மயூரகிரிச் சண்முகநாதர் பிள்ளைத்தமிழ்
மழவராயனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்
முத்தப்பருவம்5 / 10
மயூரகிரிச் சண்முகநாதர் பிள்ளைத்தமிழ் · மழவராயனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்
முத்தப்பருவம்
42✓
மந்தரஞ் சுழலாது வாசுகி யுடம்பெலா
மற்றுந் தழும்புறாது
வானவர்கள் கரதலங் குருதிசே ராதவுணர்
வன்கையுஞ் சேப்புறாது
சுந்தர மிகுந்திடு முகுந்தனர விந்தநிகர்
துணைவிழி பிதுங்கிடாது
சொரிதரள மெறிதிரை சுருட்டுபாற் கடல்கடு
சுற்றுங் கலங்கிடாது
கந்தரத் தினிலெங்கள் கண்ணுதலை யின்னமுங்
காலவிஷ மேதொடாது
கையொன்றி லேயொன்று வளைதொட்ட வர்க்குவளை
கையிரண் டுந்தொடாது
செந்துவர்க் கனிவாயி னமுதம் பெருக்குநின்
றிருவாயின் முத்தமருளே
செங்கண்மான் மருகனே குன்றைவாழ் முருகனே
திருவாயின் முத்தமருளே.
43✓
சரணமென வந்தவர்க் காதார மானவிரு
சரணமுங் கூப்பிவேழச்
சருமமு முடுத்திவெம் புலியத ளுடுத்திமுன்
றானையு மொடுக்கிநாகா
பரணமுந் தாழா தெடுத்துச் சுருட்டியிரு
பங்கயக் கைகள்கட்டிப்
பரிவர்த்த னைக்கால மாமென்ன மான்மழுப்
பக்கத் திலங்கமுன்றாங்
கிரணவெண் பிறையுங் கடுக்கையு முழங்குபா
கீரதியும் வீழ்வதென்னக்
கிளர்தலை குனிந்தைந்து வாயும் புதைத்தமா
கேசன் றிருச்செவிக்குட்
டிரணமென வழுதெழும் ப்ரணவத்தி னுரைசொன்ன
திருவாயின் முத்தமருளே
செங்கண்மான் மருகனே குன்றைவாழ் முருகனே
திருவாயின் முத்தமருளே.
44✓
விண்டலத் துயர்விந்த கிரிதனை யடக்கியகை
விரலெல்லாந் தரையில்வைத்து
மேதினி வணங்கவே பொதியமா மலைதனின்
மிதித்தகால் விரலையூன்றி
மண்டலம் புனையடை யென்னவளை கடலுண்ட
மணிவாயு மௌனமாக
மறையவர்க் ளூயிர்கொண்ட வாதாவி யுயிருண்ட
வயிறெலாம் புழுதிதோயக்
குண்டலங் கீழ்விழச் செவிதாழ விருகரங்
கூப்பித் தரம்புரட்டிக்
குவடனைய விருபுயமு மார்புமலர் விழியுமே
குவலயத் தூடழுந்தத்
தெண்டனிடு குறுமுனிக் குபதேச மதுசொன்ன
திருவாயின் முத்தமருளே
செங்கண்மான் மருகனே குன்றைவாழ் முருகனே
திருவாயின் முத்தமருளே.
45✓
வானுண்டு கடலுண்டு திடருண்டு கரியுண்டு
மலையுண்டு திசையுண்டுமா
மண்டலமு மண்டபகி ரண்டநவ கண்டமும்
வாளரவு முண்டுமற்றுந்
தானுண்ட டங்காத கள்ளப் பசிக்கிபந்
தன்பசிக் கிட்டசோளந்
தானென்ன மானென்ன மீனென்ன மலர்விழித்
தையலித முண்ணவேண்டிக்
கானுண்டு மலையுண்டு மலையுண்டு மரிதென்று
கருதாது காமவலையிற்
கட்டுண்டு கிழவுருக் கொண்டுவயி றெக்கிமுன்
காட்டியவ் வள்ளியிட்ட
தேனுண்ட தினைமாவை யுண்டுதேக் கிட்டநின்
றிருவாயின் முத்தமருளே
செங்கண்மான் மருகனே குன்றைவாழ் முருகனே
திருவாயின் முத்தமருளே.
46✓
மன்னுதன் புனன்மூழ்க வருவோர்க டீங்கெலா
மாருதத் தூதர்விட்டே
வழிப்பறி பறித்துத் தரங்கக் கரங்களான்
மங்கல மெடுத்தெறிந்து
சந்நிதா னத்தில்வரு வோர்ஜன்ம நோய்க்கெலாந்
தண்டுளி மருந்தளித்துச்
சாலோக முந்தந்து சாமீப முந்தந்து
தண்புனல் படிந்தபேர்க்குப்
பன்னிரு கரங்களும் பன்னிரு புயங்களும்
பன்னிரு மலர்க்கண்களும்
பனிருவர் போன்மகர குண்டல மிலங்குகுழை
பனிரண்டு மூவிரண்டு
சென்னியுந் தருசரவ ணப்பொய்கை யாதிபா
திருவாயின் முத்தமருளே
செங்கண்மான் மருகனே குன்றைவாழ் முருகனே
திருவாயின் முத்தமருளே.
