முருகன் App
பழனிப் பிள்ளைத்தமிழ்
சின்னப்ப நாயக்கர்
காப்புப்பருவம்2 / 11
பழனிப் பிள்ளைத்தமிழ் · சின்னப்ப நாயக்கர்

காப்புப்பருவம்

2✓
பூமேவு நூற்றிதழ்த் தாமரைத் தவிசில்வளர்
பூமங்கை புவிமங்கையும்
பூசித்த திருவாவி னன்குடித் தலைவனைப்
புகழ்பெற்ற கருணையானைத்
தேமேவு வெட்சியந் தாமனைக் குழகனைச்
சேயினைச் சிவன்மதலையைச்
செவ்வேளை வளர்பழனி நகரில்வரு சிவகிரித்
தேசிகனை யினிதுகாக்க
காமேவு முரசகே தனனுள மகிழ்ந்திடக்
காந்தாரி யீன்றெடுத்த
கவுரவர் பிரானிடந் தூதுபோய் மீண்டுவரு
கால்சிவந் திடமுன்னமோர்
பாமேவு கவிஞனுக் கருள்சுரந் தன்பினொடு
பாய்சுமந் தெய்த்துவந்து
பாலாழி மீதிலே யறிதுயி லமர்ந்தருள்
பசுந்துழாய்க் கரியமுகிலே.
3✓
வித்தக மிகுந்ததிறல் வேற்படை விசாகனை
விளங்குமோ காரவாசி
மேல்வந்த ராவுத்த னைச்சரவ ணத்தில்வரு
மெய்யான தனிநாதனை
உத்தமனை வெற்றியஞ் சேவலங் கொடிவிரு
துயர்த்தவனை யாறுமுகனை
உயர்பழனி நகரில்வரு சிவகிரியின் முருகனை
யுவந்தினிது மேற்புரக்க
மத்தளி வயிற்றிப முகத்தெம் பிரான்கதிர்கள்
மாறாத சுடர்களிருவர்
மலர்மங்கை மாரிருவர் சத்தமா தாக்களிம
வான்றரு மடந்தைமற்றைச்
சித்தர்வித் யாதர ரியக்கர்கின் னரர்முனிவர்
திசைமுகப் பிரமதேவர்
தேவர்கோன் முதலாய முப்பத்து முக்கோடி
தேவர்க்கு முதலாளியே.
வேறு✓
அயனரு மறைமுனி வரரம ரர்கடொழ
அருடரு மானிட மருவிசைப் பாட்டினள்
அமுதினு மினிதெனு நிலைதரு மொழிபெறும்
அழகுயர் வடிவின ளிளமுலைக் கோட்டினள்
அடியரை யனுதின மனதினி லினிதுற
அருள்பெற வளவிய விருவிழிச் சூட்டினள்
அறுசம யமுமொரு வழிபட நிலமிசை
அவரவர் பரவந லருடனைக் காட்டினள்
இயலிசை யுடனொரு சதுமறை சுதிதர
இதுநல மெனநட மிடுமுறைக் கூத்தினள்
இடியென வலறிய மயிடனை யுடல்ப்பொடி
யெனவிடு படையின ளுலகினைக் காப்பவள்
இகபர மெனுமிரு தொழிலுடை யவளென
எவர்களு மறிதரு கருணையைப் பூட்டினள்
இடமுயர் வடகிரி யலமர வெதிர்வரும்
இமகிரி தருமொரு கவுரியைப் போற்றுதும்
4✓
கயமுக னுடனரி முகநிரு தனையொரு
கணமதில் விழவெகு சமரமிட் டார்த்திடு
களமிசை யலகைகள் கழுகுண நிணமருள்
கதிரொழு கியவயின் முருகனைக் கார்த்திகை
கனதன மொழுகிய பயநுகர் துகிர்நிற
அதரனை விதரண முடையனைச் சீர்ப்பிடி
கணவனை வனமகள் முலைமுக டுழுதருள்
புயமலை நிருபனை யறுமுகச் சேப்பனை
மயன்மகள் கலவியை மதுவினி லளியென
மனமுறு மிருபது புயனையட் டார்ப்புறு
மனுகுல முறையர சுரிமைகள் செயவரு
மணிநிற வரிமகிழ் மருகனைக் கோட்டின
மதிதட வியநெடு மதின்முக டளாவிய
வரிசையி னடமிடு பரதமெய்க் கூத்தின
மயிலின முலவிய பழனியில் வளர்சிவ
கிரிதனின் மருவிய குமரனைக் காக்கவே.