவே.
4தேவி✓
விண்ணவர்கள் பொன்னாடு மேவவிபு தர்க்கரசு
விருதுசெங் கோனடாத்த
மின்கொடி யெனத்திகழ் புலோமசை மணிக்குழையில்
மேவுதா டங்கமிலகக்
கண்ணனிரு கண்மலர் முகிழ்ப்பநான் முகன்மலர்க்
கமலத்தில் வீற்றிருப்பக்
கார்த்திகை களிப்பவளர் சரவணப் பொய்கைவரு
கந்தனைத் தனிபுரக்க
தண்ணறுங் கமலமுங் கதலியுந் தந்துவட
தருவிளந் தளிர்தளிர்த்துத்
தண்சுரும் புலவுமாக் கோங்கரும் பிச்செவ்வி
தண்காந்தண் மலர்ந்ததுதேன்
எண்ணறுங் கிஞ்சுகம் பூத்துநற் சண்பகமு
மீன்றுகுவ லயமலரவே
யிமயா சலத்தெழுந் திமையோர் தொழப்படர்ந்
திசையுமர கதவல்லியே.
5திருமால்✓
மூரித் தடக்கையான் முசலஞ்ச சுழற்றிமத
மும்மதம் பெருகவெகுளி
முகபடாங் கொண்டுபய நிகளந் தெறித்தடரு
முனைமனப் பாகெறிந்து
கூர்ந்த வெண்கோடு கொடுமோதி வாழையின்
குலையின்வா னவரைவாட்டுங்
குஞ்சரத் துயிர்கொண்ட மாயூர கிரியில்வரு
குருபரன் றமிழ்புரக்க
வேரிச் செழுங்கமல மலர்குவிய மலரினிடை
விளரிவண் டினமொடுங்க
மேவுபர காயமுறு யோகியென மறுகூட்டில்
வீறுபுள் ளினமடங்கப்
பாரிற் படர்ந்திலகு கவளமென வெழுதிமிர
படலமுழு தும்விழுங்கப்
பரிதிமண் டலமறைய வோராழி தொடநின்ற
பச்சைப் பசுங்கொண்டலே.
6வேறு விநாயகர்✓
போரேறு கடகளிறு கொண்டலொத் தார்த்தெழ
வானேறு பரிதிரண மண்டலத் தூட்குடை
போலேறு கடுவெயில் மறைந்திடப் போர்க்கெழு
பூபாலர் தொடுசிலை வளைந்திடப் பார்த்திபர்
தேரோடு புரவிகண் மடிந்திடக் காக்கைகள்
போயேறு குருதியி லளைந்திடப் பூப்பொலி
யேரேறு துளபமுகில் பஞ்சவர்க் காப்பொர
மூவாறு தினமமரு மண்டிசைப் போர்க்கதை
யேடாக வடவரை யிலங்குபொற் கோட்டினி
லேழ்பூமி தொழுமுக மிசைந்தநற் கோட்டினை
நாராச மெனவெழுது குஞ்சரத் தாட்டுணை
யேநாளு மனதினிடை யஞ்சலித் தேத்துதும்
நேரேறு நவமணிசெய் பந்தரிற் கார்த்திகை
மானாரொ டரமகளிர் மங்களத் தாற்பொரி
நீடாழி மணிசிதற முண்டகப் பூப்பொதி
நீர்வேதன் விதிமுறை சடங்கிடப் பாட்டிசை
மாறாது தரவமர துந்துமிக் காட்டொலி
நீடூழி யுருமென முழங்கிடப் பூட்டிய
வாரேறு களபமுலை குங்குமச் சேற்றுடன்
மார்பூடு வரமுக மிலங்கிடப் போர்த்தொழின்
மாறாது விழியிணை புயங்களைப் பார்த்திட
வானாட னருளமர குஞ்சரிப் பேட்டுடன்
நாணோடு தலைவளைய வுந்திருப் பூட்டிய
மாயூர கிரியில்வரு கந்தனைக் காக்கவே.
