முருகன் App
ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம்
சீ. விநாசித்தம்பி புலவர்
வள்ளி—திருச்சுனை காட்டல்26 / 55
1வாழ்த்து2நாட்டுச் சிறப்பு3நம்பிராசன் அரசியல்4நம்பி வரம் வேண்டல்5திருமால் சிவமுனியாகவும் திருமகள் மானாகவும் உருவெடுத்தல்6திருமால் புத்திரிகளில் சுந்தரவல்லி மான்வயிற்றில் கர்ப்பமாதல்7வள்ளி பிறத்தல்8நம்பிராசன் வருகை9நம்பிராசன் வள்ளிக் குழந்தையைக் கண்டெடுத்தல்10வள்ளி புனங்காத்தல்11முருகன் திருத்தணிகை வருதல்12பஜனை13தினைப்புனத்து-நாரதர் வருகை14முருகனிடம் நாரதர் வருகை15முருகன் தினைப்புனம் வருதல்16வள்ளியின்முன் வேடன்17வள்ளியை முருகன் மன்றாடுதல்18முருகன் வேங்கைமரமாதல்19வேங்கை நீங்கி வேடுவனாகிறான்20வேடர் வருகை21முருகன் கிழவனாகிறான்22முருகன்—நம்பிக்கு திருநீறு கொடுத்தல்23கிழவரும் வள்ளியும்24பஜனை25வள்ளி அமுது கொடுத்தல்26வள்ளி—திருச்சுனை காட்டல்27கணபதி வருதல்28வள்ளிக்கு உபதேசம்29முருகன் காட்சி30முருகன் விட்டகல, வள்ளி தினைப்புனம் போகிறாள்31பாங்கிக்கு வள்ளி கூறுவது32முருகன் வினவுதல்33முருகன் பாங்கியைக் கேட்கிறார்34மடலேறுவேன் என்கிறார்35பாங்கி வள்ளியைக் கொணர்தல்36வள்ளி மனம் வருந்தல்37முருகா....உனக்கு38வள்ளி சிற்றூர் சேர்ந்தாள்39வள்ளியின் நிலை40வள்ளியைக் கொணர்தல்41வேடர் வள்ளியைத் தேடுதல்42வேடர் வருவதைக் கண்ட வள்ளி பயப்படுதல்43வேடுவர் மடிதல்44நாரதர் வருகை45நாரதர் தோத்திரம்46வள்ளியம்மையார், வேடரை எழுப்புதல்47முருகனும் வள்ளியும் சிற்றூரில்48நாரதர் வேதவிதி செய்தனர்49திருமண வாழ்த்து50முருகன் அருள்புரிதல்51திருத்தணிகைச் சிறப்பு52வேறு53தெய்வ குஞ்சரி வள்ளிநாயகன் திருப்பொன்னூஞ்சலில்54பயன்55மங்களம்
ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம் · சீ. விநாசித்தம்பி புலவர்

வள்ளி—திருச்சுனை காட்டல்

✓
“செல்லும் வழியறியேன்
திருச்சுனையின் திசையறியேன்
தேசத்துக் கோபுதியேன்
செல்வியே நீவந்து
நல்லவழி காட்”டென்றார்
ஞானப் பெருங்கிழவர்
நம்வள்ளி நாயகியும்
நடந்துவழி காட்டுகிறாள்.
ஆனந்தக்களிப்பு—(நடை)✓
சங்கர சங்கர சம்போ - சிவ
சங்கர சங்கர சங்கர சம்போ.
✓
ஏறாத மேடெலாம் ஏறி - அவர்
இருவோரும் மாயந்த ஏழுமலை ஏறி
ஊறாத அமிழ்தூறும் சுனையில் - மலை
உச்சியின் மேவிய ஓங்காரச் சுனையில் (சங்)
✓
சாற்றுமா றாதாரத் தப்பால்—நின்ற
சகஸ்ரார மென்கின்ற ஏழா மிடத்தில்
ஊற்றுஞா னங்கூடு மாபோல் - அப்பன்
உயரருவி நீர்தன்னை உவப்பாக உண்டார். (சங்)
“தாகத்தைத் தீர்த்தவளே மோகத்தைத் தீர்”✓
“தாகமும் தீர்த்தனை பெண்ணே - என்றன்
மோகமுந் தீர்வழி செய்குவாய் பெண்ணே
ஏகமாய் நின்றகுரு நாதன்'' — புனத்
திவ்வாறு கேட்கவே ஏங்கினாள் வள்ளி. (சங்)
✓
சினவாத வள்ளியும் சினந்தாள் — இந்தச்
சிவவேட தாரிக்கிவ் வெண்ணமுந் தகுமோ
மனமாறும் பித்தரைப் போலே — இங்கு
வந்துவசை பாடுகிற மாதவத் தோரே. (சங்)
✓
நத்துப் புரைமுடியீர் நல்லுணர்வு சற்றுமிலீர்
எத்துக்கு மூத்தீர் இழிகுலத்தேன் தன்னைவெஃகிப்
பித்துக்கொண் டார்போல் பிதற்றுகிறீர் இவ்வேடர்
கொத்துக்கெல் லாமோர் கொடும்பழியைச் செய்தீரே.
— கந்தபுராணம்
✓
''நரைதிரை வந்துற்ற போது — அறிவு
நரையாமல் உரையாடும் பெரியவரே போம்போம்''
விரைவான கடுவார்த்தை பேசி — வள்ளி
விளைவான புனமீது வேகமாய்ப் போனாள். (சங்)
✓
''நில்லுநில் நில்''என்று கிழவர் — ''உனது
நிலைமையறி யாதிந்த நெறிமொழி புகன்றேன்
சொல்லுக்குக் கோபிக்க லாமா — உனது
துணையன்றி நானிங்கே அடிவைக்க லாமா. (சங்)
✓
''கைப்பிடித் தென்னைவழி காட்டு'' — என்று
கந்தனும் சல்லாபக் கதைசொல்லிச் சொல்லி
ஒப்பமிகு மோங்கார வடிவா — என்று
உற்றதுணை யானதன தண்ணனை நினைத்தார்.(சங்)
பல்லவி✓
இராகம்: பூபாளம் தாளம்: ஆதி
வரவேண்டும் வரவேண்டும் கணநாதனே — நீ
வரமெல்லாந் தரவேண்டும் கணநாதனே.
அனுபல்லவி✓
பிரணவ நாயக செல்வவி நாயகப்
பெருமா னேகஜ முகராஜா — அருள் (வர)
சரணம்✓
நானென தென்கிற தன்மை யடங்க
நண்ணிய ஐம்புல வேட்கை யொடுங்க
ஞானம னாலய மேவி யிருந்து
நற்பதந் தருவாய் கருணை புரிந்து. (வர)