முருகன் App
பழனிப் பிள்ளைத்தமிழ்
சின்னப்ப நாயக்கர்
முத்தப்பருவம்6 / 11
பழனிப் பிள்ளைத்தமிழ் · சின்னப்ப நாயக்கர்

முத்தப்பருவம்

14✓
மாலிடிந் தனின்மேவு முத்துமுயர் வாரண
மருப்பிற் பிறந்தமுத்தும்
மங்கையர் கழுத்துமுத் துஞ்சாலி தன்னிடம்
வகைபெற விளைந்தமுத்தும்
கோலமிகு கன்னற் கணுக்கடொறு மேவெண்மை
குன்றாது தோன்றுமுத்தும்
கோகனக முத்துமிப் பியின்முத்து மேலான
குருநிறச் சங்குமுத்தும்
சாலவே வரையினுங் கடலினுஞ் சேற்றினுந்
தரையினும் வானிடத்தும்
தானுலைந் துடைபட்டு விலைபடுவ வாகையாற்
சரியென்ப தில்லையதனாற்
பால்மணங் கமழ்தரத் தேன்வழிந் தொழுகுநின்
பவளவாய் முத்தமருளே
பழனிவளர் சிவகிரியில் மருவுகுரு தேசிகன்
பவளவாய் முத்தமருளே.
15✓
தந்தா வளக்கும்ப மதயானை யெட்டுமே
தாங்கிய நெடும்புவனமேற்
சக்ரவா ளத்தையொன் றாய்ச்சுற்றி வெள்ளிமலை
தன்னைவல மாகவந்து
பிந்தாம லண்டச் சுவர்க்கோடு மட்டினும்
பெரிதுசென் றிரவிமதியைப்
பின்னிடப் பாய்கின்ற கோளரவின் வாயைப்
பிளந்தும்ப ருரைநாடி
மந்தார வனமீ துளைந்துசூன் முதிர்கொண்டல்
மந்தார நிலைகண்டுதன்
வன்சிறை விரித்தாடி யல்லோல கல்லோல
மகரநீ ரேழுமுக்கும்
பைந்தோகை யம்பரியி லேறிவரு சேவகன்
பவளவாய் முத்தமருளே
பழனிவளர் சிவகிரியின் மருவுகுரு தேசிகன்
பவளவாய் முத்தமருளே.
16வேறு✓
கன்னங் கறுத்த குழல்செருகிக்
கடைசி மடவார் கழனிதொறும்
கதித்து விளைந்த செஞ்சாலிக்
கதிரை யரிவாள் கொடுகொய்து
சின்னஞ் சிறிய விடைதுவளச்
சென்று வரம்பின் கரையருகிற்
செல்லு மளவிற் பசுஞ்சோலைத்
தேமாங் கனியை யுதிர்த்தெழுந்து
பொன்னி னிறத்த கதலிநறும்
பூவைக் கனியைச் சிதறியுனம்
பொருந்தி வரும்வா னரங்களிவர்
பொருமு முலையை யிளநீரென்
றுன்னித் தாவிப் பிடித்திடுநூ
றூரா முத்தந் தருகவே
உயரும் பழனிச் சிவகிரிவா
யுறைவாய் முத்தந் தருகவே.