47✓
அவ்வென்று படருங் கதிர்க்கற்றை தோயவிண்
ணார்ந்துசூற் கொண்டுகொண்மூ
வளித்தவெண் முத்துந் துளித்திவலை வேண்டியங்
காந்தநத் தீன்றமுத்துந்
தெவ்வென்று சிங்கத் திளங்கன் றெழும்பிச்
சினத்துத் தகர்த்தொடித்த
சிந்துரக் கோட்டிற் றெறித்தவெண் முத்தமுஞ்
செங்கரும் பீன்றமுத்துஞ்
சவ்வென்று துளையுண்டு விலையுண்டு கடையுண்டு
தட்டுண்டு திரியுமல்லால்
தண்டுளி பெருக்குநின் மழலைவாய் முத்தெனத்
தருமின்ப மருளவருமோ
செவ்வென்று மதுரித்து நறுமணம் பூரித்த
திருவாயின் முத்தமருளே
செங்கண்மான் மருகனே குன்றைவாழ் முருகனே
திருவாயின் முத்தமருளே.
48✓
முளைத்துக் கிளைத்திலைகள் பச்சப்ப சேரென்று
மூதண்ட முகடுமுட்ட
மூவுலக ளக்கவரு நெடியமா லெனவளரு
மூங்கிற் குழாத்தினின்பம்
விளைத்துப் பிறந்தவெண் முத்தமுஞ் சரசமும்
விரும்பிலோர் வடிவுமாற
வேரிப்ப கும்பெறற்செ ழுங்கமல நெட்டிதழ்
விரிந்தவெண் முத்துமேங்கிக்
களைத்துத்தி கைப்பநேர்ந் தஞ்செய்தொளி கான்றிடு
கையேற வகடுகிழியக்
கடன்முகட் டினிலெழுந் துலகமொரு மூன்றினு
கதிர்வீசு நன்முத்தமுந்
துளைத்துவிலை கட்டமிளிர் கட்டாணி முத்தமே
சுடர்வாயின் முத்தமருளே
சோதிமலை நிகரான தோகைமலை யாதிபா
சுடர்வாயின் முத்தமருளே.
49வேறு✓
அருகி ருக்கும் பரிந டத்தும்
அரசன் முத்தந் தருகவே
அரைவ டக்கிண் கிணியொ லிக்கும்
அழகன் முத்தந் தருகவே
ஒருகி ரிக்கங் கயில்வி டுக்கும்
உசிதன் முத்தந் தருகவே
உபய பத்மந் தருமெ னக்கும்
ஒருவன் முத்தந் தருகவே
தருக டப்பந் தொடைத ரிக்குஞ்
சரசன் முத்தந் தருகவே
தமிழு மைக்குஞ் சரந திக்குந்
தனையன் முத்தந் தருகவே
குருகி ரிக்குங் குறம யிற்குங்
குரிசின் முத்தந் தருகவே
குறைவ றக்குன் றையிலி ருக்குங்
குமரன் முத்தந் தருகவே.
50வேறு✓
தாயென் றெடுத்துத் தடம்புயஞ் சேர்க்கவொரு
தவமதனை வன்னியுடைய
சன்னிதா னஞ்செய்து வேள்வியா குதியவன்
றன்பேரி லேகவர்ந்து
போயென்று மிருவென்று முனிவரிரு மூவரும்
புணருமட வாரையகலப்
பொற்கொடிக ளிருமூவ ரெமதுவடி வாயன்பு
பூண்டனம் வன்னியதனால்
ஆயென்று யாமுன்னை நம்பிவந்தோ மென்ன
வபயங்கொ டுத்துவானில்
ஆகண்ட லன்மகிழ வறுமீனெ னப்பதித்
தவர்முலைப் பாலுமுண்டு
சேயென்று மணிமார்பில் விளையாடு மொருபிள்ளை
திருவாயின் முத்தமருளே
செங்கண்மான் மருகனே குன்றைவாழ் முருகனே
திருவாயின் முத்தமருளே.
51வேறு✓
சுடர்மு கக்குஞ் சரமு கத்தன்
றுணைவன் முத்தந் தருகவே
சுரர்ப திக்கன் றரச ளிக்குஞ்
சுகுணன் முத்தந் தருகவே
வடத ருக்கொம் புறைய ரிக்கும்
மருகன் முத்தந் தருகவே
வடகி ரிக்குன் றினிலி ருக்கும்
மதலை முத்தந் தருகவே
கடல டக்குங் கெடிசெ லுத்துங்
கடகன் முத்தந் தருகவே
கரத லக்கங் கணமொ லிக்குங்
கடகன் முத்தந் தருகவே
கொடியி ருக்குங் குறம யிற்குங்
குரிசின் முத்தந் தருகவே
குறைவ றக்குன் றையிலி ருக்குங்
குமரன் முத்தந் தருகவே.