முருகன் App
ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம்
சீ. விநாசித்தம்பி புலவர்
நம்பிராசன் வள்ளிக் குழந்தையைக் கண்டெடுத்தல்9 / 55
1வாழ்த்து2நாட்டுச் சிறப்பு3நம்பிராசன் அரசியல்4நம்பி வரம் வேண்டல்5திருமால் சிவமுனியாகவும் திருமகள் மானாகவும் உருவெடுத்தல்6திருமால் புத்திரிகளில் சுந்தரவல்லி மான்வயிற்றில் கர்ப்பமாதல்7வள்ளி பிறத்தல்8நம்பிராசன் வருகை9நம்பிராசன் வள்ளிக் குழந்தையைக் கண்டெடுத்தல்10வள்ளி புனங்காத்தல்11முருகன் திருத்தணிகை வருதல்12பஜனை13தினைப்புனத்து-நாரதர் வருகை14முருகனிடம் நாரதர் வருகை15முருகன் தினைப்புனம் வருதல்16வள்ளியின்முன் வேடன்17வள்ளியை முருகன் மன்றாடுதல்18முருகன் வேங்கைமரமாதல்19வேங்கை நீங்கி வேடுவனாகிறான்20வேடர் வருகை21முருகன் கிழவனாகிறான்22முருகன்—நம்பிக்கு திருநீறு கொடுத்தல்23கிழவரும் வள்ளியும்24பஜனை25வள்ளி அமுது கொடுத்தல்26வள்ளி—திருச்சுனை காட்டல்27கணபதி வருதல்28வள்ளிக்கு உபதேசம்29முருகன் காட்சி30முருகன் விட்டகல, வள்ளி தினைப்புனம் போகிறாள்31பாங்கிக்கு வள்ளி கூறுவது32முருகன் வினவுதல்33முருகன் பாங்கியைக் கேட்கிறார்34மடலேறுவேன் என்கிறார்35பாங்கி வள்ளியைக் கொணர்தல்36வள்ளி மனம் வருந்தல்37முருகா....உனக்கு38வள்ளி சிற்றூர் சேர்ந்தாள்39வள்ளியின் நிலை40வள்ளியைக் கொணர்தல்41வேடர் வள்ளியைத் தேடுதல்42வேடர் வருவதைக் கண்ட வள்ளி பயப்படுதல்43வேடுவர் மடிதல்44நாரதர் வருகை45நாரதர் தோத்திரம்46வள்ளியம்மையார், வேடரை எழுப்புதல்47முருகனும் வள்ளியும் சிற்றூரில்48நாரதர் வேதவிதி செய்தனர்49திருமண வாழ்த்து50முருகன் அருள்புரிதல்51திருத்தணிகைச் சிறப்பு52வேறு53தெய்வ குஞ்சரி வள்ளிநாயகன் திருப்பொன்னூஞ்சலில்54பயன்55மங்களம்
ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம் · சீ. விநாசித்தம்பி புலவர்

நம்பிராசன் வள்ளிக் குழந்தையைக் கண்டெடுத்தல்

✓
செல்வக் குழந்தையவள்
தேனொழுகும் வாய்திறந்து
செப்புகிற மெல்லோசை
திருநம்பி ராசனுக்கு
நல்விருந்தாய்க் கேட்டிடவே
நாடினான் அவ்விடத்தே
ஞானச் சிறுமிதன்னை
நயமாகக் கண்டெடுத்தான்.
✓
முருகன் எனக்களித்த
முத்தென்று கூத்தாடி
முத்தமிட்டு மெத்தமெத்த
முழக்கமுடன் கூச்சலிட்டான்
பெருகுவிழி நீர்சொரியப்
பேரானந் தங்கொண்டான்
பெண்கொடிச்சி கையினிலே
பெருமாட்டி யைக்கொடுக்க,
✓
ஆனந்த மாய்க்கொடிச்சி
அன்பாக மார்போடு
அணைத்திட்ட போதினிலே
அருவிமு லைசுரக்க
கானந்த னில்வள்ளிக்
குழியிற் கிடந்ததனாற்
காரணமாம் பெயராக
வள்ளிஎனப் பேருமிட்டு
✓
பாலூட்டிச் சீராட்டிப்
பதிந்த மரக்கிளையில்
பண்பான தொட்டில்கட்டிப்
பரிவாய் முரசுதட்டி
மாலின் திருப்புதல்வி
வனவள்ளி நாயகியாம்
மானீன்ற செல்விதன்னை
வாழ்த்தித்தா லாட்டுகிறாள்.
✓
இராகம்: நீலாம்புரி தாளம்: ரூபகம்
ஆராரோ ஆரிவரோ
ஆரிவரோ ஆராரோ.
✓
சீரான சிவக்கொழுந்தோ
சிலைவேடர் தவக்கொழுந்தோ
பேரான மறைபுகழும்
பெண்ணரசோ பெருவிளக்கோ. (ஆ)
✓
கலையெல்லாம் ஒருங்காகிக்
கவின்பெருகும் திருவடிவோ
மலையெல்லாம் மேவுகின்ற
வடிவேலன் தந்தவளோ. (ஆ)
✓
குறவரின் மத்தியிலே கொஞ்சுங் கிளிபோலே
குந்தித் தவழ்ந்து குதலை மொழிபேசி
சிறுக நடைநடந்து சிற்றிடைச்சி வாழுகிறாள்
தேவாதி தேவர்தொழுஞ் சீமாட்டி வாழுகிறாள்.
✓
அந்தவன வேடர்க் கரியஒரு பெண்ணாகி
அன்னைவள்ளி நாயகியார் அழகெறிக்க வாழுகிறாள்
இந்தவித மாகிவளர்ந் திளமதிய மேனியளாய்
ஈராறு வயதுடைய எழிற்கன்னி யானாளே.