முருகன் App
ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம்
சீ. விநாசித்தம்பி புலவர்
முருகனிடம் நாரதர் வருகை14 / 55
1வாழ்த்து2நாட்டுச் சிறப்பு3நம்பிராசன் அரசியல்4நம்பி வரம் வேண்டல்5திருமால் சிவமுனியாகவும் திருமகள் மானாகவும் உருவெடுத்தல்6திருமால் புத்திரிகளில் சுந்தரவல்லி மான்வயிற்றில் கர்ப்பமாதல்7வள்ளி பிறத்தல்8நம்பிராசன் வருகை9நம்பிராசன் வள்ளிக் குழந்தையைக் கண்டெடுத்தல்10வள்ளி புனங்காத்தல்11முருகன் திருத்தணிகை வருதல்12பஜனை13தினைப்புனத்து-நாரதர் வருகை14முருகனிடம் நாரதர் வருகை15முருகன் தினைப்புனம் வருதல்16வள்ளியின்முன் வேடன்17வள்ளியை முருகன் மன்றாடுதல்18முருகன் வேங்கைமரமாதல்19வேங்கை நீங்கி வேடுவனாகிறான்20வேடர் வருகை21முருகன் கிழவனாகிறான்22முருகன்—நம்பிக்கு திருநீறு கொடுத்தல்23கிழவரும் வள்ளியும்24பஜனை25வள்ளி அமுது கொடுத்தல்26வள்ளி—திருச்சுனை காட்டல்27கணபதி வருதல்28வள்ளிக்கு உபதேசம்29முருகன் காட்சி30முருகன் விட்டகல, வள்ளி தினைப்புனம் போகிறாள்31பாங்கிக்கு வள்ளி கூறுவது32முருகன் வினவுதல்33முருகன் பாங்கியைக் கேட்கிறார்34மடலேறுவேன் என்கிறார்35பாங்கி வள்ளியைக் கொணர்தல்36வள்ளி மனம் வருந்தல்37முருகா....உனக்கு38வள்ளி சிற்றூர் சேர்ந்தாள்39வள்ளியின் நிலை40வள்ளியைக் கொணர்தல்41வேடர் வள்ளியைத் தேடுதல்42வேடர் வருவதைக் கண்ட வள்ளி பயப்படுதல்43வேடுவர் மடிதல்44நாரதர் வருகை45நாரதர் தோத்திரம்46வள்ளியம்மையார், வேடரை எழுப்புதல்47முருகனும் வள்ளியும் சிற்றூரில்48நாரதர் வேதவிதி செய்தனர்49திருமண வாழ்த்து50முருகன் அருள்புரிதல்51திருத்தணிகைச் சிறப்பு52வேறு53தெய்வ குஞ்சரி வள்ளிநாயகன் திருப்பொன்னூஞ்சலில்54பயன்55மங்களம்
ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம் · சீ. விநாசித்தம்பி புலவர்

முருகனிடம் நாரதர் வருகை

இராகம்: கரகரப்பிரியா தாளம்: ஆதி
✓
கண்டு வணங்கிக்
கருணையால் விடைபெற்றுக்
கவினார் திருத்தணிகைக்
கந்தனிடம் வந்தடைந்தார்
தொண்டர்க் கரியவனே
சுந்தரனே மெய்ஞ்ஞான
பண்டிதனே என்றுகுகன்
பாதம் பரவிநின்றார்.
பல்லவி✓
முருகா திருமால் மருகா சரணம்
மூவிரு முகனே சரவண பவனே. (மு)
அனுபல்லவி✓
கருகா வினையைக் கரைத்திடும் வேலா
கற்பக வல்லி தந்திடும் பாலா. (மு)
சரணம்✓
நினைத்த போதிலே என்முன் வருவாய்
நித்திய சாந்த நிலையைத் தருவாய்
மனத்துயர் தீர்க்கும் மருந்தே உருவாய்
மண்டல மெல்லாம் நிறைந்தாய் குருவாய். (மு)
✓
அருளார் விழிநோக்கி
ஆறுமுக வேலவனார்
அம்முனிவர் வார்த்தைகளுக்
கன்பாய்ச் செவிகொடுத்தார்
பொருளாகி நான்குமறை
புகழும் பெருமானே
பூரணனே பூர்வமுனைப்
போற்றியசுந் தரவல்லி
✓
பெற்ற வரத்தின்படி
பெரும்புனத்தைக் காக்கின்றாள்
பேராளா நின்நாமம்
பேசி யுருகுகிறாள்
உற்றநம்பி ராசனுக்கு(கு)
ஒருமகளாய் வந்துதித்து
உயர்பரணில் ஆலோல
ஓலமிட்டு வாடுகிறாள்.
✓
அழகுக் கிணையில்லா
அழகியார் வள்ளிதன்னை
அரிய மணமியற்றி
அடியேமைக் காத்திடுவீர்
செழுமைத் தமிழழகா
திருத்தணிகை யாண்டவனே
செல்வ மணமியற்றிச்
செகமெல்லாங் காத்தருள்வீர்.
✓
என்றங்கு நாரதனார்
ஏத்தி யிரங்குவதை
எந்தைகந்த நாயகனார்
ஏற்று முறுவல்செய்து
நன்றுநன்று நாரதரே
நமக்கும் நினைவதுவே
நண்ணுகிறேன் என்றப்பன்
நல்வாக் குரைத்தருளி,