முருகன் App
பழனிப் பிள்ளைத்தமிழ்
சின்னப்ப நாயக்கர்
சிறுதேர்ப்பருவம்11 / 11
பழனிப் பிள்ளைத்தமிழ் · சின்னப்ப நாயக்கர்

சிறுதேர்ப்பருவம்

9✓
இந்திரன் குடைபிடித் திடவழற் கடவுள்வந்
தெதிர்நின்று விசிறிவீச
இயமனுட னிருதிவெண் சாமரைகண் முறைமுறை
யிரட்டவரு ணன்வாயுவும்
சந்திரனு முடைவாளை யேந்திநின் றிருபுறந்
தாநிற்ப வளகைவேந்தன்
தயவினொடு காளாஞ்சி யேந்தவீ சானனிது
சரியென்று முறுவல்கூர
மந்திரப் புனல்கொண்டருச்சித்து வேதன்முதல்
மறைமுனிவர் துதிகள்செய்ய
வானகத் தமரர்நறு மலர்பெய்ய மழகதிர்
மறைத்தகார் மழைகள் பெய்யச்
சிந்தனை மகிழ்ந்துநவ மணியினா லொளிர்கின்ற
சிறுதே ருருட்டியருளே
தென்பழனி நகரிவரு சிவகிரியின் முத்தையன்
சிறுதே ருருட்டியருளே.
30✓
பன்றிமலை பூம்புரை யிடும்பன்மலை யீராறு
பள்ளியா றாறுவேதம்
பரவுமங் கலமெட்டு நூறாறு மேயிசை
படைத்தவை காபுரியினும்
குன்றிடத் தும்பரங் கிரிசெந்தி லாவினன்
குடியே ரகத்தைமுதலாய்க்
குளிர்வனஞ் சேர்சோலை மலையிடத் தும்பரவு
கொள்கையா லுஞ்சுடர்விடும்
வென்றிவேல் கையிற் றரித்தலா லுஞ்சேவல்
விருதுதுச மேவலாலும்
மேலான தெய்வநீ யாமென்று போற்றியுனை
வேண்டிநின் றமரர்வாழ்த்தத்
தென்றல்வரை முனிபரவு மெய்ஞ்ஞான தேசிகன்
சிறுதே ருருட்டியருளே
தென்பழனி நகரிவரு சிவகிரியின் முத்தையன்
சிறுதே ருருட்டியருளே.
31✓
சொல்லரிய பொன்னுருளை சேர்த்துவயி ரத்தினாற்
சோதிபெறு மச்சிணக்கித்
துய்யகோ மேதகப் பலகையிடை சேர்த்தியே
துலங்குபோ திகைதிருத்தி
நல்லபுது வைடூரி யத்தினால் வேய்ந்தொளிரு
நவமணி குயிற்றியருண
நல்குபவ ழக்கால்க ணாட்டிநீ லச்சட்ட
நாற்பாங்கு மேநிறைத்து
மல்லுலவு தலையலங் காரமுஞ் செய்துநிறை
வரிசையி லலங்கரித்து
மாமேரு கிரிபோல் விளங்கமே லானநின்
மாமனா ரான கருணைச்
செல்வரா மெழில்விசய கோபாலர் வரவிட்ட
சிறுதே ருருட்டியருளே
தென்பழனி நகரிவரு சிவகிரியின் முத்தையன்
சிறுதே ருருட்டியருளே.