முருகன் App
பழனிப் பிள்ளைத்தமிழ்
சின்னப்ப நாயக்கர்
செங்கீரைப்பருவம்3 / 11
பழனிப் பிள்ளைத்தமிழ் · சின்னப்ப நாயக்கர்

செங்கீரைப்பருவம்

5✓
வண்டாட நறவூறி மணமீறு மணிநீப
மாலையா டக்குழைகண்சேர்
மகரகுண் டலமாட வச்ரகே யூரமுடன்
மார்பிற்ப தக்கமாடக்
கொண்டாடு நெற்றியிற் சுட்டியா டக்கரிய
கொந்தளக் குஞ்சி யாடக்
கோலநெடு வான்முகடு தொடுகடற் றிவலைபோற்
குறுவெயர் முகத்திலாடக்
கண்டாடு மதராங் குவிந்தாட மாற்றேறு
கனகத்தி ழைத்தவரைஞாண்
கதிர்விரித் தாடநவ மணியினாற் செய்தவிரு
காலிற்ச ங்கையாடத்
திண்டாடு மசுரரைக் கொல்லவரு தீரனே
செங்கீரை யாடியருளே
திருமருவு பழனிவளர் சிவகிரியின் முருகனே
செங்கீரை யாடியருளே.
6✓
பொற்றக டுரிஞ்சிய மணிக்கலச நீர்கொண்டு
புனலாட்டி யுச்சிமோந்து
புல்லிவா யதரமு முந்திசெவி நாசியிற்
புனலேறி டாமலூதிப்
பற்றிய நிலப்பொட்டு நெற்றிமிசை யிட்டழகு
பாரித்த பட்டாடையாற்
பண்புறைய வீரம் புலர்த்திநவ மணியிட்ட
பருமணிச் சுட்டிகட்டி
நற்றமிழின் முனிபரவு குருவென்று தாலாட்டி
நறுவசம் பூறலூட்டி
நற்றாயி னிளமுலைப் பாலமுத மூட்டியிள
நலநிலவு போல்விளங்கச்
சிற்றிடைச் செவிலிய ரழைத்துவகை கூரவே
செங்கீரை யாடியருளே
திருமருவு பழனிவளர் சிவகிரியின் முருகனே
செங்கீரை யாடியருளே.
7✓
புன்னையந் தாதுறு மலர்க்காவி லஞ்சிறைய
பொறிவண்டு மகரந்தமார்
பூமணந் தன்னையுண் டன்னிசை முழக்கவும்
போருகத் தடைகிடக்கும்
மின்னிறப் பேட்டனந் தனதுசினை யென்றுபோய்
வெள்வளையின் முத்தெடுத்து
மெல்லணை கிடத்தியே சிறகிட்ட ணைத்திடவும்
மேதியின் கன்றுதுள்ளிக்
கன்னலைச் சாடிவிளை யாடவுந் தோகைகார்
கண்டுநட னம்புரியவும்
கண்டுபழ னத்துழல் பாணண்டு நன்றெனுங்
கயறாவி யெதிரேறிடும்
செந்நெல்து மாறுமுக நதியுடைய வள்ளலே
செங்கீரை யாடியருளே
திருமருவு பழனிவளர் சிவகிரியின் முருகனே
செங்கீரை யாடியருளே.