முருகன் App
பழனிப் பிள்ளைத்தமிழ்
சின்னப்ப நாயக்கர்
அம்புலிப்பருவம்8 / 11
பழனிப் பிள்ளைத்தமிழ் · சின்னப்ப நாயக்கர்

அம்புலிப்பருவம்

20✓
மாகமுயர் சந்த்ரனீ தெய்வவா ரணவனிதை
மகிழுஞ்சு சந்த்ர னிவனாம்
மதிசேர் மதிப்பள்ளை நீயிவன் சிவனயனது
மகிழ்ச்சும் மதிப்பள்ளைநீ
தேகவொளி மீறியகு பேரனிவன் மலைவந்து
தெண்டனிட விலகுபேரன்
திருமருவு முருகோட் டிலம்பிறை நீயெழில்
சேர்ந்தருள் கடம்பிறையிவன்
பாகமுயர் கின்றவெண் சசியுநீ பொன்னாடர்
பரவுசசி மருகனிவனாம்
பார்மீது புகழ்பெற்ற சோதிநீ யிவனும்
பரஞ்சோதி வடிவனாகும்
ஆகையா லிவனுநீ யுஞ்சரிச மானமே
யம்புலீ யாடவாவே
அருள்பரவு பழனிவளர் சிவகிரியின் முருகனுட
னம்புலீ யாடவாவே.
21✓
ஓதரிய கலைகள்பதி னாறுமாத் திரமுனக்
குண்டுகலை யறுபத்துநான்
குடையனிவ னோரரூர னீயிவனு நூறூரன்
உன்றிகிரி யிரவுசெல்லும்
சேதிபெற வேயிவன் றிகிரியெப் போதுமே
செல்லுமிது வல்லாமலே
தேய்வதுஞ் சிறிதுநாள் வளர்வது முனக்குண்டு
சிந்தையி லிவன்பதத்தைப்
போதுகொ டருச்சித்த பேர்களுந் தேய்வுறார்
பொல்லாத மறுவுடையனீ
பூமிவா னகமுள்ள கடவுளரின் மறுவிலாப்
புனிதனிவ னாகுமென்பார்
ஆதலா லிவனுனக் கதிகனா மென்றிவனொ
டம்புலீ யாடவாவே
அருள்பரவு பழனிவளர் சிவகிரியின் முருகனுட
னம்புலீ யாடவாவே.
22✓
வானிடை வழிக்கொண்டு நீசெல்லு மளவைதனின்
மாசுணப் பகைதொடருமம்
மாசுணப் பகையைத் துரத்தவிவ னேறிவரு
மயிலின் சகாயமுண்டு
கூனினைத் தீர்த்தினிய கூடலார் கோமான்
குளிர்ந்திடச் செய்தவிவனின்
கூனைத் தவிர்ப்பனீ வரவேணு மிவனிடங்
குறுகினாற் பலனுமுண்டாம்
நானினஞ் சொல்வதேன் வாராத போதிலுனை
நாடிப் பிடித்துலர்த்தி
நனிவீர பத்திரன் றேய்த்ததென வேவுன
நல்காத வண்ண மேசென்
றானிடையின் மருவுவா னுபதேச குருவினுட
னம்புலீ யாடவாவே
அருள்பரவு பழனிவளர் சிவகிரியின் முருகனுட
னம்புலீ யாடவாவே.