7வேறு
இலக்குமி✓
கண்டேறு சொற்கண்டு தத்தையடை யத்தணங்
கண்டகம லம்பயமுறக்
கலகவிழி யிணைகண்டு வரிவண்டு மதுவுண்டு
கருகியுடல் பதறவடிவு
கொண்டேறு பச்சைப் பசுந்தோகை சிறையினொடு
கொடியவன மடையவந்தக்
குறமயின் மணம்புணர் மயூரகிரி முருகனைக்
கூறுமென் றமிழ்புரக்க
வண்டேறு சுரிகுழற் கற்பகந் தனைநல்க
வதனமதி யத்தையருள
மார்பிடங் கொண்டுவட வரையைச் சினந்ததன
மதவார ணத்தையுதவப்
பண்டேறு கிஞ்சுகப் பூங்குமுத வாய்நறும்
பவளமமு தினையளிக்கப்
பாததூள் பலகோடி யரமகளி ரைத்தரப்
பாற்கட லுதித்தமயிலே.
8பிரமன்✓
விண்டலத் துடுவினம் பொலுபொலென் றுதிரவுரு
மேறெனக் கெர்ச்சித்துநீள்
வெடிவால் விதிர்த்துவெம் பகுவாய் தி றந்துகடு
விழியினற் பொறிகள்சிதற
அண்டலர்க ளெனவந்த வானவர்கள் கடகளிறி
தாமெனக் கவின்மடங்க
வாருயிர் கவர்ந்தருண் மயூரகிரி வாழுமென்
னையன்முத் தமிழ்புரக்க
பண்டிதழ்கள் குவியாது வண்டுகள் புகாதுநீள்
பங்கப்ப டாதுநாளும்
பரிமளம் வாடாது வருமாய னுந்தியம்
பங்கேரு கத்துதித்து
மண்டலமு மண்டபகி ரண்டநவ கண்டமும்
மறிகடலு மொருநொடியிலே
மனத்திடை நினைத்துப் படைத்துக் களித்துநான்
மறைதொழ வருங்கடவுளே.
9வேறு
கலைமகள்✓
சேற்றுக் கமலத் திடைபுகுந்து
செழும்பா சடையின் குருத்தருந்தித்
தெண்ணீ ருழக்கி நீர்விடுத்துத்
தெறிக்கு முலைப்பாற் புனிற்றெருமை
தாற்றுக் கதலிக் குருத்தொடித்துத்
தனித்துக் கறித்துச் சண்பகத்திற்
றனிக்கண் வளர்மா யூரகிரித்
தலைவன் மீதிற் றமிழ்புரக்க
போற்றற் கரிய புரந்தரனும்
புணர்மின் கொடியாம் புலோமசையும்
புகழ்வா னவரு மரம்பையரும்
பொருந்தாச் சிறையிற் போகாமற்
கூற்றுக் கிணையாய் வடிவெடுத்த
குடக்கா தனுக்கு விழிகடுயில்
கூற வரந்தா வெனநாவிற்
குடிகொண் டிருந்த குலமயிலே.
10வேறு
பலதேவர்✓
வீடாறு பெறுமுதல்வன் மற்றொப் பிலாத
வேதாவை யொருபிரண வத்துக் குநீயும்
மேலான பொருளுரை யெனக்குட் டுநேம
நாடாள னிதமயி னடத்திக் குலாவு
மாயூர கிரிவரு குறத்திப் பெணைய
னாடோறு மனமகிழ் கவிக்குச் சகாயர்
வாடாத திதியுதர கர்ப்பத் தினூடு
போயேக வடிவெழு மருத்துக் களாக
மாறாடு குலிசனுயர் சொர்க்கத்தில் வாசர்
நீடாழி பெருகுதிசை யெட்டுக்கு நாதர்
மேனாளி லதிதிமுறை யிற்பெற்ற பாலர்
நேராக வருமமரர் முப்பத்து மூவரே.
11வேறு
இதுவுமது✓
குதிக்குந் தரங்கத் திரள்கொழிக்குங்
குளிர்மா மணிவெண் ணிலவீனக்
குலவுங் குமுத முகையவிழக்
கோல வரிவண் டினந்தொடரக்
கதிக்குந் தேனா றெனப்பெருகிக்
கழனி தோறும் பயிர்வினைக்குங்
கனஞ்சேர் துங்க மலையில்வளர்
கதிர்வேன் முருகன் கவிபுரக்க
உதிர்க்குங் கிரணன் றிரணமென
வொளியே பரப்பி யிறுங்காலத்
துருமே றென்ன வுருத்தெழுந்தங்
கொருமா மரத்தி னுடல்பிளந்து
துதிக்கும் வேலுந் திகழ்மயிலுந்
துடிசேர் சேவற் கொடியுநுதந்
துலக்கு நவவீ ரருமடுபோர்
தொடங்குந் திடஞ்சே ரிடும்பனுமே.