முருகன் App
ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம்
சீ. விநாசித்தம்பி புலவர்
வேறு52 / 55
1வாழ்த்து2நாட்டுச் சிறப்பு3நம்பிராசன் அரசியல்4நம்பி வரம் வேண்டல்5திருமால் சிவமுனியாகவும் திருமகள் மானாகவும் உருவெடுத்தல்6திருமால் புத்திரிகளில் சுந்தரவல்லி மான்வயிற்றில் கர்ப்பமாதல்7வள்ளி பிறத்தல்8நம்பிராசன் வருகை9நம்பிராசன் வள்ளிக் குழந்தையைக் கண்டெடுத்தல்10வள்ளி புனங்காத்தல்11முருகன் திருத்தணிகை வருதல்12பஜனை13தினைப்புனத்து-நாரதர் வருகை14முருகனிடம் நாரதர் வருகை15முருகன் தினைப்புனம் வருதல்16வள்ளியின்முன் வேடன்17வள்ளியை முருகன் மன்றாடுதல்18முருகன் வேங்கைமரமாதல்19வேங்கை நீங்கி வேடுவனாகிறான்20வேடர் வருகை21முருகன் கிழவனாகிறான்22முருகன்—நம்பிக்கு திருநீறு கொடுத்தல்23கிழவரும் வள்ளியும்24பஜனை25வள்ளி அமுது கொடுத்தல்26வள்ளி—திருச்சுனை காட்டல்27கணபதி வருதல்28வள்ளிக்கு உபதேசம்29முருகன் காட்சி30முருகன் விட்டகல, வள்ளி தினைப்புனம் போகிறாள்31பாங்கிக்கு வள்ளி கூறுவது32முருகன் வினவுதல்33முருகன் பாங்கியைக் கேட்கிறார்34மடலேறுவேன் என்கிறார்35பாங்கி வள்ளியைக் கொணர்தல்36வள்ளி மனம் வருந்தல்37முருகா....உனக்கு38வள்ளி சிற்றூர் சேர்ந்தாள்39வள்ளியின் நிலை40வள்ளியைக் கொணர்தல்41வேடர் வள்ளியைத் தேடுதல்42வேடர் வருவதைக் கண்ட வள்ளி பயப்படுதல்43வேடுவர் மடிதல்44நாரதர் வருகை45நாரதர் தோத்திரம்46வள்ளியம்மையார், வேடரை எழுப்புதல்47முருகனும் வள்ளியும் சிற்றூரில்48நாரதர் வேதவிதி செய்தனர்49திருமண வாழ்த்து50முருகன் அருள்புரிதல்51திருத்தணிகைச் சிறப்பு52வேறு53தெய்வ குஞ்சரி வள்ளிநாயகன் திருப்பொன்னூஞ்சலில்54பயன்55மங்களம்
ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம் · சீ. விநாசித்தம்பி புலவர்

வேறு

நொண்டிச் சிந்து✓
என்றுரைத்த மொழிகேட்டு - வள்ளி
ஏகாந்த யோகத்தின் இன்பமுறவே
வென்றிமிகும் குன்றதனிலே — வேலன்
மேவிலிங்க பூசைசெய்து வள்ளியுடனே
✓
நின்றபெருங் கைலைமலை — பங்கில்
நேரான கந்தகிரிக் கோயிலடைந்தாள்
மன்றல்மிகு தெய்வயானை — அங்கே
வள்ளிமண வாளனடி வணங்கிநின்றாள்.
✓
வள்ளியும் தெய்வயானை — பாதம்
வணங்கி மனமார இணங்கிநிற்க
வள்ளலாம் மயிலழகன் — இருவர்
வந்தமுற் பிறப்பும் வகுத்துரைத்தார்.
குஞ்சரியும் வள்ளியும்✓
தெய்வகுஞ் சரியம்மை — தங்கள்
செய்திகளைச் செவ்வனே தெரிந்துணர்ந்து
மெய்யன்பு சுரந்திடவே — வள்ளியை
விட்டகன்ற தங்கையென அணைத்துக்கொண்டாள்.
பல்லவி✓
இராகம்: தேவகாந்தாரி தாளம்: ஆதி
வள்ளியும் குஞ்சரியும் வலமிட மாயிருக்க
வள்ளலும் கொலு விருப்பான் — வடிவேல்
அனுபல்லவி✓
புள்ளிமயில் மீதும் புனிதர்மன மீதும்
தெள்ளிய செந்தமிழ் தேங்கு கலைமீதும் (வ)
சரணங்கள்✓
நீலக் கடலில்வரும் ஞாயிறு போலே
நின்றிடுவான் பரங் குன்றினிலே — தனது
கோலக் கரங்களாலும் குளிர்ந்த முகங்களாலும்
கொடைதரு வான்திருச்செந் தூரினிலே — சிவ
மூலக்கருத் துணரும் முனிவரர் வேண்டிடும்
முதுகனி யாயமர்ந்தான் பழனியிலே — மறை
நூலைச் சுவைத்தவரின் பூசைக் கமர்ந்திருப்பான்
நுவல்திரு வேரக ஸ்வாமிம லைதனிலே. (வ)
✓
திருத்தணி முதலாய குன்றுதோ றாடி
திகழ்கூர வைக்கூத்தில் மகிழ்ந்திருப்பான் — அழகு
திருப்பழ முதிர்சோலை மலையினி லடியார்
செய்கிற பூசையெல்லா மேற்றருள்வான் — கந்தன்
தரித்த கதிர்காமத் தலத்தினிலே வந்து
தரிசனை செய்தவர்க்குத் தாள்கொடுப்பான் — நல்லூர்
அருட்செல்வச் சந்நிதி மாவிட்ட புரம்மண்டூர்
அடைந்தவர் வேண்டுவன அத்தனையுங் கொடுப்பான்.(வ)
✓
கொலுவா யிருந்தாராம் — முருகன்
கூடிய கற்புமணம் களவுமணம்
பொலிவா யிருந்தாராம் — என்றும்
பூரண பிரமச் சாரியவரே.
✓
இச்சை கிரியைஞானம் — இவற்றை
இருகன்னி வேலெனத் தாங்கினரே
இச்சரிதை மெய்ப்பொருளை — உணர
எம்பெரு மான்அருள் வேண்டுமப்பா.