முருகன் App
ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம்
சீ. விநாசித்தம்பி புலவர்
பஜனை24 / 55
1வாழ்த்து2நாட்டுச் சிறப்பு3நம்பிராசன் அரசியல்4நம்பி வரம் வேண்டல்5திருமால் சிவமுனியாகவும் திருமகள் மானாகவும் உருவெடுத்தல்6திருமால் புத்திரிகளில் சுந்தரவல்லி மான்வயிற்றில் கர்ப்பமாதல்7வள்ளி பிறத்தல்8நம்பிராசன் வருகை9நம்பிராசன் வள்ளிக் குழந்தையைக் கண்டெடுத்தல்10வள்ளி புனங்காத்தல்11முருகன் திருத்தணிகை வருதல்12பஜனை13தினைப்புனத்து-நாரதர் வருகை14முருகனிடம் நாரதர் வருகை15முருகன் தினைப்புனம் வருதல்16வள்ளியின்முன் வேடன்17வள்ளியை முருகன் மன்றாடுதல்18முருகன் வேங்கைமரமாதல்19வேங்கை நீங்கி வேடுவனாகிறான்20வேடர் வருகை21முருகன் கிழவனாகிறான்22முருகன்—நம்பிக்கு திருநீறு கொடுத்தல்23கிழவரும் வள்ளியும்24பஜனை25வள்ளி அமுது கொடுத்தல்26வள்ளி—திருச்சுனை காட்டல்27கணபதி வருதல்28வள்ளிக்கு உபதேசம்29முருகன் காட்சி30முருகன் விட்டகல, வள்ளி தினைப்புனம் போகிறாள்31பாங்கிக்கு வள்ளி கூறுவது32முருகன் வினவுதல்33முருகன் பாங்கியைக் கேட்கிறார்34மடலேறுவேன் என்கிறார்35பாங்கி வள்ளியைக் கொணர்தல்36வள்ளி மனம் வருந்தல்37முருகா....உனக்கு38வள்ளி சிற்றூர் சேர்ந்தாள்39வள்ளியின் நிலை40வள்ளியைக் கொணர்தல்41வேடர் வள்ளியைத் தேடுதல்42வேடர் வருவதைக் கண்ட வள்ளி பயப்படுதல்43வேடுவர் மடிதல்44நாரதர் வருகை45நாரதர் தோத்திரம்46வள்ளியம்மையார், வேடரை எழுப்புதல்47முருகனும் வள்ளியும் சிற்றூரில்48நாரதர் வேதவிதி செய்தனர்49திருமண வாழ்த்து50முருகன் அருள்புரிதல்51திருத்தணிகைச் சிறப்பு52வேறு53தெய்வ குஞ்சரி வள்ளிநாயகன் திருப்பொன்னூஞ்சலில்54பயன்55மங்களம்
ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம் · சீ. விநாசித்தம்பி புலவர்

பஜனை

✓
அரகர சிவானந்த
சரவணா முருகா
குருபரா னந்தனே
குமரனே முருகா. (அ)
✓
உன்னுடைய வடிவமே
உலகினது வடிவம்
ஓங்கார ஞானவேல்
ஓங்குகலை வடிவம். (அ)
✓
மன்னுமர கதமயில்
வருவிந்த வடிவம்
வாரணத் துவஜமே
மணிநாத வடிவம். (அ)
✓
உள்ளடியில் மலைகளும்
ஒளிரடியின் முற்புறம்
வெள்ளக் கடல்பலவும்
விரவிலே உருமிடியும் (அ)
✓
மீனோடு கோள்களும்
மிளிர்பரடு களில்வருணன்
தானக்கு பேரனும்
சார்நிருதி தம்மோடு (அ)
✓
முனைஇராட் சதர்களும்
முன்கணைக் காலிலே
முனிவரும் மணிகளும்
முழந்தாளி லேசர்வ (அ)
✓
வித்தியா தரர்களும்
விளங்குந் தொடைகளில்
பத்திமை பொங்கியே
பரவிநின் றணிசெயும் (அ)
✓
இந்திரன் சயந்தனும்
எழில்தொடை மூலத்தில்
அந்தகனும் காலனும்
அரைமுற் புறத்திலே (அ)
✓
அசுரர், விலாவிலே
அமரரும் பேரின்ப
வசியமூ லாதாரம்
மன்னுநா கர்களும் (அ)
✓
உயர்கோசத் தமிர்தமும்
உந்தியில் உயிர்களும்
வயமார்பில் கலைகளும்
மாணூலில் ஞானமும் (அ)
✓
மயிர்நுனியில் அண்டமும்
வரமுதவும் அங்கையில்
நயபோகப் பொருள்களும்
நற்றோளில் அரிஅயனும் (அ)
✓
கைவிரலில் சுரமகளிர்
கண்டத்தில் நாதமும்
செய்யசுடர் அக்கினியும்
திருவாயில் வேதமும் (அ)
✓
பல்லிலே அட்சரமும்
பயில்நாவில் ஆகமும்
சொல்லிதழில் எழுகோடி
சுவையான மந்திரமும் (அ)
✓
நாசியில் வாயுவும்
நயனத்தி லிரவிமதி
ஓசைபெறும் செவியிலே
ஒருநூறு ருத்திரரும் (அ)
✓
திருநுதலிற் குடிலையும்
சென்னியிற் சிவனாரும்
அருளன்பு தோன்றவே
அழகா விளங்குவாய். (அ)
✓
கீதத்தைக் கேட்டிருந்த கிழவர் மிகநயந்து
“கிஞ்சுகமே நன்றுநன்றென் மிஞ்சுபசி தீர்ப்பாயே
சாதமிட்டுத் தீராத தனிப்பசியைத் தீர்ப்பாயே
தாமதமுஞ் செய்யாதே தையலே” என்றாரே.