முருகன் App
ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம்
சீ. விநாசித்தம்பி புலவர்
வள்ளியின் நிலை39 / 55
1வாழ்த்து2நாட்டுச் சிறப்பு3நம்பிராசன் அரசியல்4நம்பி வரம் வேண்டல்5திருமால் சிவமுனியாகவும் திருமகள் மானாகவும் உருவெடுத்தல்6திருமால் புத்திரிகளில் சுந்தரவல்லி மான்வயிற்றில் கர்ப்பமாதல்7வள்ளி பிறத்தல்8நம்பிராசன் வருகை9நம்பிராசன் வள்ளிக் குழந்தையைக் கண்டெடுத்தல்10வள்ளி புனங்காத்தல்11முருகன் திருத்தணிகை வருதல்12பஜனை13தினைப்புனத்து-நாரதர் வருகை14முருகனிடம் நாரதர் வருகை15முருகன் தினைப்புனம் வருதல்16வள்ளியின்முன் வேடன்17வள்ளியை முருகன் மன்றாடுதல்18முருகன் வேங்கைமரமாதல்19வேங்கை நீங்கி வேடுவனாகிறான்20வேடர் வருகை21முருகன் கிழவனாகிறான்22முருகன்—நம்பிக்கு திருநீறு கொடுத்தல்23கிழவரும் வள்ளியும்24பஜனை25வள்ளி அமுது கொடுத்தல்26வள்ளி—திருச்சுனை காட்டல்27கணபதி வருதல்28வள்ளிக்கு உபதேசம்29முருகன் காட்சி30முருகன் விட்டகல, வள்ளி தினைப்புனம் போகிறாள்31பாங்கிக்கு வள்ளி கூறுவது32முருகன் வினவுதல்33முருகன் பாங்கியைக் கேட்கிறார்34மடலேறுவேன் என்கிறார்35பாங்கி வள்ளியைக் கொணர்தல்36வள்ளி மனம் வருந்தல்37முருகா....உனக்கு38வள்ளி சிற்றூர் சேர்ந்தாள்39வள்ளியின் நிலை40வள்ளியைக் கொணர்தல்41வேடர் வள்ளியைத் தேடுதல்42வேடர் வருவதைக் கண்ட வள்ளி பயப்படுதல்43வேடுவர் மடிதல்44நாரதர் வருகை45நாரதர் தோத்திரம்46வள்ளியம்மையார், வேடரை எழுப்புதல்47முருகனும் வள்ளியும் சிற்றூரில்48நாரதர் வேதவிதி செய்தனர்49திருமண வாழ்த்து50முருகன் அருள்புரிதல்51திருத்தணிகைச் சிறப்பு52வேறு53தெய்வ குஞ்சரி வள்ளிநாயகன் திருப்பொன்னூஞ்சலில்54பயன்55மங்களம்
ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம் · சீ. விநாசித்தம்பி புலவர்

வள்ளியின் நிலை

✓
குணம்மாறி நிலைமாறிக்
குமாரி யிருக்கக்கண்டு
குலதெய்வ முருகனையே
குறித்துவெறி யாட்டயர்ந்தார்
கணமேனும் கண்ணுறக்கம்
கற்பரசி கொள்ளவில்லை
கானவள்ளி நாயகியார்!
கந்தன் நினைவாலே.
✓
விண்ணுறங்கும் மண்ணுறங்கும் மற்றுளவெ லாமுறங்கும்
கண்ணுறங்கேன் என்தலைவர் காதலாற் பைங்கிளியே.
— தாயுமானவர்
✓
தண்ணென் கதிர்மதியும் தபனனும் ஞாலமிதில்
நண்ண மறந்தாலும் நான்மறவேன் நாயகனை.
✓
இராகம்: ஆகிரி தாளம்: ஆதி
நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் டதனாலே
மால்கொண்ட பேதைக்குன், மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்கும் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளானே
நானென்று மார்தட்டும் பெருமாளே.
— திருப்புகழ்
✓
என்றிவ் விதமாக
எல்லாரும் கண்ணுறங்க
இமையா திருக்கின்றார்
எங்கள் பெருமாட்டி
ஒன்று பலவாக
உருவெடுக்கும் நம்பெருமான்
ஊரான சிற்றூரில்
உற்றவள்ளி வாழுகிற
✓
அக்குடிசைப் பக்கலிலே
அடரிருளில் வந்துநின்றார்
ஆறுமுகன் நிற்பதனை
அறிந்தாள் பெரும்பாங்கி
''பக்குவமொன் றுணராத
படர்வேடர் மத்தியிலே
பண்புடையீர் இங்குவந்து
பார்த்திருக்கக் கூடாதே.
✓
''ஞானமே யில்லாமல்
நாண்பூட்டும் வேடுவர்கள்
நாடியுமைக் கண்டுவிட்டால்
நமனுலகம் சேர்த்திடுவார்
வானமுத லைம்பூத
வடிவான மாப்பிளையே
வருவேன் இமைப்போதில்
வாய்வயிறு பாராமல்.
✓
''சித்தங் கலங்கித்
திகைத்திருக்கும் சுந்தரியைச்
சேர்த்திங்கு நான்வைப்பேன்
சேமமாய் வாழ்ந்திடுமின்''
இத்திற மாய்க்கூறி,
இசைந்த துணைப்பாங்கி
இருண்ட நடுநிசியில்
எடுத்தவடி கேட்காமல்.