முருகன் App
ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம்
சீ. விநாசித்தம்பி புலவர்
வள்ளி அமுது கொடுத்தல்25 / 55
1வாழ்த்து2நாட்டுச் சிறப்பு3நம்பிராசன் அரசியல்4நம்பி வரம் வேண்டல்5திருமால் சிவமுனியாகவும் திருமகள் மானாகவும் உருவெடுத்தல்6திருமால் புத்திரிகளில் சுந்தரவல்லி மான்வயிற்றில் கர்ப்பமாதல்7வள்ளி பிறத்தல்8நம்பிராசன் வருகை9நம்பிராசன் வள்ளிக் குழந்தையைக் கண்டெடுத்தல்10வள்ளி புனங்காத்தல்11முருகன் திருத்தணிகை வருதல்12பஜனை13தினைப்புனத்து-நாரதர் வருகை14முருகனிடம் நாரதர் வருகை15முருகன் தினைப்புனம் வருதல்16வள்ளியின்முன் வேடன்17வள்ளியை முருகன் மன்றாடுதல்18முருகன் வேங்கைமரமாதல்19வேங்கை நீங்கி வேடுவனாகிறான்20வேடர் வருகை21முருகன் கிழவனாகிறான்22முருகன்—நம்பிக்கு திருநீறு கொடுத்தல்23கிழவரும் வள்ளியும்24பஜனை25வள்ளி அமுது கொடுத்தல்26வள்ளி—திருச்சுனை காட்டல்27கணபதி வருதல்28வள்ளிக்கு உபதேசம்29முருகன் காட்சி30முருகன் விட்டகல, வள்ளி தினைப்புனம் போகிறாள்31பாங்கிக்கு வள்ளி கூறுவது32முருகன் வினவுதல்33முருகன் பாங்கியைக் கேட்கிறார்34மடலேறுவேன் என்கிறார்35பாங்கி வள்ளியைக் கொணர்தல்36வள்ளி மனம் வருந்தல்37முருகா....உனக்கு38வள்ளி சிற்றூர் சேர்ந்தாள்39வள்ளியின் நிலை40வள்ளியைக் கொணர்தல்41வேடர் வள்ளியைத் தேடுதல்42வேடர் வருவதைக் கண்ட வள்ளி பயப்படுதல்43வேடுவர் மடிதல்44நாரதர் வருகை45நாரதர் தோத்திரம்46வள்ளியம்மையார், வேடரை எழுப்புதல்47முருகனும் வள்ளியும் சிற்றூரில்48நாரதர் வேதவிதி செய்தனர்49திருமண வாழ்த்து50முருகன் அருள்புரிதல்51திருத்தணிகைச் சிறப்பு52வேறு53தெய்வ குஞ்சரி வள்ளிநாயகன் திருப்பொன்னூஞ்சலில்54பயன்55மங்களம்
ஸ்ரீ வள்ளி நாயகன் நாடகக் காவியம் · சீ. விநாசித்தம்பி புலவர்

வள்ளி அமுது கொடுத்தல்

✓
“மாதவத்தோர் போற்றும்
மறைகிழவ ரேஇந்த
வனவேடர் உண்பதையே
வழங்குவே” னென்றுரைத்துப்
பாதத்தைப் பூசைசெய்து
பண்பான வள்ளியம்மை
பயில்தேன் தினைமாவும்
பழங்கிழங்கும் தான்கொடுக்க,
✓
வாங்கியுண்டார் அப்பெருமான்
வள்ளியது கையாலே
“மாவும் பசுந்தேனும்
மகிழ்ந்துண்டேன் பெண்மயிலே
தாங்கரிய தண்ணீரின்
தாகத்தால் வாடுகிறேன்
தாகத்தைத் தீர்த்துவிடு
தையலே காப்பாற்று.”
சந்தம்✓
சிந்தை மகிழ்ந்து நயந்தரு செந்தினை
தின்று சுகம்பெறு சிவவேடர்
தந்த நலந்திக ழுந்தினை தொண்டையில்
வந்து விழுங்கிட முடியாதே
நொந்தது மந்திர சுந்தரி யேபுனல்
தந்து சுரந்திடு வழிகாட்டென்
றந்த வனந்தனி லிந்திர னந்த்ரர்
புந்தி மலங்கிட மொழிவானே.
✓
தொண்டைவிக்கிக் கொண்டதெனச்
சுழலவி ழியெறிந்தார்
சுந்தரியும் மெய்ந்நடுங்கித்
தூயவரை நன்கணைத்தாள்,
“அண்டையிலே ஏழுமலைக்
கப்பாற்க னையுமுண்டு
அங்குசென்றால் தாகமெலாம்
அடங்கு”மென வேமொழிந்தாள்.