முருகன் App
ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம்
சீ. விநாசித்தம்பி புலவர்
முருகன் வேங்கைமரமாதல்18 / 55
1வாழ்த்து2நாட்டுச் சிறப்பு3நம்பிராசன் அரசியல்4நம்பி வரம் வேண்டல்5திருமால் சிவமுனியாகவும் திருமகள் மானாகவும் உருவெடுத்தல்6திருமால் புத்திரிகளில் சுந்தரவல்லி மான்வயிற்றில் கர்ப்பமாதல்7வள்ளி பிறத்தல்8நம்பிராசன் வருகை9நம்பிராசன் வள்ளிக் குழந்தையைக் கண்டெடுத்தல்10வள்ளி புனங்காத்தல்11முருகன் திருத்தணிகை வருதல்12பஜனை13தினைப்புனத்து-நாரதர் வருகை14முருகனிடம் நாரதர் வருகை15முருகன் தினைப்புனம் வருதல்16வள்ளியின்முன் வேடன்17வள்ளியை முருகன் மன்றாடுதல்18முருகன் வேங்கைமரமாதல்19வேங்கை நீங்கி வேடுவனாகிறான்20வேடர் வருகை21முருகன் கிழவனாகிறான்22முருகன்—நம்பிக்கு திருநீறு கொடுத்தல்23கிழவரும் வள்ளியும்24பஜனை25வள்ளி அமுது கொடுத்தல்26வள்ளி—திருச்சுனை காட்டல்27கணபதி வருதல்28வள்ளிக்கு உபதேசம்29முருகன் காட்சி30முருகன் விட்டகல, வள்ளி தினைப்புனம் போகிறாள்31பாங்கிக்கு வள்ளி கூறுவது32முருகன் வினவுதல்33முருகன் பாங்கியைக் கேட்கிறார்34மடலேறுவேன் என்கிறார்35பாங்கி வள்ளியைக் கொணர்தல்36வள்ளி மனம் வருந்தல்37முருகா....உனக்கு38வள்ளி சிற்றூர் சேர்ந்தாள்39வள்ளியின் நிலை40வள்ளியைக் கொணர்தல்41வேடர் வள்ளியைத் தேடுதல்42வேடர் வருவதைக் கண்ட வள்ளி பயப்படுதல்43வேடுவர் மடிதல்44நாரதர் வருகை45நாரதர் தோத்திரம்46வள்ளியம்மையார், வேடரை எழுப்புதல்47முருகனும் வள்ளியும் சிற்றூரில்48நாரதர் வேதவிதி செய்தனர்49திருமண வாழ்த்து50முருகன் அருள்புரிதல்51திருத்தணிகைச் சிறப்பு52வேறு53தெய்வ குஞ்சரி வள்ளிநாயகன் திருப்பொன்னூஞ்சலில்54பயன்55மங்களம்
ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம் · சீ. விநாசித்தம்பி புலவர்

முருகன் வேங்கைமரமாதல்

✓
இராகம்: மோகனம் தாளம்: ஆதி
கொண்டுவந்த வேளையதில்
குமரனென்ற வேடுவனார்
குளிர்வேங்கை மரமாகிக்
குமரிக்கு நிழலானார்
கண்டு திகைத்தார்கள்
கானத்து வேடரெல்லாம்
கத்திவாள் கோடரியைக்
கையிலே ஓங்கிவந்து
பல்லவி✓
தறிப் போமே கிளை முறிப் போமே - நாம்
தங்கும் மூலமதை யறுப் போமே. (த)
அனுபல்லவி✓
குறிப் பாலே கணை தொடுப் போமே - வளர்
கொடிய வேங்கையிதை முடிப் போமே. (த)
சரணம்✓
முன்பு நில்லாத மரம் - இதன்
முதன்மை எம்மாத் திரம் - உயர்
அன்பு போன்ற பெருநிழல் - எமக்(கு)
அடுத்திடாத பெரும் விழல் - விரைந்து (த)
✓
மாயமா வேங்கைதனை
வனவேடர் சுற்றிவர
“வந்தவகை நானறியேன்
மாண்பின் திறமறியேன்
தாயாகித் தந்தையாய்த்
தானாகி நின்ற” தெனத்
தந்தைமுகம் பார்த்துச்
சாற்றினாள் வள்ளிமணி.
✓
வள்ளிமொழி கேட்டு
மகிழ்நம்பி ராசனவன்
“மன்னிழலாய் நிற்குமிதை
வருந்தத் தறியாதீர்
புள்ளிமயில் வாகனனின்
பொன்னருளால் வந்த”தெனப்
பொங்கித் தறிக்கவந்த
புளினரைத் தாந்தடுத்தான்.
✓
ஆங்கது காலை தன்னில் அடிமுதல் மறைக ளாக
ஓங்கிய நடுவ ணெல்லாம் உயர்சிவ நூல தாக
பாங்கமர் கவடு முற்றும் பலகலை யாகத் தானோர்
வேங்கையின் உருவ மாகி வேற்படை வீரன் நின்றான்.
— கந்தபுராணம்
✓
“அம்மைவள்ளி நாயகியே அஞ்சாதே இம்மரத்தின்
அருந்துணையில் வாழ்க”வென அகன்றான் திருநம்பி
✓
செம்மைமறை அடிமரமாய்ச் சிவாகமம் நடுமரமாய்
செப்புகலை கிளைபலவாய்த் திகழ்வேங்கை வடிவைவிட்டு.